நேயர் சாமிளா சுரேஸ்குமார் அவர்கள் விரும்பிக்கேட்ட பாடல்…

பாடல்: மதுரா நகரில் தமிழ்
திரைப் படம்: பார் மகளே பார்
பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ், பி.சுசீலா மற்றும் குழுவினர்
நடிப்பு: முத்துராமன் – விஜயகுமாரி

மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்
மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்
கவி மன்னனின் காவியம் பொங்கும்
அதில் காதலர் உள்ளம் அடங்கும்

மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்

மிதிலா நகரில் ஒரு மன்றம்
பொன் மேனியள் ஜானகி தங்கம்
மணி மாடத்திலே வந்து தோன்றும்
மனம் மன்னவன் எண்ணத்தில் நீந்தும்

ஸ்ரீ ராமனைக் கண்டது மனமே
பெரும் நாணத்தில் ஆழ்ந்தது குணமே
குழுவினர்: லல் லல் லா.. லல் லல் லா…லல் லல் லா..
லா லா லல்லலா லா லல் லல் லா

மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்

குழுவினர்: ஆஆஆஆஆஆஆ

பிருந்தாவனம் என்பது தோட்டம்
அதில் பெண் எனும் பொன் மலர்க் கூட்டம்
வரும் கண்ணனின் மார்பினில் ஆட்டம்
பெரும் காதலிலே களியாட்டம்
எதிர் காலத்தை வென்றவன் கண்ணன்
உயர் காதலிலே அவன் மன்னன்

மதுரா நகரில் தமிழ் சங்கம்
அதில் மங்கல கீதம் முழங்கும்
ஆஆஆஆஅ

அந்தக் காட்சிகள் மாறியதேனோ
நம் காதலை நாம் பெறத் தானொ
அந்த தேவ மகள் இவள் தானோ
மன்னன் திரும்பவும் வந்துவிட்டானோ
நாம் இன்பதில் ஆடிடும் மலர்கள்
நல் இன்னிசை பாடிடும் குயில்கள்
அஹஹா..ஹா..ஹா

மதுரா நகரில் தமிழ் சங்கம்
குழுவினர்: ஆஆஆஆஆஆ
அதில் மங்கல கீதம் முழங்கும்
குழுவினர்: ஆஆஆஆஆஆ