♥ஒரு நாள் மட்டும் சிரிக்க…
ஒரு நாள் மட்டும் சிரிக்க…

ஒரு நாள் மட்டும் சிரிக்கmஏன் படைத்தான் அந்த இறைவன்
என்று கேட்டது பூக்களின் இதயம், மறுனாள் அந்த செடியில்
அந்த மலர் வாடிய பொழுதில் பட்டுக் கிடந்ததே இறைவனின் மனமும்♥

♥ஒரு நாள் மட்டும் சிரிக்க ஏன் படைத்தான் அந்த இறைவன்
என்று கேட்டது பூக்களின் இதயம்♥

♥கண்பார்வை பறித்து எனை காண சொல்கிறாய்

வெண்ணீரை ஊற்றி ஏன் பூக்க சொல்கிறாய்
ஊமையாய் மாற்றியே பாடவும் கேட்கிறாய்
நான் சரியா? இல்லை தவறா?
நான் கனவு எழுதி தொலைந்து போன கதையா?♥

♥ஒரு நாள் மட்டும் சிரிக்க ஏன் படைத்தான் அந்த இறைவன்
என்று கேட்டது பூக்களின் இதயம்♥
♥ஓ.. உன் மீது சிந்தும் நீர் தீர்த்தம் ஆனதே
உனை சேரும் சாம்பல் திருநீரும் ஆகுதே
உருகியே கேட்கிறேன் அடுத்து என் பிறவியில்
மனம் இரங்கி அருள் வழங்கி
உன் கோயில் படிகளாக பிறக்கும் வரம் தா♥

♥முருகா.. என் சலனம் சலனம் தீர்க்க வேண்டும் முருகா..
இந்த ஜனனம் ஜனனம் போதும் பொதும் முருகா..
உன் சரணம் சரணம் சரணம் சரணம்
சரணம் சரணம் சரணம் சரணம் முருகா..♥

parthiban_kanavu