தற்போது காதலர் தினத்தை வெளிச்சம் போட்டு கொண்டாடினாலும் அன்றுதொட்டு இன்றுவரை காதல் ரகசியமானதுதான்.

காதலை வெளியில் சொல்லும் சிலர்…

காதலை வெளியில் சொல்லமுடியாமல் பலர்…

இதில் சுவாரசியம் என்னவென்றால், உலககில் உண்மையினை பேச பயப்படாதவர்கள் எல்லாம் இந்த உண்மைக்காதலை பேச பயப்படுவர்.

ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும்
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரஸ்யமானது காதல் மிக மிக சுவாரஸ்யமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்ல சொன்னாலும் சொல்வதும் இல்லை மனமானது
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிசத்தை போல அது சுதந்திரமானதும் அல்ல
ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல

(ரகசியமானது)

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டு கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத்தனே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல

(ரகசியமானது)

 முன்னர் இட்ட பதிவுகள்:

சிவன் + பார்வதி = காதலர் தினம்!

காதலர்தினத்தை நீங்கள் எப்படி…?