ஆகஸ்டு 29 (August 29) கிரிகோரியன் ஆண்டின் 241ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 242ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 124 நாட்கள் உள்ளன.

 • 1708 – செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் வார்க்கப்பட்டது.
 • 1782 – திருகோணமலை கோட்டையை பிரெஞ்சுக் காரர் பிரித்தானியரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.
 • 1831 – மைக்கேல் பரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.
 • 1885 – கோட்லீப் டாயிம்லர் மோட்டார்சைக்கிளுக்கான காப்புரிமம் பெற்றார்.
 • 1898 – குட்இயர் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
 • 1907 – கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

கியூபெக் பாலம் (Quebec Bridge) (பிரெஞ்சு: Pont de Québec) கனடாவில் கியூபெக் மாநிலத்தில் சென் லோரன்ஸ் ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது கியூபெக் நகரின் மேற்கேயும் லேவி நகரிற்கும் இடையில் அமைந்துள்ளது.
இதன் மொத்த நீளம் 987 மீட்டர்களும் அகலம் 29 மீ, உயரம் 104 மீ ஆகும்.

1904ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பாலத்தின் கட்டுமனப் பணிகள் 1907 நடுப்பகுதியில் ஏறத்தாழ முடிவடையும் நிலையை எட்டியது. எனினும் ஆகஸ்ட் 29, 1907 மாலையில் இதன் தெற்குப் பகுதியும் மத்தியின் ஒரு பகுதியும் சென் லோரன்ஸ் ஆற்றில் இடிந்து வீழ்ந்தது. இவ்விபத்தில் 86 தொழிலாளர்களில் 75 பேர் உயிரிழந்தனர். ஏனையோர் படுகாயமடைந்தனர்.
இதன் பின்னர் இரண்டாம் பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பித்தன. செப்டம்பர் 11, 1916 இல் இடம்பெற்ற இன்னுமொரு விபாத்தில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

முடிவில் ஆகஸ்ட் 1919 இல் மொத்தம் $25 மில்லியன் செலவில் இப்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. டிசம்பர் 3 1919 இல் தொடருந்து சேவைக்காக இப்பாலம் திறக்கப்பட்டது.

 • 1910 – ஜப்பானியர் கொரியாவின் பெயரை சோசென் (Chōsen) என மாற்றினர்.
 • 1930 – சென் கில்டா தீவுகளின் கடைசி குடிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு ஸ்கொட்லாந்தின் ஏனைய பகுதிகளுக்குக் குடியேற்றப்பட்டார்கல்.
 • 1944 – 60,000 சிலவாக்கியர் நாசிகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
 • 1944 – அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில் அமைக்கப்பட்டது.
 • 1996 – நோர்வேயில் பயணிகள் விமானம் ஒன்று ஸ்பிட்ஸ்பேர்ஜன் என்ற தீவில் உள்ள மலையுடன் மோதியதில் 141 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2005 – அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை சூறாவளி கத்ரீனா தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டு $115 பில்லியன் சேதம் ஏற்பட்டது.

பிறப்புக்கள்

 • 1936 – ஜான் மெக்கெய்ன், அமெரிக்க அரசியல்வாதி, 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்
 • 1958 – மைக்கேல் ஜாக்சன், அமெரிக்கப் பாடகர், (இ. 2009)
 • 1959 – அகினேனி நாகார்ஜூனா, இந்திய திரைப்பட நடிகர்
 • 1977 – விஷால், இந்திய திரைப்பட நடிகர்

இறப்புகள்

 • 2008 – ஆர்வி, தமிழ் எழுத்தாளர் (பி. 1919)
 • 2009 – மாவை வரோதயன், ஈழத்து எழுத்தாளர்

சிறப்பு நாள்

 • இந்தியா – தேசிய விளையாட்டு நாள்