செவ்வாய், ஏப்ரல் 15th, 2014


நம்மில் பலர் புதிய கைத்தொலைபேசிகள் பாவனைக்கு வரும் போது அவை தொடர்பான கவர்ச்சிகரமான விளம்பரத்தில் மயங்கி அல்லது அவற்றில் உள்ள புதிய தகவல் தொழில் நுட்ப வசதிகளுக்காக அவற்றை வாங்கும் போது ஏற்கனவே வைத்திருந்த பழைய தொலை பேசிகளை விற்றுவிடுகிறோம் அல்லது நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடுகிறோம்.

இவ்வாறு செய்யும் போது நாம் அவற்றிலுள்ள நமது தரவுகளையும் விபரங்களையும் அழித்துவிட்டு கொடுப்பதாகவும் நினைத்துக்கொள்கிறோம். அனால் நாம் நினைப்பது போல அவை அவ்வளவு சுலபத்தில் அழிந்து விடுவதில்லை என்றும் தகவல் தொழில்நுட்பத் திருடர்கள் அவற்றை திரும்ப கண்டுபிடித்து நமது விபரங்ளை திருடிவிடும் ஆபத்து உள்ளதென்றும் தகவல் தொடர்பு மற்றும் இணைய குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நாம் பாவித்த எமது பழைய கைத் தொலைபேசிகளை விற்கும் போது எமது தரவுகளையும் சேர்த்தே விற்கிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர். நண்பர்களுக்கு அன்பளிப்பாக அவற்றை கொடுப்பதற்கும் இது பொருந்தும்.

நாம் பாவித்த தொலைபேசிகளை நாமே உடைத்து அழித்துவிடுவதுதான் சிறந்த வழி என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். (அட எப்படிங்க மனசு வரும்..!?)

இது தொடர்பாக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இது தொடர்பான ஒரு ஆவணப்படத்தை பாருங்கள்….

இதுவரை கிட்டத்தட்ட 70-க்கும் அதிகமான மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த பேஸ்புக் இனி ஒரு புது மொழியில் இயங்கவுள்ளது. இது என்ன புது மொழி என்கிறீர்களா? அது மனிதர்களுக்கான மொழியல்லை பேஸ்புக்கிற்கான இயக்க மொழி – programming language இதுநாள் வரை PHP மொழியில் இயங்கி வந்த பேஸ்புக் இனி அதற்கு பதில் புதிய மொழி ஒன்றில் இயங்கவுள்ளது.

hack screen

ஹேக்கிங்கை தடுப்பதற்காக பேஸ்புக் நிறுவன பொறியாளர்கள் உருவாக்கியிருக்கும் அந்த மொழிக்கு ‘ஹேக்’ (Hack) என்றே பெயர் சூட்டிவிட்டார்கள். ஹேக் மொழி பேஸ்புக் பக்கத்தை வேகமாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் பயன்படுத்த கைகொடுக்கும்.

 

 

Photo: யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, நியூசிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை துரைசிங்கம் அவர்கள் 15-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, நியூசிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை துரைசிங்கம் அவர்கள் 15-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.