டிசம்பர் 29 கிரிகோரியன் ஆண்டின் 363வது நாளாகும்.  ஆண்டு முடிவிற்கு மேலும் 2 நாட்கள் உள்ளன

 • 1845 – டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.
 • 1891 – தோமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்.
 • 1911 – மங்கோலியா கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது
 • 1930 – அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.
 • 1937 – ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.
 • 1987 – 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.
 • 1989 – ஹொங்கொங் வியட்நாமிய அகதிகளை பலவந்தமாக வெளியேற்றியதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
 • 1993 – உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஹொங்கொங்கில் அமைக்கப்பட்டது.
 • 1997 – ஹொங்கொங்கில் கோழிகளுக்கு தொற்றுநோய் பரவியதை அடுத்து அங்கிருந்த அனைத்து 1.25 மில்லியன் கோழிகளும் கொல்லப்பட்டன.
 • 1998 – கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.

பிறப்புகள்

 • 1937 – மாமூன் அப்துல் கயூம், மாலைதீவுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர்
 • 1942 – ராஜேஷ் கன்னா, இந்தி நடிகர்
 • 1965 – சி. ஜெயசங்கர், ஈழத்து எழுத்தாளர்
 • 1971 – பிறட் ஹொட்ஜ், அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

 • 1924 – கார்ள் ஸ்பிட்டெலெர், நோபல் பரிசு பெற்ற சுவிட்சர்லாந்து எழுத்தாளர் (பி. 1845)
 • 2004 – ஜூலியஸ் அக்செல்ரொட், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1912)

சிறப்பு நாள்

 • சர்வதேச பல்லுயிர் பெருக்க நாள்