திங்கள், பிப்ரவரி 10th, 2014


ஆண்:
கண்மணி
அன்போடு காதலன்
நான் நான் எழுதும்
லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா
வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி

பெண்:
கண்மணி
அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே

ஆண்:
பாட்டாவே படிச்சிட்டியா?
அப்போ நானும்
ம் ………..
மொதல்ல கண்மணி சொன்னேல்ல
இங்க பொன்மணி போட்டுக்க.
பொன்மணி
உன் வீட்டுல சௌக்கியமா
நான் இங்க சௌக்கியம்

பெண்:
பொன்மணி
உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே

ஆண் :
உன்னை நெனச்சி பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா
அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த

பெண்:
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது

ஆண்:
அதான் அதான்…..

பெண்:
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

ஆண்:
அதே தான் பிரமாதம் கவிதை படி…..

பெண்:
கண்மணி
அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
பொன்மணி
உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது….
ஓஹோ…. ஓஹோ….

கண்மணி
அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
பொன்மணி
உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
ஒஹோ….ஒஹோ…

ஆண்:
ம்……
எனக்குண்டான காயம்
அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை
இதுவும் எழுதிக்கோ
நடுவுல நடுவுல மானே! தேனே! பொன் மானே!
எல்லாம் போட்டுக்க
எனக்கு என்ன காயம்னாலும்
என் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா?
தாங்காது
அபிராமி….அபிராமி… அபிராமி….

பெண்:
அதையும் எழுதணுமா?

ஆண்:
இது காதல்!
என் காதல் என்னன்னு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நான் அழுது
என் சோகம் உன்னை தாக்கிடுமோ
அப்படின்னு நினைக்கும் போது
வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா!
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனிதக் காதல் அல்ல
அதையும் தாண்டி
அதையும் தாண்டி
புனிதமானது

பெண்:
உண்டான காயம் இங்கு
தன்னாலே ஆறிப்போன
மாயமென்ன பொன் மானே… பொன் மானே….
என்ன காயம் ஆன போதும்
என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே…..
எந்தன் காதல் என்னெவென்று
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனிதக்காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது

ஆண்:
அபிராமியே….
தாலாட்டும் சாமியே….
நான் தானே தெரியுமா
சிவகாமியே…..
சிவனில் நீயும் பாதியே….
அதுவும் உனக்குப் புரியுமா

பெண்:
சுப லாலி லாலியே லாலி லாலியே…
அபிராமி லாலியே லாலி லாலியே….

பெப்ரவரி 10 கிரிகோரியன் ஆண்டின் 41 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 324 நாட்கள் உள்ளன.

1355 – இங்கிலாந்து, ஒக்ஸ்போர்டில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 63 மாணவர்களும், 30 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.
1798 – லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் ரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தான்.
1815 – கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
1846 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.
1863 – அலன்சன் கிரென் தீயணைக்கும் கருவியின் காப்புரிமம் பெற்றார்.
1870 – கிறிஸ்தவப் பெண்கள் இளையோர் அமைப்பு (YWCA) அமைக்கப்பட்டது (நியூயோர்க் நகரம்).
1914 – யாழ்ப்பாணத்தின் அரச அதிபராக சார்ள்ஸ் கம்பர்லாண்ட் நியமிக்கப்பட்டார்.
1931 – புது டில்லி இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது.
1954 – வியட்நாம் போர்: அமெரிக்க அதிபர் டுவைட் ஐசன்ஹோவர் வியட்நாம் மீது ஐக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எச்சரித்தார்.
1964 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் HMAS மெல்பேர்ன் என்ற விமானந்தாங்கிக் கப்பலும் HMAS வொயேஜர் என்ற காடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
1969 – தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.

பிறப்புகள்
1887 – ஜோன் என்டேர்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1985)
1890 – போரிஸ் பாஸ்டர்நாக், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1960)
1902 – வால்ட்டர் பிராட்டன், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1987)
1910 – ஜோர்ஜஸ் பயர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1969)

இறப்புகள்
1837 – அலெக்சான்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (பி. 1799)
1912 – ஜோசப் லிஸ்டர், பிரித்தானிய அறிவியலாளர் (பி. 1827)
1918 – ஏர்னெஸ்டோ மொனெட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலியர் (பி. 1833)
1923 – வில்ஹெம் ரொண்ட்ஜென், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (பி. 1845)