பிரேசில் ரயில் நிலையம் ஒன்றில் இசை எழுப்பும் பியானோ வடிவிலான படிக்கட்டு பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பிரேசில் நாட்டின் சவோ பாவ்லோ நகரில் இந்த புதுமையான படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள 34 படிகளில் பியானோ இசையை எழுப்பும் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவற்றில் ஏறி இறங்கும்போது அவற்றுக்கு ஏற்ப இசை எழுப்பி பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறது .