ஜூலை 2012


Torontoவில் வசிக்கும் கார்த்திக் லாவன்யா

தம்பதிகளின் செல்வப்புதல்வன் வினித்

இன்று தனது பிறந்த நாளை

தங்கை ஸ்ரேயா, அஷானி ஆகியோருடன்  கொண்டாடுகின்றார்.

இவரை உற்றார் உறவினர்கள் அனைவரும்,

சகல செளபாக்கியங்களும் பெற்று

நீடூழி காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்!

 

உலகில் உள்ள பல நாட்டு மக்கள் இந்த கனடாவிற்கு வந்து, ஒன்றாக இனிதே வாழ்கின்றார்கள்.  அனைத்து உரிமை களையும்,  கெளரவத்தையும், வசதிகளையும்   தாம்  பிறந்த  நாட்டை  விட அதிகமாக  கொடுத்த கனடாவிற்கு இன்று பிறந்த நாள்!

உண்மையில் கனடாத் தாய் தமது பிள்ளைகள் போல், அனைத்து வர்க்க மக்களையும் அரவணைத்து, அனைவருக்கும் சம உரிமை கொடுத்து நடத்தும் செயல்  உலகில் வேறு எந்த நாட்டிலும் பார்க்கமுடியாத விடயம்!

இன்னாளில் நாம் அனைவரும் எம் வீட்டின் முன்புறமும், வாகனங்களிலும் கனடிய கொடியை பறக்கவிட்டு எம் நன்றியையும், மரியாதையையும்  செலுத்தி கொண்டாட கடமைப் பட்டுள்ளோம்.

கனடா நாள் (Canada Day) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும். 1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் “பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்” கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து பெயர் மாற்றப்பட்டது. கனடா நாள் கனடா முழுவதிலும், மற்றும் உலக நாடுகளில் உள்ள கனடியர்களாலும் கொண்டாடப்படுகிறது.

 சரி கீழே ஒரு அசத்தலான 3D படம் உள்ளது. உங்கள் கண்களை ஒன்றோடு ஒன்று செருகிப்பார்த்தால் தெரியும். முயற்சி செய்யுங்கள்!

கீழே, முன்னர் கனடா நாளிற்காக பதியப்பட்ட பகுதி உள்ளது

காகங்களை கிளிகளாக மாற்றிய கனடா !