ஜூலை 2013


குட்டிப்பிள்ளை லோகநாதன் அவர்கள் காலமானார்

vilakku_rightகுட்டிப்பிள்ளை லோகநாதன்oie_vilakku_right

வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும்

கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த

திரு.குட்டிப்பிள்ளை லோகநாதன்

27-07-2013 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ் சென்ற குட்டிப்பிள்ளை, சம்பூரணம்

தம்பதிகளின் அன்புக் கடைசி மகனும்,

நறணி பேரிசாவின் அன்புக்கணவரும்,

அப்பாத்துரை, அருட்சோதி, தர்மரெட்ணம்(வண்ணம்)

காலஞ் சென்ற தவமணிதேவி ஆகியோரின்

அன்பு சகோதரனுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார் ,உறவினர்,நண்பர்கள்

அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பூதவுடல் 31/07/2013 அன்று 10061 CHINGUACOUSY ROAD,ONTARIO,CANADA.என்னும் விலாசத்தில் 16.30 இலிருந்து 20.30 மணிவரை பார்வைக்கு வைக்கப்படும்.

01.08.2013 அன்று 10.00 இலிருந்து 12.00 மணிவரை ஈமக்கிரியைகள் செய்யப்பட்டு பின்னர் 12.15 இலிருந்து 13.00 மணிவரையிலான நேரத்தினுள் அடக்கம் செய்யப்படும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு -0091-4314050417 (இந்தியா )

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றங்களும் குறைவாக இருக்கும் என்ற பழமொழி என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.

அது நூறு சதவீதம் உண்மையும் கூட.

எதிர்பார்ப்புகள் இருக்கையில் அதற்கு எதிர்மாறாக என்ன நடந்தாலும், யார் நடந்து கொண்டாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. கசப்பையே எதிர்பார்ப்பின் பலனாக நாம் காண நேர்கிறது.

எத்தனையோ விதங்களில் நடந்ததும் மற்றவர் நடந்து கொண்டதும் சிறப்பாக இருந்தாலும் நம் எதிர்பார்ப்பிற்கு எதிர்மாறாக நடந்த சிறு சிறு விஷயங்கள் அந்த சிறப்பு அம்சங்களை ரசிக்க விடாமல் மனம் சிணுங்க வைக்கிறது.

இப்படி செய்திருக்கக்கூடது, அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று மனம் விமரிசித்துக் கொண்டே இருக்கையில் நன்றாக நடந்த மற்ற விஷயங்களை நாம் கவனிக்கவும் மறந்து விடுகிறோம். எனவே எதிர்பார்க்காமல் இருக்கும் போது நடப்பதை ஏற்றுக் கொள்வது எளிதாகிறது. அப்படி ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெறும் போது எல்லா சூழ்நிலைகளிலும் மன அமைதியுடன் இருக்கவும் செயல்படவும் முடிகிறது.

எனவே வேண்டாம் சினுங்கல்…

கூகிளின் புதிய வரைபடம் அதிகூடிய தகவல்களுடன் வந்துள்ளது. ஏற்கனவே பல உபயோகமான தகவல்களை கொண்டதாக இருந்தபோதும், மேலும் பல தகவல்களை உள்ளடக்கியதாக வந்துள்ளது.
இந்த புதிய வரைபடத்தில் இக்கட்டுரை எழுதும்வரை 742 புதிய தகவல்களையும், 32 புதிய வீதிகளையும், 64 வர்த்தக கட்டிடங்களையும் அடியேன் சேர்த்துள்ளேன். இதனைவிட நூற்றுக்கணக்கான வரைபட திருந்தங்களையும் செய்தபெருமையையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

சிவகுருமூர்த்தி சிவசுப்பிரமணியம்

சிலர் வாய்ப்புகளுக்காக ஏங்கிக்கொண்டிருப்பார்கள்.

நல்ல வாய்ப்புகளுக்காக நாமெல்லாம் எவ்வளவு காலம் காத்திருந்திருப்போம்…?

சிலவேளைகளில் சிலருக்கு வாய்ப்புகள் அருகில் வந்தாலும் அதனை அறியாமல் இருப்பார்கள். வாய்ப்புகள் அவரை தட்டி, “நான் வந்துவிட்டேன்” என்று சொன்னால்தான் உண்டு.

பொதுவாக வாய்ப்புக்களை பல திசைகளிலும் நோக்கினால் சாலச்சிறந்தது…!

வாப்புக்கள் வந்தாலும் அறியாதவர்கள்