107314

திருமதி சுந்தரமூர்த்தி தெய்வானைப்பிள்ளை
தோற்றம் : 23 மே 1925 — மறைவு : 27 மே 2013

வல்வெட்டித்துறை வாடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சிராப்பள்ளி சுந்தர்நகரை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரமூர்த்தி தெய்வானைப்பிள்ளை அவர்கள் 27.05.2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுச்சாமி சோதிமுத்து தம்பதிகளின் அன்புமகளும், காலஞ்சென்ற செல்லச்சாமி நடனசுந்தரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி அவர்களின் பாசமிகு மனைவியும்,

இராஜரெட்ணம், இராமச்சந்திரன்(பூமாலை), காலஞ்சென்ற இராஜலெட்சுமி, இராஜகுமார், இராஜசிங்கம், காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, இராஜவேல் ஆகியேரின் அன்புத் தாயாரும்,

மனோரஞ்சிதம், மஞ்சுளாதேவி, ருக்குமணிதேவி விஜயகுமார், பத்மினி, செல்வமதி, வனசிங்கம், கௌசல்யாதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-05-2013 வியாழக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் இந்தியா திருச்சியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
இராஜம்மான் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447983600913
ஜீவன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447424668572
பூமாலை — இந்தியா தொலைபேசி: +914312455754 செல்லிடப்பேசி: +919788214261