வியாழன், மார்ச் 20th, 2014


தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இரு பாகங்கள், மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்க சாத்தியம் உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்தார்.

மார்ச் 8-ஆம் தேதி மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.370-ஐ தேடுதல் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. விமானம் கடத்தப்பட்டது, நொறுங்கிவிட்டது என வெவ்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இன்னும் உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் , மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கிடம் விமானத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இரு பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களின் அடிப்படையில், ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்புத் துறைக்கு இத்தகவல் கிடைத்துள்ளது. படங்களை நிபுணர்களின் ஆய்வு செய்ததில், மாயமான விமானத்தின் பாகங்களாக அவை இருக்கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள ராயல் ஆஸ்திரேலியன் விமானப் படையும் அந்த கடல் பகுதிக்கு திருப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து மேலும் மூன்று விமானங்கள் அந்த இடத்திற்கு தீவிர தேடுதலில் ஈடுபடவுள்ளன” என்று டோனி கூறியதாக ஆஸ்திரேலிய நாளிதழ் தெரிவித்துள்ளது.

இரு பாகங்கள் கண்டறியப்பட்ட இடத்தைத் துல்லியமாக டோனி குறிப்பிடவில்லை.எனினும், செயற்கைக் கோள் படங்களைக் கொண்டு விமான பாகங்கள் இருக்கும் இடத்தை அடையாளம் காண்பது மிகக் கடினமான வேலை என்றும், ஒருவேளை அந்த பாகங்கள் மலேசிய விமானத்தினுடையதாக இல்லாமலும் இருக்கலாம் என்றும் அவர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

239 பயணிகளுடன் கோலாலம்பூர் விமான நிலையித்திலிருந்து மார்ச் 8-ஆம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ராடார் கண்காணிப்பிலிருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விமானம் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 2 வாரங்களாக தேடுதல் பணிகள் நடக்கிறது. இன்னும் விமானம் மாயமான மர்மம் விலகாத நிலையில் பல்வேறு நாடுகளும், பொது மக்கள் குழுக்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

சம இரவு நாள் என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை (Earth Axis) கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீஎனபது சமம் என்றும் நாக்சு என்பது இரவு என்றும் பொருள்படும்.

படிமம்:Earth-lighting-equinox EN.png

சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இவை நிகழும்.

நிலநடுக்கோட்டிற்கிணையான வட்டப்பாதையில் வலம் வரும் செயற்கைகோள்கள், இந்நாட்களில் புவிக்கு பின்புறம் வரும் நேரம் சூரியகிரகணத்தை சந்திப்பதால் அந்நேரத்தில் சேமிப்பு மின்கலங்களை பயன்படுத்தும்.

புவியின் வடக்குப்பகுதியில் இவை இளவேனில் (first day of spring) மற்றும் இளங்கூதிர் (first day of fall)  காலங்கள் துவங்கும் நாட்களாக விழங்குகின்றன.

பொதுமக்களும் இந்நாட்களை எளிதாக அறிய முடிவதால், பல பண்பாடுகளில் இந்நாட்களில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

மார்ச் 20 (March 20) கிரிகோரியன் ஆண்டின் 79ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 286 நாட்கள் உள்ளன.

 • கிமு 44 – ஜூலியஸ் சீசரின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
 • 1739 – நாதிர் ஷா டில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான்.
 • 1760 – பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது.
 • 1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி “நூறு நாட்கள்” ஆட்சியை ஆரம்பித்தான்.
 • 1861 – மேற்கு ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.
 • 1916 – அல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
 • 1942 – மேற்கு உக்ரேனில் ரொஹார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினார் கொல்லப்பட்டனர்.
 • 1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
 • 1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.
 • 1974 – லண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே ஆன் இளவரசி, அவரது கணவர் கப்டன் மார்க் பிலிப்ஸ் ஆகியோரைக் கடத்த எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
 • 2003 – ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புக்கள்

 • 1987 – கங்கனா ரனாத், திரைப்பட நடிகை

இறப்புக்கள்

 • 1993 – பொலிகிராப் கூஷ், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (பி. 1911)

சிறப்பு நாள்

 • உலக சிட்டுக்குருவிகள் தினம்

A female House Sparrow feeding a fledgling

 • உலக மகிழ்ச்சி தினம்