Note:

சுவையானது சத்தானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடியதும் கால்சியம், மினரல், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின், பாஸ்பரஸ், இரும்பு போன்ற பலசத்துகள் அடங்கியதும் வித்தியாசமானதும் ஆகும். இதனை ஓட்டுமா எனவும் அழைப்பார்கள். எச்சரிக்கை – இருதயநோயாளர், சர்க்கரைநோயாளர் வைத்தியரின் ஆலோசனையை கேட்ட பின்பு சாப்பிடலாம். கவனிக்கவேண்டியவிசயங்கள் – முட்டைமாவை(2 – 8)கிழமைவரை வைத்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

  • அரிசிமா (வறுத்தது) – ஒரு சுண்டு (நிரப்பி)(399 கிராம்)
  • முட்டை – 2
  • சீனி (சர்க்கரை) – அரை சுண்டு (199 கிராம்)
  • நல்லெண்ணெய் – அரை சில்வர் டம்ளர்
  • வெனிலா – 2 மேசைக்கரண்டி
  • உளுத்தம்மா – கால் சுண்டு (99 கிராம்)
  • ஒரு வாயகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
  • உடைத்து ஊற்றிய முட்டைகளின் மேல் சீனியை(சர்க்கரையை) போடவும்.
  • பின்பு இவையிரண்டையும் நன்றாக அடித்து கரைக்கவும்.
  • (சீனி(சர்க்கரை) முழுவதும் நன்றாக கரைய வேண்டும் (எக் பீட்டரினால் அடிக்கவும்).
  • சீனி(சர்க்கரை) முட்டையுடன் சேர்ந்து நன்றாக கரைந்த பின்பு அதனுடன் வெனிலாவையும் சேர்த்து அடிக்கவும்.
  • அதன் பின்பு அடித்து வைத்து உள்ள இக்கலவையுடன் வறுத்த அரிசிமா, உளுத்தம்மா ஆகியவற்றை சிறிது சிறிதாக தூவி எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
  • எல்லாம் கலந்த பின்பு அதனுடன் நல்லெண்ணெயை விட்டு நன்றாக குழைத்து கொள்ளவும்.
  • குழைத்த பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் விடவும்.
  • நல்லெண்ணெய் விட்டபின்பு தாட்சியை(வாணலியை) அடுப்பிலிருந்து எடுத்து நல்லெண்ணெய் தாட்சியின்(வாணலியின்)எல்லா பக்கமும்படும்படி நன்றாக சுற்றவும்(அப்பத்திற்கு சுற்றுவது போல).
  • பின்பு தாட்சியை (வாணலியை) அடுப்பில் வைத்து அதில் குழைத்து வைத்த மாக்கலவையை போடவும்.
  • தாட்சியில்(வாணலியில்) போட்ட மாக்கலவை அடிப்பிடிக்காமல் இருக்க கரண்டியால் இடைவிடாமல் நன்றாக கிளறிக் கொண்டிருக்கவும்.
  • இக்கலவை நன்றாக உதிர்ந்து மண்ணிறமான சிறு மணிகள்போல இருக்கும்போது முட்டைமா தயாராகி விடும்.
  • முட்டைமா தயாராகிய பின்பு இந்த முட்டைமா உள்ள தாட்சியை அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கிய தாட்சியில் இருக்கும் முட்டை மாவை ஒருபாத்திரத்தில் போட்டு நன்றாக ஆறவிடவும்.
  • முட்டை மா நன்றாக ஆறிய பின்பு இதை சுத்தமான போத்தலில் போட்டு காற்று போகாதவாறு நன்றாக இறுக்கி மூடிவைக்கவும்.
  • முட்டைமா சாப்பிட தேவைப்படும் போது முட்டைமா உள்ள போத்தலை எடுத்து அதன் மூடியை திறந்து தேவையான முட்டைமாவை எடுத்து சாப்பிடலாம்.