பெப்ரவரி 6 கிரிகோரியன் ஆண்டின் 37ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 328 நாட்கள் உள்ளன.

 • 1819 – ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது.
 • 1863 – சிலோன் பேட்ரியட் (The Ceylon Patriot) இதழ் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
 • 1938 – அவுஸ்திரேலியா, சிட்னியில் பொண்டாய் கடற்கரையில் எழுந்த கடல் அலைகள் 300 பேர்களைக் கொன்றது.
 • 1951 – நியூ ஜேர்சியில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 85 பேர் கொல்லப்பட்டனர். 500 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
 • 1959 – டெக்சாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜாக் கில்பி integrated circuit க்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்.
 • 1959 – கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதலாவது டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
 • 1996 – அட்லாண்டிக் பெருங்கடலில் டொமினிக்கன் குடியரசுக் கரைகளில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

 • 1911 – ரோனால்டு ரேகன், ஐக்கிய அமெரிக்காவின் 40வது குடியரசுத் தலைவர் (இ. 2004)
 • 1912 – இவா பிரான், இட்லரின் மனைவி (இ. 1945)
 • 1983 – ஶ்ரீசாந்த், இந்திய கிரிக்கெட் வீரர்

இறப்புகள்

 • 1827 – சியாமா சாஸ்திரிகள், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (பி. 1762)
 • 1931 – மோதிலால் நேரு, இந்திய அரசியற் தலைவர் பி. 1861)

மோதிலால் நேரு (6 மே 1861 – 6 பிப்ரவரி 1931) ஒரு இந்தியச் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 1919–1920 மற்றும் 1928–1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு-காந்தி குடும்பத்தின் முன்னோடியாவார். இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தையும் ஆவார்.

தனது குடும்பத்தினருடன் நடுவில் அமைர்ந்திருக்கும் மோதிலால் நேரு.

காஷ்மீர் பண்டித் குடும்பத்தில் பிறந்த மோதிலால் அக்கால ஜெய்ப்பூர் மாநிலத்தில் வசித்துவந்தார். இவரது தாத்தா லெட்சுமிநாராயண், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் முகலாயப் பேரரசு நீதிமன்றத்தில் வழக்கறிஞராயிருந்தவர். இவரது தந்தை கங்காதர் நேரு டெல்லியில் காவலராகயிருந்தவர். கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் பார் அட் லா என்ற வழக்கறிஞர் பட்டம் பெற்றார். மகாத்மா காந்தியின் ஈர்ப்பால் 1918ல் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சியில் இணைந்தார். பின்னர் சுயாட்சிக் கட்சியில் இணைந்து பிரித்தானிய அரசுக்கெதிராய் போராடினார். சைமன் குழுவிடம் பேச்சு நடத்த 1928ல் அமைக்கப்பட்ட நேரு குழுவின் தலைவராகயிருந்தவர்.

இவரது துணைவியார் பெயர் சொருப் ராணி ஆகும். 1889ல் ஜவகர்லால் நேரு என்ற ஒரு புதல்வரும், 1900ல் பிறந்த விஜயலட்சுமி பண்டிட் மற்றும் 1907ல் பிறந்த கிருஷ்ண ஹுதீசிங் என்ற இரு புதல்விகளும் இவருக்குண்டு.