டிசம்பர் 30 கிரிகோரியன் ஆண்டின் 364வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 1 நாள் உள்ளது.

  • 1924 – யாழ்ப்பாணம் வாலிபர் சங்க மாநாட்டில் சாதி ஒழிப்புத் தீர்மான்ம் கொண்டுவரப்பட்டது.
  • 1941 – மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து விலகினார்.
  • 1943 – சுபாஷ் சந்திர போஸ் அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலைக் கொடியை ஏற்றினார்.
  • 1949 – இந்தியா சீனாவை அங்கீகரித்தது.
  • 1953 – உலகின் முதலாவது NTSC வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டி $1,175.00 விலைக்கு விற்பனைக்கு விடப்பட்டது.
  • 2006 – முன்னாள் ஈராக் அதிபர் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.
  • 2006 – நடுக்கடலில் ஏற்பட்ட புயலில் 850 பயணிகளுடன் சென்ற செனோபதி நுசந்தாரா என்ற இந்தோனீசியக் கப்பல் கடலில் மூழ்கியது.

பிறப்புகள்

  • 1879 – இரமண மகரிஷி, தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி (இ. 1950)

ரமண மஹரிஷி (டிசம்பர் 30, 1879 – ஏப்ரல் 14, 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ‘ரமண ஆசிரமம்’, உலகப் புகழ் பெற்றதாகும். இன்றளவும், ஆன்ம முன்னேற்றம் பெற, உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பலர் அன்றாடம், ரமணாச்ரமத்தினை நாடி வந்த வண்ணம் உள்ளனர்.

இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கடராமன். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.

ஆன்மீக நாட்டம்

ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பழக்கமும் ஏற்பட்டது. அவரது 17ம் அகவையில் மானா மதுரையிலிருந்த அவருடைய சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம் அவருக்குக் கைகூடிற்று. அவ்வனுபவத்தில் மரணிப்பது எது? உடல் தானே மரணிக்கின்றது. நான் மரணிப்பவன் அல்லன். ஆகவே உண்மையான நான் யார் என விசாரித்து நான் உடலல்லன், ஆன்மா என்ற உண்மையை அறிந்தார். இவ் ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாயிருக்க வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து தெளிந்தார்.

இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந் துறந்துவிட்டு இரயில் ஏறித் திருவண்ணாமலையை வந்தடைந்தார். அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் சிறுபிள்ளைகளின் விஷமச் செய்கைகளினால் அங்கிருந்த பாதள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார். பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலையடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற ஸம்ஸ்க்ருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு ”ரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது. அது வரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர்.

முதுகில் புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அனுமதி அளித்தார். இவர் மறைந்தது 1950ல்

உபதேசங்கள்

ரமணரின் முக்கியமான உபதேசம் ‘நான் யார்’ என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம். உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான ‘நான் யார்?’ என்ற புத்தகம் முதன்மையானதாகும்.

ஆதி சங்கரரின் ஆக்கமான ‘ஆத்ம போதம்’ தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.

ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி – ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்.[1]

ரமண ஆச்ரமம்

பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மஹரிஷி, 1922 ல் அவரது தாயின் மறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார். அங்கு அவரது சீடர்களால் ஆச்ரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே ரமண ஆச்ரமமாகும். இதன் பின்னர் மஹரிஷி சமாதியடையும் வரை அந்த ஆச்ரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை.

தமிழ்ப் படைப்புகள் பட்டியல்

உபதேச உந்தியார்
உள்ளது நாற்பது
உள்ளது நாற்பது அனுபந்தம்
ஏகான்ம பஞ்சகம்
ஆன்ம வித்தை
உபதேசத் தனிப்பாக்கள்
ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை
ஸ்ரீ அருணாசல அஷ்டகம்
நான் யார்?
விவேகசூடாமணி அவதாரிகை
பகவத் கீதா ஸாரம்
குரு வாசகக் கோவை
ஸ்ரீ ரமண நூற்றிரட்டு
ஸ்ரீ ரமணோபதேச நூன்மாலை – விளக்கவுரை

  • 1975 – டைகர் வூட்ஸ், கோல்ஃப் விளையாட்டு வீரர்

இறப்புகள்

  • 1789 – இராயரகுநாத தொண்டைமான், புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் (பி. 1738)
  • 1988 – இசாமு நொகுச்சி, சிற்ப, கட்டடக் கலைஞர் (பி. 1904)
  • 2006 – சதாம் உசேன், முன்னாள் ஈராக் அதிபர் (பி. 1937

சதாம் உசேன் அப்த் அல்-மஜித் அல்-திக்ரிதி
(பிறப்பு: ஏப்ரல் 28, 1937 1, இறப்பு: டிசம்பர் 30, 2006)

முன்னாள் ஈராக் நாட்டின் அதிபராவார். இவர் ஜூலை 16, 1979ல் இருந்து ஏப்ரல் 9 2003 வரை அமெரிக்கா தலைமையிலான ஈராக் படையெடுப்பு வரையில் இவர் அந்நாட்டின் அதிபராக இருந்தார்.

ஈராக்கின் பாத் கட்சியின் முக்கிய நபரான சதாம் 2 1968ல் அக்கட்சி நடத்திய அதிகார கைப்பற்றலில் முக்கியப் பங்கு வகித்தார். தனது நெருங்கிய உறவினரான ஜெனரல் அகமது பாக்கரின் கீழ் துணை அதிபராகப் பணியாற்றிய சதாம், அரசுக்கும் ஆயுதப் படைகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை கடுமையாக அடக்கி ஆண்டு, அரசு இயந்திரத்தின் மீதான தன் கட்டுப்பாட்டை வலுவாக்கிக் கொண்டார்.

அதிபராகப் பொறுப்பு வகித்த சதாம், யதேச்சிகார அரசை (authoritarian government) நடத்தினார். ஈரான்-ஈராக் போர் (1980–1988) மற்றும் பெர்சியக் குடாப் போர் (1991) நடந்ந காலங்களிலும் அதிகாரத்தை தன் கைப்படியில் வைத்திருந்தார். இக்காலகட்டங்களில் ஈராக் மக்களின் வாழ்க்கைத் தரம் குறைந்ததோடு அவர்களின் மனித உரிமைகளுக்கும் பங்கம் ஏற்பட்டது. சதாமின் அரசு, விடுதலை அல்லது தன்னாட்சியை வலியுறுத்திய, இனம் அல்லது சமயம் சார் இயக்கங்களை மட்டுப்படுத்தியது.

மேலை நாடுகளிடம், குறிப்பாக ஐக்கிய அமெரிக்க மாநிலங்களிடம், அவர் காட்டிய எதிர்ப்பை மெச்சி, பல அராபிய மக்கள் அவரை ஒரு பிரபலத் தலைவராகக் கருதினாலும், அனைத்துலக சமுதாயத்தினர் பலரும் அவரை சந்தேகக்கண் கொண்டே நோக்கினர். அதுவும் 1991 பெர்சிய குடாப் போருக்கு அடுத்து சில ஈராக்கி குழுக்கள் சதாமின் பாதுக்காப்பு படை குறித்த அச்சத்துடன் வாழ்ந்தனர்.
ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டாளிகள் இணைந்து மேற்கொண்ட 2003 ஈராக் போருக்கு பிறகு சதாமின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. டிசம்பர் 13, 2003 அன்று திக்ரித்துக்கு வெளியே உள்ள பாதாள அறை ஒன்றில் ஒளிந்திருந்த சதாமை அமெரிக்கப் படையினர் கைது செய்தனர். பல மனித உரிமை மீறல் வழக்குகள் தொடர்பாக இடைக்கால ஈராக் அரசு அமைத்திருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சதாம் விசாரிக்கப்பட்டார். நவம்பர் 5, 2006 இல் அவருக்கு தூக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

டிசம்பர் 26, 2006 இல் சதாமின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டு மரணதண்டனை உறுதி செய்யப்பட்டது. டிசம்பர் 30, 2006 உள்ளூர் நேரம் 06:05 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார்.

சிறப்பு நாள்

  • பிலிப்பீன்ஸ் – ரிசால் நாள் (1896)