பெப்ரவரி 8 கிரிகோரியன் ஆண்டின் 39 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 326 (நெட்டாண்டுகளில் 327) நாட்கள் உள்ளன.

  • 1587 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தை கொலை செய்ய முயற்சித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டாள்.
  •  1924 – ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1942 – ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் நேதாஜி ஜெர்மனியை விட்டுத் தெற்காசியாவுக்குப் புறப்பட்டார்.
  • 1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
  •  1971 – நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1974 – 84 நாட்கள் விண்ணில் சஞ்சரித்த பின்னர் முதலாவது அமெரிக்க விண்வெளி ஆய்வுகூட ஸ்கைலாப் 4 வீரர்கள் பூமி திரும்பினர்.
  • 1974 – அப்பர் வோல்ட்டாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
  • 1989 – போர்த்துக்கலில் போயிங் 707 விமானம் ஒன்று சாண்டா மரியா மலையில் மோதியதில் 144 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1897 – ஜாகீர் உசேன், இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் (இ. 1969)
  • 1963 – மொகமட் அசாருதீன், இந்திய அணியின் முன்னாள் துடுப்பாளர்

இறப்புகள்

  •  1889 – சொலமன் ஜோன்பிள்ளை, எழுத்தாளர், சிலோன் பேட்ரியட் பத்திரிகையின் ஆசிரியர்
  •  1993 – நா. சண்முகதாசன், ஈழத்தமிழ்த் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (பி. 1920)
  • 2005 – அரியநாயகம் சந்திரநேரு, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், மனித உரிமை ஆர்வலர்.

சிறப்பு நாள்

  • வெசாக் தினம்/பரிநிர்வாண நாள் – புத்தர் அமரத்துவமான தினம். பௌத்த வழிபாட்டு நாள்