மார்ச் 2014


தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் கடும் மழையுடன் கூடிய பலத்த காற்று விசி வருவதால் எம்.எச்.370 விமானத்தை தேடும் படலத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடலில் மலேசிய விமானத்தை தேடும் பணியை ஆஸ்திரேலிய கடற்படை தற்காலிகமாக கைவிட்டள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்து உள்ளது.மோசமான வானிலை மற்றும் பலத்த காற்றால் தேடலில் தொடர்ந்து இடையூறு ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் தேடுதல் குழுக்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறபட்டுள்ளது.

மீண்டும் விமான பாகங்களின் தேடலை ஆஸ்திரேலிய கடற்படை நாளை(புதன்கிழமை)தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயமான மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் மூழ்கி அதில் இருந்த 239 பேரும் பலியாகிவிட்டனர் என்று அந்த நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா கடல் நடுவில் அமைந்துள்ள கடற்பரப்பில் ஐந்து நாடுகளை சேர்ந்த விமானங்கள் தேடுதலை மேற்கொண்டது.

கடலில் மூழ்கி கிடக்கும் விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப் பட உள்ளனர். இந்த தொழில்நுட்பம் கொண்ட கருவி அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.

அந்த கருவியின் உதவியால் விமானத்தின் உடைந்த பாகங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என ‘பென்டகன்’ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் தெரியும் பட்சத்தில் அதில் இருந்து வெளிவரும் சிக்னல் உதவியுடன் கருப்பு பெட்டியை மீட்க முடியும் என்று அமெரிக்க கடற்படை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

sri

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் குமாரஸ்ரீதரன் அவர்கள் 25-03-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம் பார்வதியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற நல்லதம்பி, அல்லியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தனலக்ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

முகுந்தன், வசந்தன், பிரபு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிர்மலா, சியாமளா, மஞ்சுளா, சுசீலா, சாரதா, காலஞ்சென்ற குமாரகுருபரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சங்கீதா, நர்மதா, ஹேமமாலினி, சேதுமாதவன், லாவண்யா, வாணி, ஜலக், நிர்மலன், கதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சத்தியசீலன், சுரேந்திரன், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், சண்முகவரதன், அருணாச்சலம், பவானி, ஸ்ரீகுமரி, ரவீந்திரன், பாலேந்திரன், விஜயகுமாரி, லலிதகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரித்தானியா தொலைபேசி +442086468613
பிரித்தானியா செல்லிடப்பேசி: +447931670849

மாயமான மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் மூழ்கி அதில் இருந்த 239 பேரும் பலியாகிவிட்டனர் என்று அந்த நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைநகர் கோலாலம்பூரில் திங்கள்கிழமை இரவு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 8-ம் தேதி மாயமான எம்.எச்.370 விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கி 239 பேரும் பலியாகிவிட்டனர் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கிலாந்தின் இன்மர்சாட் செயற்கைக்கோள் நிறுவனம் அளித்த தகவலின் அடிப்படையில் வடக்கு அல்லது தெற்குப் பகுதியில் விமானம் பறந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டது. பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு மேற்கே தெற்கு இந்திய பெருங்கடலின் மையப் பகுதியில் விமானம் பறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்தப் பகுதியில் விமானம் தரையிறங்குவதற்கான வாய்ப்பே இல்லை. அங்கேயே விமானம் மூழ்கிவிட்டது. அதில் பயணம் செய்த அனைவரின் குடும்பங்களுக்கும் மலேசிய அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுகுறித்து நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை விரிவாக விளக்கம் அளிக்கப்படும். இவ்வாறு நஜீப் கூறினார்.

கடந்த 8-ம் தேதி அதிகாலை 12.41 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 227 பயணிகள், 12 ஊழியர்களுடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 1.20 மணிக்கு ரேடாரில் இருந்து மறைந்தது.

கடந்த 17 நாட்கள் நடந்த தேடுதல் பணிக்குப் பின்னர் விமானம் கடலில் மூழ்கிவிட்டதாக மலேசிய பிரதமர் அதிகாரபூர்வமாக அறிவித் துள்ளார்.

தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இரு பாகங்கள், மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்களாக இருக்க சாத்தியம் உள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்தார்.

மார்ச் 8-ஆம் தேதி மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானமான எம்.எச்.370-ஐ தேடுதல் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. விமானம் கடத்தப்பட்டது, நொறுங்கிவிட்டது என வெவ்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன. எனினும், இன்னும் உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் , மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கிடம் விமானத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இரு பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களின் அடிப்படையில், ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்புத் துறைக்கு இத்தகவல் கிடைத்துள்ளது. படங்களை நிபுணர்களின் ஆய்வு செய்ததில், மாயமான விமானத்தின் பாகங்களாக அவை இருக்கலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள ராயல் ஆஸ்திரேலியன் விமானப் படையும் அந்த கடல் பகுதிக்கு திருப்பப்பட்டுள்ளன. தொடர்ந்து மேலும் மூன்று விமானங்கள் அந்த இடத்திற்கு தீவிர தேடுதலில் ஈடுபடவுள்ளன” என்று டோனி கூறியதாக ஆஸ்திரேலிய நாளிதழ் தெரிவித்துள்ளது.

இரு பாகங்கள் கண்டறியப்பட்ட இடத்தைத் துல்லியமாக டோனி குறிப்பிடவில்லை.எனினும், செயற்கைக் கோள் படங்களைக் கொண்டு விமான பாகங்கள் இருக்கும் இடத்தை அடையாளம் காண்பது மிகக் கடினமான வேலை என்றும், ஒருவேளை அந்த பாகங்கள் மலேசிய விமானத்தினுடையதாக இல்லாமலும் இருக்கலாம் என்றும் அவர் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

239 பயணிகளுடன் கோலாலம்பூர் விமான நிலையித்திலிருந்து மார்ச் 8-ஆம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ராடார் கண்காணிப்பிலிருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விமானம் காணாமல்போனதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 2 வாரங்களாக தேடுதல் பணிகள் நடக்கிறது. இன்னும் விமானம் மாயமான மர்மம் விலகாத நிலையில் பல்வேறு நாடுகளும், பொது மக்கள் குழுக்களும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

சம இரவு நாள் என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை (Earth Axis) கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக (ஏறத்தாழ 12 மணி நேரம்) இருக்கும். இலத்தீனில் ஈக்வீநாக்சு என வழங்கப்படுகிறது. ஈக்வீஎனபது சமம் என்றும் நாக்சு என்பது இரவு என்றும் பொருள்படும்.

படிமம்:Earth-lighting-equinox EN.png

சம இரவு நாட்கள் என்று நிகழும் என்பது நிலநடுக்கோட்டிலிருந்து எத்தனை தொலைவு தள்ளி அளக்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது. சாதாரணமாக மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இவை நிகழும்.

நிலநடுக்கோட்டிற்கிணையான வட்டப்பாதையில் வலம் வரும் செயற்கைகோள்கள், இந்நாட்களில் புவிக்கு பின்புறம் வரும் நேரம் சூரியகிரகணத்தை சந்திப்பதால் அந்நேரத்தில் சேமிப்பு மின்கலங்களை பயன்படுத்தும்.

புவியின் வடக்குப்பகுதியில் இவை இளவேனில் (first day of spring) மற்றும் இளங்கூதிர் (first day of fall)  காலங்கள் துவங்கும் நாட்களாக விழங்குகின்றன.

பொதுமக்களும் இந்நாட்களை எளிதாக அறிய முடிவதால், பல பண்பாடுகளில் இந்நாட்களில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

மார்ச் 20 (March 20) கிரிகோரியன் ஆண்டின் 79ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 286 நாட்கள் உள்ளன.

 • கிமு 44 – ஜூலியஸ் சீசரின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
 • 1739 – நாதிர் ஷா டில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான்.
 • 1760 – பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது.
 • 1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசை மீண்டும் கைப்பற்றி “நூறு நாட்கள்” ஆட்சியை ஆரம்பித்தான்.
 • 1861 – மேற்கு ஆர்ஜெண்டீனாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் மெண்டோசா நகரை முற்றாக அழித்தது.
 • 1916 – அல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.
 • 1942 – மேற்கு உக்ரேனில் ரொஹார்ட்டின் நகரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 3,000 யூதர்கள் நாசி ஜேர்மனியரினார் கொல்லப்பட்டனர்.
 • 1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
 • 1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.
 • 1974 – லண்டன், பக்கிங்ஹாம் அரண்மனையின் வெளியே ஆன் இளவரசி, அவரது கணவர் கப்டன் மார்க் பிலிப்ஸ் ஆகியோரைக் கடத்த எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
 • 2003 – ஈராக்கின் விடுதலை என்ற பெயரில் அமெரிக்கக் கூட்டு படைகளால் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

பிறப்புக்கள்

 • 1987 – கங்கனா ரனாத், திரைப்பட நடிகை

இறப்புக்கள்

 • 1993 – பொலிகிராப் கூஷ், நோபல் பரிசு பெற்ற ஜெர்மனியர் (பி. 1911)

சிறப்பு நாள்

 • உலக சிட்டுக்குருவிகள் தினம்

A female House Sparrow feeding a fledgling

 • உலக மகிழ்ச்சி தினம்

மார்ச் 19 கிரிகோரியன் ஆண்டின் 78ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 287 நாட்கள் உள்ளன

 • 1915 – புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.
 • 1918 – நேர வலயங்களை ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது.
 • 1972 – இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
 • 1982 – போக்லாந்து போர்: ஆர்ஜெண்டீனியர்கள் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.
 • 1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.

பிறப்புக்கள்

 • 1984 – தனுஸ்ரீ தத்தா, இந்திய நடிகை

இறப்புக்கள்

 • 2008 – ரகுவரன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1948)

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »