உலகில் உள்ள அனைவரும் இணைய சேவையினை வழங்கும் திட்டம். பலூன்கள் மூலம் இணைய வசதி ஏற்படுத்தும் இந்த முயற்சியில் கூகுள் நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது. சாதாரணமாக முகில்களும் விமானங்களும் கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ உயத்துக்குள் பயனிக்கும். இவ் பலூன்களை 20 கி.மீ உயரத்தில் பறக்கும். இதனால் விமான பயணத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இருக்காது. அதேவேளை மழை, இடி-மின்னல் போன்ற பாதிப்புகளும் இருக்காது.

கூகுள் திட்டத்திற்கு ‘புராஜெக்ட் லூன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பலூன்கள் மூலம் இணைய வசதி ஏற்படுத்தித் தர கூகுள் முயன்று வருகிறது. தரையில் 25மைல்கள் விட்டம் உள்ள இடங்களை ஒரு பலூன் மூலம் இணைய சேவையினை வழங்க முடியும். இத்திட்டத்தில் பல பலூன்கள் பூமையை சுற்றிவரும்.

இதன்மூலம் கிராமங்களில், காடுகளில், மலைகளில், கடல்களில், பாலைவனங்களில் வாழும்(!) அனைவரும் இணைய சேவையினை பெற்றுக்கொள்ளலாம்.

சுமார் 49அடி – 39அடி பருமனுள்ள பலூனின் அடிப்பாகத்தில் இவ் உபகரணம் இயங்குவதற்கு தேவையான மின்வசதிகளை பெறுவதற்கு சூரிய மின்கலன் இணைக்கப்பட்டுள்ளன. அதன் கீழ் இலத்திரனியல் உபகரனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. பகல் வேளைகளில் கிடைக்கும் சூரிய மின் சக்தியை இரவு முழுவதும் உபயோகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதே போன்று உலகத்தின் மூலை முடுக்குகளுக் கெல்லாம் ஃபேஸ்புக்கை கொண்டு செல்ல‌ அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்குக்கு நிரம்ப ஆசை போலும்.

ஆனால் துரதிருஷ்டவசமாக பல இடங்களில் இணையதள இணைப்புக் கிடைப்பதில்லை. எனவே, இணையதள வசதி இல்லாத இடங்களையும் ஆளில்லா விமானங்கள் மூலம் இணைக்க தற்போது முயற்சி எடுத்துள்ளார் ஜூகர்பெர்க்.

ஆங்கிலத்தில் ‘ட்ரோன்’ என்றழைக்கப்படும் ஆளில்லாத சிறிய ரக விமானங்கள் மூலம் அனைவருக்கும் இணைய வசதி ஏற்படுத்தித் தர ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை ஃபேஸ்புக்கின் சகோதர நிறுவனமான‌ ‘இன்டர்நெட் டாட் ஆர்க்’ எனும் அமைப்பு நாசா உட்பட ஆறு இதர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் சேர்ந்து நடைமுறையில் கொண்டு வர முயன்று வருகிறது.

இந்த ‘இன்டர்நெட் டாட் ஆர்க்’ நிறுவனத்தில் ‘கனெக்டிவிட்டி லேப்’ எனும் துறை உள்ளது. இது இத்திட்டத்தைச் செயல்படுத்த பல்வேறு வழிவகைகளை வகுத்துத் தரும்.அதில் ஒன்று சூரிய ஒளி மூலம் இயங்கும் ஆளில்லாத சிறிய ரக விமானங்கள். இதற்காக, ‘செஃபைர்’ எனும் உலகின் நீளமான, சூரிய ஒளியால் இயங்கும் ஆளில்லாத விமானத்தை வடிவமைத்த இங்கிலாந்து நாட்டின் அசென்டா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது ஃபேஸ்புக்.