நாம் நினைப்பது நடக்காமல் போய் விடுமோ என்ற அச்சம்.

அல்லது எதிர்பாராத தீமை நடந்து விடுமோ என்ற பயம்.

இந்த இரண்டு எண்ணங்களுமே, ந‌மது கடந்த கால அனுபவங்களால் ஏற்படுகிறது. ஆனால் சிலருக்கு காரணமே இல்லாமல் ஏற்படுகிறது.

பதறின பொருள் சிதறும் என்பார்கள்,

நிச்சயமாக பதட்டம் நமது செயல் திறனை உடல் செயல்பாட்டை பாதிக்கிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம். ஒரு தோல்வி, அதைத் தொடர்ந்த துயரம், மறுபடியும் தோற்போமே என்ற தயக்கம், பயம், என்ற விதையாகும்.

நேரம் நெருங்கும் போது அது பதட்டம் என்று படமெடுத்து ஆடும். அதனால் தான் இடுக்கண் வருங்கால் நகுக என்றான். துன்பம் வரும் போது துவண்டால் சுனாமியில் துரும்பு போல மூழ்கிப்போவோம்.

துணிச்சலாக விரைத்து நின்றால் நிச்சயம் வெற்றி பெறுவோம்