மரண அறிவித்தல்
தோற்றம்: 01.11.1953 மறைவு: 26.06.2012
அம்மன் கோவிலடி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நா. கலாராணி அவர்கள் 26.06.2012 அன்று காலமானார்.
அன்னார், காலம் சென்றவர்களான இ.நடனசிகாமணி, இரத்தினேஸ்வரியின் மூத்த புதல்வியும்,
காலம் சென்ற ஏகாம்பிரநாதர் தம்பதியரின் மருமகளும்,
ஏ. நாராயணமூர்த்தியின் மனைவியும்,
வீரசுந்தரி மற்றும் ஞானகுருவின் தாயாரும்,
செந்தூர் குமரனின் மாமியும்,
சந்தோஷ், அபினாஷ் ஆகியோரின் பேத்தியும்,
காசிலிங்கம், நடராஜலிங்கம், காலம் சென்ற பாக்கியலிங்கம், செல்வராணி, சந்திரலிங்கம்,சண்முகலிங்கம், விஜயலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்கு 27.06.2012 மாலை 4 மணிக்கு வல்வெட்டித்துரை ஊறணி மாயனத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்:
வ.இ.மணி அண்ணா குடும்பத்தார்.
தொடர்புகளுக்கு:
விஜயலிங்கம் — பிரித்தானியா தொலைபேசி: +44 208 288 0516