கூகிளின் புதிய வரைபடம் அதிகூடிய தகவல்களுடன் வந்துள்ளது. ஏற்கனவே பல உபயோகமான தகவல்களை கொண்டதாக இருந்தபோதும், மேலும் பல தகவல்களை உள்ளடக்கியதாக வந்துள்ளது.
இந்த புதிய வரைபடத்தில் இக்கட்டுரை எழுதும்வரை 742 புதிய தகவல்களையும், 32 புதிய வீதிகளையும், 64 வர்த்தக கட்டிடங்களையும் அடியேன் சேர்த்துள்ளேன். இதனைவிட நூற்றுக்கணக்கான வரைபட திருந்தங்களையும் செய்தபெருமையையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.