நீ என்பதே நான் தானடி.. நான் என்பதே நாம் தானடி..

ஒரு பாதி கதவு நீயடி, மறு பாதி கதவு நானடி..
பார்த்துக் கொண்டே திறந்திருந்தோம்..
சேர்த்து வைக்கக் காத்திருந்தோம்..

ஒரு பாதி கதவு நீயடா, மறு பாதி கதவு நானடா..
தாள் திறந்தே காத்திருந்தோம்..
காற்று வீசப் பார்த்திருந்தோம்..

நீ என்பதே நான் தானடி.. நான் என்பதே நாம் தானடி..
ஒரு பாதி கதவு நீயடி, மறு பாதி கதவு நானடி….
இரவு வரும் திருட்டு பயம் கதவுகளை சேர்த்துவிடும்..
ஓ .. கதவுகளை திருடி விடும் அதிசயத்தைக் காதல் செய்யும்..
இரண்டும் கைகோர்த்து சேர்ந்தது.. இடையில் பொய் பூட்டு போனது..

வாசல் தள்ளாடுதே! திண்டாடுதே! கொண்டாடுதே!!
ஒரு பாதி கதவு நீயடி, மறு பாதி கதவு நானடி….
இடி இடித்தும், மழை அடித்தும்.. அசையாமல் நின்றிருந்தோம்..
ஓ இன்றேனோ நம் மூச்சும் மென்காற்றில் இணைந்துவிட்டோம்..

இதயம் ஒன்றாக போனதே, கதவே இல்லாமல் ஆனதே,
இனிமேல் நம் வீட்டிலே பூங்காற்று தான் தினம் வீசுமே..

Advertisements