புளூடூத் என்ற சொல்லானது பழைய ஜேர்மெனிய மொழியிலான  “ப்ளாடோன்” (Blátönn) அல்லது தானிய மொழியிலான”ப்ளாட்டேண்ட்” (Blåtand) ஆகிய சொற்களின் ஆங்கில வடிவமாகும்.

இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த டென்மார்க்கின் முதலாம் ஹரால்ட் மன்னன் சிங்க் ஹெசால்ட் ப்ளாடண்ட் என்பவனின் சிறப்புப் பெயராகும். இந்த அரசனுக்கு புளூபெரீ பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதைச் சாப்பிட்டு அவனது பற்கள் எல்லாம் நீலக்கறை படிந்திருந்தது. இதனால் அம்மன்னனை “புளு டூத்” என்று அழைக்கத் தொடங்கினர். அம்மன்னர் வேறுபட்ட டானிஷ் பழங்குடியினரை ஒன்றிணைத்து, அங்கிருந்த பல குறுநிலங்களை எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து ஒரே பேரரசாகக் கட்டமைத்தார். புளூடூத் தொழில்நுட்பமும் அவரைப் போலவே தகவல்தொடர்பு நெறிமுறைகளை ஒரே தரநிலைக்குக் கொண்டு வரும் செயலைச் செய்கிறது.

 இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகளின் (டென் மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து) விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர். இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில், தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு புளுடூத் என்று பெயரிட்டனர். மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஜெர்மானிய எழுத்துகளான  H-rune.gif  (Hagall) மற்றும்  Runic letter berkanan.svg (Berkanan) ஆகியவை இணைந்த இடாய்ச்சு இணைப்பெழுத்துக்களின் சேர்க்கையே புளுடூத் சின்னம் ஆகும்