எமக்கெல்லாம் அரும்பு மீசை, கால்ச்சட்டை…
எதிர்பாட்டிக்கு வாரிப்பின்னிய ஜடை, தாவணி…
கார்த்திக்காக நானும், ராதாவாக அதிஸ்டம் இல்லாததுகளும்
கனவுகண்டுகொண்டு திரிந்த காலம்….
இந்தநாளில் வந்த இந்தபாடல் இரண்டு பாட்டிகளுக்கும்
இப்பவும் இருக்கும் ஆனந்தக்கும்மி….!

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே

ஓ… கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு
தேனை ஊற்று இது தீயின் ஊற்று
ஓ… கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு
தேனை ஊற்று இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே

 

ஏ வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
புல்வெளியின் மீது ஒரு பூமாலை
ஒன்றை ஒன்று சூடும் இது பொன்மேடை
கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்

ஆயிரம் தாமரை நனனன
ஆயிரம் தாமரை நனனன நனன நனன

ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ள காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே

 

Advertisements