இன்று கனடாவில்  Target என்ற பெயரில் ஒரு வியாபார நிறுவனமானது தனது கிளையொன்றை முதன்முதலாக Guelphல் திறக்கின்றது.  இந்த நிறுவனமானது நீண்டகாலமாக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட தாபனம் எனக் கூறப்படுகின்றது.

Target

இந்தத் தாபனத்தில் அமெரிக்க எல்லைகளைக் கடக்காமல், கனடிய மக்கள் தமது விருப்பதத்திற்கு ஏற்ற பொருட்களைக் கொள்வனவு செய்யலாம் என எதிர்பாரக்கப்படுகின்றது. ஆனால் விலையைப் பொறுத்தமட்டில் அமெரிக்காவில் உள்ளது போல இருக்கும் என ஒப்பிடமுடியாது எனவும் கருதப்படுகின்றது.

நேற்று ஒன்டாரியோவில் முதன்முதலாக இந்த வியாபாரத் தாபனத்தின் முதற் கிளையானது குவல்வ் (Guelph) என்னும் இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அந்த நிறுவனம் திறந்து வைக்கப்படுவதற்கு முன்னதாகவே   கிட்டத்தட்ட 100 பேர் வரை காவல் நின்றதாகத் தெரியவந்திருக்கிறது. மிக விரைவில் இன்னும் இரு கிளைகள் ஒன்றாரியோவில் திறக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிறுவனத்துக்கான கனடாவின் தலைவர் ரொனி விஜ்ஜர் என்பவர் இன்னும் 21 கிளைகள் ஒன்றாரியோவில் இம்மாத முடிவிற்குள் திறக்கவிருப்பதாகக் கூறினார். ஆனால் அவைகள் திறக்கப்படுகின்ற திகதிகளை அவர் அறிவிக்கவில்லை.

அத்துடன் கனடா முழுவதிலும் இந்த வியாபார நிறுவனமானது 125 தொடக்கம் 135 கிளைகள் வரை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகமான கிளைகள் செலர்ஸ் நிறுவனம் இருந்த அதே இடங்களில் திறக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.