எனக்கு ஒரு காதலி கிடைத்து, அவளிடம் இப்படி பாடி- அல்லது எழுதி….

இப்படி கற்பனையை வளர்க்கும் பாடல்கள்.

பாடல்களுக்காகவே காதலிக்கத்தோன்றும்.  வரிக்கு வரி மனப்பாடம் செய்து வைத்த பாடல் இது.

ம்… ஆனால் அந்த வேளை ஒருத்திக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை!

ஹி…ஹி…ஹி

அழகே அழகு.. தேவதை…
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்

(அழகே அழகு.. தேவதை…)

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது

(அழகே அழகு.. தேவதை…)

பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே

(அழகே அழகு.. தேவதை…)