இதுவரை கிட்டத்தட்ட 70-க்கும் அதிகமான மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வந்த பேஸ்புக் இனி ஒரு புது மொழியில் இயங்கவுள்ளது. இது என்ன புது மொழி என்கிறீர்களா? அது மனிதர்களுக்கான மொழியல்லை பேஸ்புக்கிற்கான இயக்க மொழி – programming language இதுநாள் வரை PHP மொழியில் இயங்கி வந்த பேஸ்புக் இனி அதற்கு பதில் புதிய மொழி ஒன்றில் இயங்கவுள்ளது.

hack screen

ஹேக்கிங்கை தடுப்பதற்காக பேஸ்புக் நிறுவன பொறியாளர்கள் உருவாக்கியிருக்கும் அந்த மொழிக்கு ‘ஹேக்’ (Hack) என்றே பெயர் சூட்டிவிட்டார்கள். ஹேக் மொழி பேஸ்புக் பக்கத்தை வேகமாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் பயன்படுத்த கைகொடுக்கும்.