ஜனவரி 17 கிரிகோரியன் ஆண்டின் 17வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 348 நாட்கள் உள்ளன.

 • 1377 – பாப்பாண்டவர் பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை ரோமுக்கு மாற்றினார்.
 • 1773 – கப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக் வட்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியன் ஆனான்.
 • 1946 – ஐநா பாதுகாப்பு அவை தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது.
 • 1991 – வளைகுடாப் போர் ஆரம்பித்தது.
 • 1995 – ஜப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6,434 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1998 – ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளின்டன் தன்னைப் பாலியல் வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.

பிறப்புகள்

 • 1706 – பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் (இ. 1790)
 • 1911 – ஜோர்ஜ் ஸ்டிக்லர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1991)
 • 1917 – எம். ஜி. இராமச்சந்திரன், தமிழ்நாட்டின் முதலமைச்சர் (இ. 1987)
 • 1942 – முகமது அலி, அமெரிக்கக் குத்துச் சண்டை வீரர்
 • 1977 – என். சொக்கன், தமிழக எழுத்தாளர்
 • 1982 – டுவேன் வேட், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

 • 1961 – பாட்ரிஸ் லுமும்பா, கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் (பி. 1925)
 • 2002 – கமீலோ ஜோஸ் சேலா, நோபல் பரிசு பெற்ற ஸ்பானிய எழுத்தாளர் (பி. 1916)
 • 2007 – ஆர்ட் புச்வால்ட், அமெரிக்க நகைச்சுவையாளர் (பி. 1925)
 • 2008 – பாபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க ஆட்டக்காரர் (பி. 1943)
 • 2009 – கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (பி. 1927)