ஜனவரி 2 கிரிகோரியன் ஆண்டின் இரண்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 363 நாட்கள் உள்ளன.

 • 1757 – கல்கத்தாவை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது.
 • 1782 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அட்மிரல் எட்வெர்ட் ஹியூஸ் தலைமையில் இந்தியாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்டது.
 • 1893 – வட அமெரிக்காவில் தொடருந்துப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
 • 1921 – ஸ்பெயினின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்கியதில் 244 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1959 – முதலாவது செயற்கைச் செய்மதி, லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
 • 1993 – யாழ்ப்பாணம், கிளாலி நீரேரியில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
 • 2008 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

பிறப்புகள்

 • 1940 – எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன், ஏபெல் பரிசு பெற்ற கணித இயலர்.

மே 2007 இல் பேராசிரியர் ஸ்ரீனிவாச வரதன்

சதமங்கலம் ரவி ஸ்ரீனிவாஸ வரதன் (பிறப்பு: ஜனவரி 2, 1940) கணிதத்திலும் புள்ளியியலிலும் நிகழ்தகவுக் கோட்பாட்டில் தற்காலத்தில் சிறப்பு பெற்று மதிப்பு மிக்க ஏபெல் பரிசை, 2007ம் ஆண்டுக்காகப் பெற்ற, கணித இயலர். 2008 ஆம் ஆண்டில் பத்ம பூசன் விருதினையும் பெற்றார். நியூ யார்க்கிலுள்ள கொராண்ட் கணிதவியல் கழகத்தில் ஃப்ராங்க் ஜே கௌல்ட் கணிதவியற் பேராசிரியராக இருக்கிறார்.

வரதன், இந்தியாவில் சென்னையில் பிறந்தவர். 1959 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு (ஆனர்ஸ்) பட்டம் பெற்று அடுத்த ஆண்டு முதுமானி (M.A.) பட்டமும் பெற்றார். பின்னர் கொல்கத்தா இந்திய புள்ளியியல் இன்ஸ்டிட்யூட்டில், புகழ் பெற்ற புள்ளி இயலர் சி. ஆர். ராவின் தலைமையின் கீழ் ஆய்வு செய்து 1963 இல் முனைவர் பட்டம் பெற்றார். Postdoctoral Fellow ஆக, கொராண்ட் கணிதவியல் இன்ஸ்டிட்யூட்டில் 1963இலிருந்து 1966 வரையில் பணியாற்றினார். 1966இல் அங்கேயே துணைப் பேராசிரியரானார். 1968 இல் இணைப்பேராசிரியரானார். 1972 இல் முழுப்பேராசிரியராக பணியேற்றம்பெற்று, 1980 இலிருந்து 1984 வரையும் மறுபடியும் 1992 இலிருந்து 1994 வரையிலும் அக்கழகத்திற்கு இயக்குனராகப் பணியாற்றும் பேறும் பெற்றார்.

அவர் மனைவி வசுந்தரா வரதன் நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இத்தம்பதியினருக்கு அசோக் என்ற ஒரு மகன். இவருக்கு மூத்தவர், கோபால், நியூ யார்க் உலக வணிக மையத்தில் இடம்பெற்ற 9/11 தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர்.

பேராசிரியர் வரதனுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளிலும் கௌரவங்களிலும் சில பின்வருமாறு:

 1. Visiting Position at Stanford University (1976-77)
 2. Visiting Position at Mittag-Leffler Institute (1972)
 3. Visiting Position at the Institute for Advanced Study, Princeton (1991-92)
 4. Alfred P. Sloan Fellow (1970-72)
 5. Guggenheim Fellow (1984-85)
 6. அமெரிக்க கணிதக்கழகத்தின் பிர்க்காஃப் பரிசு (1994)
 7. Margaret & Herman Sokol Award of the Faculty of Arts & Sciences of New York University (1995)
 8. மேரி கியூரீ பல்கலைக்கழகம், பாரிஸ், இன் கௌரவப்பட்டம் (2003)
 9. கொல்கத்தா இந்தியன் புள்ளியியல் கழகத்தின் கௌரவப்பட்டம் (2004)
 10. சர்வ தேச கணித காங்கிரஸின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவர் (1994)

நார்வே தேசத்து அறிவியல் கழகம் 2003 இலிருந்து நார்வே நாட்டின் 19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் திகழ்ந்த ஏபெல் என்பவரின் நினைவில் ஏற்படுத்தப்பட்ட ஏபெல் பரிசை வழங்கி வருகின்றனர். இப்பரிசின் மதிப்பு இன்று $875,000 அமெரிக்க டாலர்கள்.

2007 இன் ஏபெல் பரிசு அவருக்குக்கொடுக்கப்பட்டபோது இது ‘நிகழ்தகவுக்கோட்பாட்டிற்கு அவர் செய்த அடித்தளப்பங்களிப்புகளுக்காகவும், குறிப்பாக ‘பெரிய விலக்கங்கள் கோட்பாடு’ (Theory of Large Deviations) என்ற படைப்பிற்காகவும் கொடுக்கப்பட்ட பரிசு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்

பிறப்புகள்

 • 1961 – கேணல் கிட்டு, விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினர், தளபாதி (இ. 1993)

இறப்புகள்

 • 1782 – கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் – இலங்கையின் கண்டியை ஆண்ட கடைசி அரசன்.
 • 1876 – மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (பி. 1815)
 • 1960 – தி. வை. சதாசிவ பண்டாரத்தார், தமிழக வரலாற்று அறிஞர் (பி. 1892)