பெப்ரவரி 24 கிரிகோரியன் ஆண்டின் 55 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310  நாட்கள் உள்ளன

 • 1582 – கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் 13வது கிரெகரியினால் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
 • 1739 – இந்தியாவின் முகலாய மன்னன் முகமது ஷாவின் படையை ஈரான் மன்னன் நாதிர் ஷாவின் படை முறியடித்தது.
 • 1918 – எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.
 • 1920 – நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
 • 1942 – வொயிஸ் ஒஃப் அமெரிக்கா ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
 • 1945 – எகிப்தியப் பிரதமர் அகமது மாஹிர் பாஷா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.
 • 1969 – மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.

பிறப்புகள்

 • 1886 – ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கியவர்
 • 1948 – ஜெ. ஜெயலலிதா, தமிழ்நாட்டு முதலமைச்சர்
 • 1955 – ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்

இறப்புகள்

 • 1986 – ருக்மிணி தேவி அருண்டேல், நடனக் கலைஞர், கலாக்ஷேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904)

சிறப்பு நாள்

 • எஸ்தோனியா – விடுதலை நாள் (1918)