என்னை விட்டால் யாரும் இல்லை
கண்மணியே உன் கையணைக்க
என்னை விட்டால் யாரும் இல்லை
கண்மணியே உன் கையணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
உன்னை விட்டால் வேறொருத்தி
எண்ணமில்லை நான் காதலிக்க
முத்து முத்தாய் நீரெதற்கு
நானில்லையோ கண்ணீர் துடைப்பதற்கு

என்னை விட்டால் யாரும் இல்லை
கண்மணியே உன் கையணைக்க
ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தாற் போல்
அங்கமெலாமோர் மினு மினுப்பு
ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தாற் போல்
அங்கமெலாமோர் மினு மினுப்பு
அழகர் மலையின் சிலைகளில் ஒன்று
வந்து நின்றாற் போல் ஒரு நினைப்பு

என்னை விட்டால் யாரும் இல்லை
கண்மணியே உன் கையணைக்க

காலழகெல்லாம் காட்டிய வண்ணம்
கலையழகே நீ நடந்தாயோ
மேலழகெல்லாம் மூடியதென்ன
கண் படும் என்றே நினைத்தாயோ

என்னை விட்டால் யாரும் இல்லை
கண்மணியே உன் கையணைக்க

ராத்திரி நேரம் ரகசியக் கடிதம்
எழுதிட வேண்டும் இடையோடு
பூத்திரி குறைத்து ஏற்றிய தீபம்
பொன்னொளி சிந்தும் இரவோடு

என்னை விட்டால் யாரும் இல்லை
கண்மணியே உன் கையணைக்க