thuraisingam

அமரர் ஐயாத்துரை துரைசிங்கம்
(S.P.H.I)
தோற்றம் : 18 யூலை 1930 — மறைவு : 15 ஏப்ரல் 2014

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, நியூசிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை துரைசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னையை இழந்த துயர் ஆறவில்லை தந்தையே
அதற்குள்ளே எம்மைவிட்டு நீங்கள் சென்றதேனையா
பெற்றவர் இருக்கையிலே தெரியாது அவர் அருமை
பேதலித்து நிற்கின்றோம் பெரும் புதையல் இழந்தது போல்

அப்பா என்றழைக்க அன்பான ஒரு பார்வை
இனி எம்மைப் பார்க்காது ஏனென்று கேட்காது
நீங்கள் சென்ற இடமெங்கோ தெரியாமல் தேம்புகின்றோம்
நீங்கள் இல்லா உலகமிங்கு ஓவென்று பெருவெளி

நீங்கள் காட்டிய அன்புக்கு நிகர் உண்டோ தந்தை
நித்தமும் எம்மனதில் நீங்காத ஒளிவிளக்காய்
வாழ்க்கைப் பாதையிலே வழிநடத்தி சென்றிடுவீர்
வணங்கி நிற்கின்றோம் கண்ணீர் பூக்களுடன்

பாசமிகு அப்பாவாக எமது குடும்பத்தின் குலவிளக்காய் வாழ்ந்து எமையெல்லாம் வழிநடத்திய அன்புத் தெய்வத்தை இழந்து ஆறாத்துயரில் ஆழ்ந்திருந்த எமக்கு நாலாதிசைகளிலும் இருந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி, அனுதாபம் தெரிவித்தோருக்கும், மலர்வளயம் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும், அஞ்சல் அட்டை மூலம் தங்கள் வருத்தத்தை தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு ஆறுதல் தந்தோருக்கும், தூர தேசங்களில் இருந்தும், தாயகத்தில் இருந்தும் தொலைபேசி மூலமும் ஆறுதல் தெரிவித்தோருக்கும் மற்றும் பல உதவிகளில் எமக்கு உறுதுணையாய் நின்றோருக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஜெயக்குமார்(ஜெயக்கா), ரதி — கனடா தொலைபேசி: +14165098059
சிவஜினி, பாலச்சந்திரன்(குட்டிப்பாலி) — கனடா தொலைபேசி: +14162425148
ரஞ்சினி, ஞானம் — நியூஸ்லாந்து தொலைபேசி: +6445689760
பிறேம்குமார், மாலினி — நியூஸ்லாந்து தொலைபேசி: +6449723196
ரவீந்திரகுமார், சுபாசினி — டென்மார்க் தொலைபேசி: +4560464558
கீதாஞ்ஜினி, சுதாகர் — நியூஸ்லாந்து தொலைபேசி: +6445278545