பெப்ரவரி 1 (February 1) கிரிகோரியன் ஆண்டின் 32ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 333 நாட்கள் உள்ளன.

  • 1788 – ஐசாக் பிறிக்ஸ் மற்றும் வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர்.
  • 1832 – ஆசியாவின் முதலாவது அஞ்சல் (தபால்) வண்டி சேவை(mail-coach) கண்டியில் ஆரம்பமாகியது.
  • 1864 – டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது.
  • 1884 – ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் முதற் பதிப்பு வெளியானது.
  • 1893 – தொமஸ் எடிசன் தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூ ஜேர்சியில் கட்டி முடித்தார்.
  • 1913 – உலகின் மிகப்பெரிய தொடருந்து நிலையம் Grand Central Terminal நியூயோர்க் நகரில் திறக்கப்பட்டது.
  • 1918 – ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியில் இருந்து கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
  • 1924 – சோவியத் ஒன்றியத்தை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.
  • 1946 – நோர்வேயின் ட்றிகிவா லீ ஐக்கிய நாடுகள் சபையின் முதலாவது செயலாளர் நாயகமாகத் தெரிவு செய்யப்பட்டார்.
  • 1958 – எகிப்து மற்றும் சிரியா ஆகியன இணைந்து 1961 வரையில் ஐக்கிய அரபுக் குடியரசு என ஒரு நாடாக இயங்கின.
  • 1974 – பிரேசிலில் 25-மாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1979 – 15 ஆண்டுகள் நாடு கடந்த நிலையில் வாழ்ந்த ஈரானின் மதத்தலைவர் அயத்தொல்லா கொமெய்னி டெஹ்ரான் திரும்பினார்.
  • 2003 – கொலம்பியா விண்ணோடம் பூமியின் வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
  • 2004 – சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 251 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2005 – நேபாள மன்னர் ஞானேந்திரா நாடாளுமன்றத்தைக் கலைத்து நாட்டைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
  • 2005 – கனடா சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய நான்காவது நாடானது.

பிறப்புகள்

  • 1931 – போரிஸ் யெல்ட்சின், ரஷ்ய முன்னாள் அதிபர் (இ. 2007)

இறப்புகள்

  • 1999 – வானம்பாடி யோகராஜ், வில்லிசை கலைஞர், நாடக ஆசிரியர், நடிகர், மேடைப்பாடகர் (பி.1948)
  • 2003 – கல்பனா சாவ்லா, விண்வெளி வீராங்கனை (பி. 1961)

சிறப்பு நாள்

ஐக்கிய அமெரிக்கா – கறுப்பின வரலாறு மாதம் ஆரம்பம்

Advertisements