sandakrishna

 

எம் பிள்ளைகளுக்கு கிறிஸ்மஸ் தினத்தில் பரிசுகள் வழங்குகின்றோம், பட்சணங்கள் செய்கின்றோம், வீடுகளில் அலங்கார விளக்குகள் ஏற்றுகின்றோம், கிறிஸ்மஸ் மரம் வைக்கின்றோம்… இன்னமும் சிறப்பா சொல்லவேண்டுமானால், சைவசமயத்தவர்கள் தமது பண்டிகைகளை கொண்டாடுவதைவிட இந்த கிறிஸ்மஸ் பண்டிகையைத்தான் சிறப்பாக கொண்டாடுகின்றனர்!!?!

மொத்தத்தில் நாம் எல்லாம் கிறிஸ்மஸ் கொண்டாடுகின்றோம்! எமக்கு எம்மதமும் சம்மதம் தான். நல்லவிடயம்! வாழும் சூழலுக்கு ஏற்ப நம்மை பரினாபப்படுத்திக்கொண்டோம்! தேவையானதுதான்.

அப்புறம் என்ன, நம்ம வசதிக்கேத்தமாதிரி நம்மக்கு பரிச்சையமான ஒருவரை இந்த ‘சான்டா’ கதாபாத்திரத்திற்கு ஏற்படுத்தவேண்டியதுதானே?

யாருக்கு மணிகட்டுவது?

கேட்டதும் கொடுப்பவனே…
கீதையின் நாயகனே….
மானத்தை காக்க துயில் கொடுத்தவனே…,

உனக்கு யானைமுகம் இல்லை, ஆறுமுகம் இல்லை, கழுத்தில் பாம்பு இல்லை, நெத்தியில் கண் இல்லை, பயமுறுத்தும் மீசையில்லை, உன் சாந்தமான வசீகரமான தோற்றம் மேற்கத்தய நாடுகளில் வாழும் எம் எதிர்கால சந்ததிகளுக்கு நிச்சயம் பிடிக்கும்!

நீதான் இதற்கு சரியாண தெரிவு! கிருஸ்னா, நீ கிறிஸ்மஸ் காலங்களில் எம் குழந்தைகளுக்கு பரிசு கொடுக்கும் சான்டாவாக அவதாரம் எடுத்தால், உன்னை எம் எதிர்கால சந்ததிகள் மறக்கமல் அவர்கள் மனதில் இடம் பிடிப்பாய்…! அவதாரம் எடுக்க உனக்கு நான் சொல்லியா தரவேண்டும்!? உனக்குத்தான் அது கைவந்த கலையாச்சே!

ஹரே கிருஸ்னா…. ஹரே கிருஸ்னா…

ஹரே ஹரே  கிருஸ்மஸ்

ஹரே கிருஸ்னா…. ஹரே கிருஸ்னா…

ஹரே ஹரே  கிருஸ்மஸ்

அவ்வளவுதான்

(இதைப்படித்துவிட்டு கிருஸ்னாவின் சொந்தக்காரங்க யாராவது சண்டைக்கு வரவேண்டாம்! முடிஞ்சா இதைவிட நல்ல ஐடியாபோட்டு எம் எதிர்கால சந்ததிக்கு எடுத்துச்செல்லுங்கள். தவறவிட்டீங்க….. அப்புறம் எல்லாரும் யார் கிருஸ்னா கூடவே யார் சிவன், யார் கணபதி, யார் முருகன், யார் உமாதேவி என்று உங்களைப்பார்த்து கேட்பார்கள்)

Advertisements