ஞாயிறு, ஜனவரி 5th, 2014


OTTAWAவில் வசிக்கும் துரைரெத்தினம் நளாயினி தம்பதிகளின் புதல்வி ஆர்த்திகாவிற்கு இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்!

 arthi

ஜனவரி 5 கிரிகோரியன் ஆண்டின் 5ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 360 நாட்கள் உள்ளன.

 • 1896 – வில்ஹெம் ரொண்ட்ஜென் ஒரு வகைக் கதிர்வீச்சைக் கண்டுபிடித்ததாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது பின்னர் எக்ஸ் கதிர் எனப் பெயரிடப்பட்டது.
 • 1900 – ஐரிஷ் தலைவர் ஜோன் எட்வர்ட் ரெட்மண்ட் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராகக் குரல் எழுப்பினார்.
 • 1905 – யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான மோர்னிங் ஸ்டார் வாரப் பத்திரிகையாக பெரிய அளவில் வெளிவர ஆரம்பித்தது.
 • 1933 – கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள் சான் பிரான்சிஸ்கோவில் ஆரம்பித்தது.
 • 1940 – பண்பலை வானொலி முதற்தடவையாக காட்சிப்படுத்தப்பட்டது.
 • 1967 – இலங்கை வானொலி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
 • 1971 – உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேர்ணில் நடைபெற்றது.
 • 1972 – விண்ணோடத் திட்டத்தை முன்னெடுக்க அமெரிக்கஅதிபர் ரிச்சார்ட் நிக்சன் உத்தரவிட்டார்.
 • 2000 – இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர் குமார் பொன்னம்பலம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
 • 2005 – ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த மைக்கல் பிரவுண் தலைமையிலான வானியல் ஆராய்ச்சிக் குழுவினர் சூரியக் குடும்பத்தில் ஏரிஸ் என்ற புதிய குறுங் கோள் (dwarf planet) ஒன்றைக் கண்டுபிடித்தனர்.

பிறப்புகள்

 • 1592 – ஷாஜஹான், மொகாலயப் பேரரசர் (இ. 1666)
 • 1902 – ரா. கிருஷ்ணசாமி நாயுடு, தமிழக அரசியல்வாதி (இ. 1973)
 • 1926 – ஜே. பி. ஜெயரத்தினம், சிங்கப்பூர் அரசியல்வாதி (இ. 2008)
 • 1927 – சிவாய சுப்ரமணியசுவாமி, இந்து அமெரிக்க ஆன்மிகவாதி (இ. 2001)
 • 1928 – சுல்பிக்கார் அலி பூட்டோ, பாகிஸ்தானின் அதிபர் (இ. 1979)
 • 1937 – சித்தி அமரசிங்கம், ஈழத்துக் கலைஞர், பதிப்பாளர் (இ. 2007)
 • 1986 – தீபிகா படுகோணெ, இந்திய திரைப்பட ந‌டிகை

இறப்புகள்

 • 1933 – கால்வின் கூலிட்ஜ், ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவர் ( பி. 1872)
 • 2000 – குமார் பொன்னம்பலம், இலங்கையின் தமிழ் அரசியற் தலைவர், (பி. 1938)